என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்சியான 5 தேர்கள் பங்கேற்கும் தேரோட்டம் வரும் ஜூன் 6-ந் தேதி நடைபெறவுள்ளது.
    காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவ விழா கொடியேற்றம் வரும் 26-ந் தேதி நடைபெறவுள்ளது. பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்சியான 5 தேர்கள் பங்கேற்கும் தேரோட்டம் வரும் ஜூன் 6-ந் தேதி நடைபெறவுள்ளது.

    இதற்காக 5 தேர்களை அலங்கரிக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில தினங்களில் தேர்களில் பொருத்தப்பட்டுள்ள ஹைட்ராலிக் பிரேக்கை சரிபார்க்கப்பட்டு பணிகள் முடிவடையும் எனவும், அதேபோல், தேர் செல்லும் சாலைகள் சீர்படுத்தும் பணி இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்கி முடிவடையும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிருநாதன் தலைமையில், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
    திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று வெளியீடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை உள்ளது. அதில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு ஆகஸ்டு மாதத்துக்கான ஒதுக்கீடாக தரிசன டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    அதேபோல் ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான ஒதுக்கீடாக சுப்ரபாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதன சேவை டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதற்கு பக்தர்கள் 26-ந்தேதி மாலை 3 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    26-ந்தேதி மாலை 6 மணியளவில் ஆன்லைனில் குலுக்கல் நடக்கும். அதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வழங்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பக்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பக்தர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை பெறலாம்.

    மேலும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்கான கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை (உற்சவம்) டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அதற்கான முன்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 9 மணியளவில் தொடங்குகிறது என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிக்கலாம்...தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு செய்ய வேண்டிய பரிகாரமும்... தீரும் பிரச்சனைகளும்...
    திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு அடுத்தபடியாக கொங்கு மண்டலத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் ஆலயங்களில் பிரசித்திபெற்ற கரூர் மாரியம்மன் ஆலயமும் ஒன்று.
    கரூரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். சக்திவாய்ந்த அம்மன் என்றும் கேட்ட வரம் தரும் மாரியம்மன் என்றும் பக்தர்களால் நம்பிக்கையுடன் வழிபட்டு வரப்படுகிறது.

    கரூர் மாரியம்மன் நான்கு கரங்களுடன் கிழக்கு முகமாக சற்றே ஈசான்யதிசை பார்வையுடன் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றாள். மேலும் மதங்களுக்கு அப்பாற்பட்டு மத நல்லிணக்கம் பேணும் புண்ணிய தலமாக இக்கோவில் விளங்குகிறது. சுமார்100 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்கள் தான்தோன்றி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்துவந்து இந்த கோயிலை அமைத்துள்ளனர். கோவிலில் பரம்பரை அறங்காவலராக முத்துக்குமார் உள்ளார். இவரது முன்னோர்கள் இந்த கோயிலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

    திருச்சி சமயபுரம் மாரியம்மனுக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய தலமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 22 நாட்கள் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இத்திருவிழாவில் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து கண்ணடக்கம், பூ மிதித்தல், அக்னிசட்டி எடுத்தல், அங்க பிரதட்சணம், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு வழிபாடு, உருவார பொம்மை, அலகு குத்துதல், போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி மாரியம்மனின் அருளை பெறுகின்றனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திருவிழா அன்று பந்தல் அமைப்பதை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே முகமது என்ற முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர் முன் நின்று நடத்தி வைத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

     இன்றும் அவை தலைமுறை, தலைமுறையாக தற்போதும் தொடர்ச்சியாக நிறைவேற்றி வருவது தனி சிறப்பு. மேலும் அம்மன் வழிபாட்டில் சில பூஜைகளை ஏற்பாடு செய்வதும் அம்மன் கோவில் மதிய பூஜை தீர்த்தத்தை வாங்கி அம்மை நோய் தாக்கியவர்களுக்கு கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் நம்பிக்கையோடு கொடுத்து வழிபடுவதும் கோவிலில் தினமும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். எனவே மத நல்லிணக்கம் பேணும் புண்ணிய தலமாக கரூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது. கோவில் திருவிழா அன்று கம்பம் ஆற்றில் விடுவது வெகு விமரிசையாக நடைபெறும். கம்பம் விடும் நாளன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் உடன் கம்பத்திற்கு தயிர் சாதம் படைத்து வழிபாடு நடைபெறும்.

    பின்னர் மாரியம்மனுக்கும் கம்பத்திற்கும் மாலை அணிவித்து சிறப்பு வழிபாடுகளுடன் கம்பம் கோவிலில் இருந்து ஊர்வலமாக ஆற்றுக்கு எடுத்து செல்லப்படும். அப்போது கம்பத்திற்கு காவலாக மாவடி ராமசாமி அம்சமாக அரிவாள் எடுத்து செல்லப்படும். இவ்வாறு ஆற்றுக்கு அனுப்பும் கம்பத்திற்கு சில வரலாறுகள் உண்டு. மஞ்சள் நீர் கம்பம் என்பது கடவுளை குறிக்கும். கடவுளின் பிரதிபலிப்பே கம்பம் எனப்படுகிறது. சிவசக்தி, விஷ்ணு சக்தி, பிரம்ம சக்தி ஆகிய மூன்று சக்திகளின் வடிவமாகவே கம்பம் உள்ளது.

    ஆணவம், கண்மம், மாயை என்ற மூன்றையும் நீக்கக் கூடிய சக்தியாகவே கம்பம் விளங்குகிறது. இறைவன் ஏகன் அநேகன் என்பதை வலியுறுத்துவது கம்பம். மூன்று பாகங்கள் இணைந்து ஒரே பாகமாக கம்பம் அமைந்திருக்கும். வழிபாடுகளில் உருவ வழிபாடு, உருவமில்லா வழிபாடு, ஜோதி வழிபாடு என்று பல வகைகள் உண்டு. அதில் மஞ்சள் நீர் கம்பம் வழிபாடு என்பது அனைத்திற்கும் பொதுவானது என்கின்றனர் ஆன்மிக பெரியோர்கள். கரூருக்கு மழை வளம் தரும் தெய்வமாக கரூர் “மாரி”யம்மன் விளங்குகிறாள். ஓவ்வொரு ஆண்டும். கோடை காலத்தில் கம்பம் திருவிழா அன்று கம்பம் சாற்றுதலில் துவங்கி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு வரை அடிக்கடி கண்டிப்பாக மழை பெய்து விடுகிறது.

    கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் திருநீறு மருத்துவ குணம் நிறைந்தது. வெண்டா மண் என்று அழைக்கப்படும் இந்த திருநீற்றை பக்தர்கள் நெற்றியில் பூசிக் கொள்வதன் மூலம் தலைவலி, தலையில் நீர் கோர்த்தல், கண் சம்பந்தமான நோய்கள், தோல் நோய் போன்ற நோய்கள் தீர்ந்து விடுகிறது. இத்தகைய ஒரு அரிய வகை மண், தெய்வீக சக்தி கொண்டதும், பல மருத்துவ குணங்கள் அடங்கியும் உள்ளது.

    அம்மனுக்கு மாவிளக்குக் காரி என்ற பெயரும் உண்டு. அவள் திருவிளையாடலில் கண் வலி, பிடரி வலி, வயிற்று வலி, தலைவலி என இன்னல் படுவோர் மா விளக்கு எடுத்து நெய் விளக்கேற்றி கோயிலின் முன் தன் நேர்த்திக்கடனை செலுத்தினால் பிணியெல்லாம் பனி போல் விலகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
    துன்பம், துயரம், கஷ்டம், இன்னல், இடர் ஏற்படுவதா, ஏற்படுத்திக் கொள்வதா, இதைக் கேள்வியாக முன் வைத்தால் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வது என்பது தான் சரியாகும். அதற்குத் தீர்வு காண அம்மன் சன்னதி, மனதிற்கு நிம்மதி தரும் அந்த சன்னதிக்கு நாமே நம் மனக்கட்டுப்பாடோடு சில நியதிகளை வகுத்துக் கொண்டு நேர்த்திக் கடன்களாய் செய்வதுதான்;

    சிறு குழந்தை முதல் பெரியவர் வரை கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, மொட்டை அடித்து தவமிருந்து பெற்ற குழந்தையை கரும்புத் தொட்டிலிட்டு, அக்னியாய் செங்கதிராய் எழும் தீச்சுடர் சட்டியை கரங்களில் ஆற்றிலிருந்து எடுத்து வழிநெடுக ஊற்றப்படும் எண்ணெய் வேகத்திலும் பைய நடை பயின்று ஆலயம் சேர்க்கும் அழகு தனியழகு. உள்ளம் வருத்தி உயிர் மெய் உருக்கி மேனியெல்லாம் அலகு, நாக்கில் அலகு, இடுப்பில் பெரிய அலகு, முதுகுதண்டில் அலகு குத்தி ஏற்ற வண்டியின் மேல் நிறுத்தி பறக்கும் காவடி, பறவைக் காவடி இப்படி எண்ணற்ற காவடிகளை எண்ணமெல்லாம் நிறைந்த தாய்க்கு தன் நேர்த்திக் கடனாய் செலுத்துவதும் முக்கிய நிகழ்ச்சியாகும்.

    3 ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டிய கரூர் மாரியம்மன் திருவிழா

    திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு அடுத்தபடியாக கொங்கு மண்டலத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் ஆலயங்களில் பிரசித்திபெற்ற கரூர் மாரியம்மன் ஆலயமும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் கரூர் மாரியம்மன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனாவால் 3 ஆண்டுகளாக இத்திருவிழா தடைபட்டது.

    இந்த ஆண்டு வைகாசி திருவிழாவின் முதல் நிகழ்வாக கம்பம் நடும் நிகழ்ச்சி கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. கம்பம் நடுதல் என்பது கோயில் அறங்காவலர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கனவில் அம்மன் தோன்றி கம்பம் இருக்கும் இடத்தை கூறுவதாக ஐதீகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து 15 நாள்களுக்கு அதிகாலை தொடங்கி இரவு வரை கம்பத்திற்கு காவிரி தீர்த்தம் செலுத்தும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்ய கூட்டம் தினந்தோறும் அலைமோதும்.

    தொடர்ந்து 13-ந் தேதி வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழாவில் அலங்கரிக்கப்பட்ட பூ அலங்காரத்தில் பகுதிவாரியாக மாரியம்மன் ஆலயத்திற்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 23ஆம் தேதி திருத்தேர், மாவிலக்கு, அக்னி சட்டி, அலகு காவடி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்கள் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    இறுதி நிகழ்ச்சியாக வரும் மே 25-ந்தேதி புதன்கிழமை கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளக்கூடிய பிரமாண்ட நிகழ்ச்சியாக கரூர் மாரியம்மன் திருவிழா நிறைவுபெறுகிறது. கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை ஒட்டி விழாக்குழுவினர் மற்றும் காவல் துறை உள்ளிட்ட இந்து அறநிலையத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் விழாவுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    பிரார்த்தனை தலம்

    கரூரில் கருணை வடிவாய் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் மாரியம்மன் நான்கு கரங்களுடன், கிழக்கு முகமாக சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த நிலையில் இருக்கிறாள். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை வேரறுத்து இன்மையிலும், நன்மையுடன் வாழ வைக்கும் பிரார்த்தனை தலமாக இந்த கரூர் மாரியம்மன் கோவில் உள்ளது. வழிப் போக்கர், வாசலில் நின்று வணங்கி செல்லும் பக்தர்க ளின் குறைகளை கூட தன தாக்கிக்கொண்டு அவர்கள் வாழ்வின் தடைகளை போக்கி மகிழ்ச்சி பெருக்குடன் வாழ்வை தொடர வைக்கும் தெய்வமாக திகழ்ந்து வருகிறாள்.

    அக்னி சட்டியும், அலகு குத்துதலும் நேர்த்திக்கடன்

    ஆன்மீகமாக இருந்தாலும், அறிவு சார்ந்த நிகழ்வாக இருந்தாலும் எதையுமே கூலி இல்லாமல் அரிதாக வாங்கி விட முடியாது. அதன் பலனை அனுபவித்ததற்கான கூலியை அளித்தே ஆகவேண்டும். அறிவுசார் நிகழ்வுக்கு அதிக மாகவும், அம்மனுக்கு தன்னால் இயன்றதையும் செய்வது சாலச்சிறந்தது. அந்த வகையில் கண்ணீருடன் மருகி நிற்கும் பக்தர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைக்கும் கரூர் மாரியம்மனுக்கு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக அக்னி சட்டி ஏந்துதல், அலகு குத்துதல், காவடி எடுத்தல், பால் குடம், மாவிளக்கு வைத்தல், பொங்கல் வைத்தல் ஆகியவற்றை செவ்வனே நிறைவேற்றி வைக்கிறார்கள். இவை தவிர நீர்மோர், பானகம், வடை பருப்பு வைத்து பிரார்த்தனை நடத்தலாம். பால் அபிசே கம் செய்யலாம். திருவிளக்கு பூஜை நடத்தலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம்.

    வீடுகளில் மஞ்சள் நீருடன், தயிர் சாதம் படைத்து வழிபட்ட பக்தர்கள்

    கரூர் நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், சித்திரை மாதம் இறுதியில் திருவிழா தொடங்கி வைகாசி மாதத்தில் பெருவிழா நடப்பது வழக்கம். அதில், கம்பம் நடுதல், பூத்தட்டு, கம்பம் ஆற்றில் விடுதல் போன்ற நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடக்கும். அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் கோவிலுக்குள் பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கோவிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அம்மனை தரிசிக்க வரவேண்டாம்.

    தங்கள் வீடுகளில் மஞ்சள் நீர் வைத்து கும்பத்தில் வேப் பிலை, இளநீர், மாவிளக்கு, தேங்காய், பழவகைகளை வைத்து வழிபாடு செய்து, தயிர் சாதம் படையலுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் மக்கள் மஞ்சள் நீர் வைத்து, கும்பத்தில் வேப்பிலை, இளநீர், மாவிளக்கு, தேங்காய், பழவகைகளை வைத்து, தயிர் சாதம் படையலுடன் வழிபாடு செய்தனர்.

    பக்தர்கள் மனதில் ஆறாத வடுவாக இந்த திருவிழா ரத்து இருந்தபோதிலும் நோயற்ற வாழ்வை கரூர் மாரியம்மன் நமக்கு அருளுவார் என்ற நம்பிக்கையுடன் அம்மனை மனதார வழிபட்டு வருகிறார்கள்.

    கரூர் மாரியம்மனுக்கு அக்னி சட்டி எடுத்த கே.பி.சுந்தராம்பாள்

    மாரி என்றால் மழை என்பது பொருள். மாரியம்மன் என்றால் அருள்மழை பொழியும் தெய்வம் என்பது தெளிவு. எல்லை தெய்வமாய் மக்களை காக்கும் அன்னையாய் கருணையே வடிவான தாயாய், கற்பக விருட்சமாய் மாரி விளங்குவதற்கு ஆண்டு தோறும் கரூர் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையே சாட்சி.

    எத்தனையோ பேர் வாழ்வில் எத்தனை, எத்தனையோ அற்புதங்கள் நிகழ்ந்திருந்தாலும் காலப்போக்கில் அவை வெளியுலகிற்கு தெரியாததே அதிகம் எனலாம். முக்கிய பிரமுகர்கள் பலரும் அன்னையின் அருள் மழையில் நனைந்து உள்ளனர் என்பதற்கு பலரது மாட்சியும், சாட்சியும் இன்றளவும் ஒளியாய் திகழ்கிறது.

    அந்த வகையில் வெள்ளித்திரையில் வெண்கலக் குரலுக்கு சொந்தக்காரியான கொடுமுடி கோகிலம் என்ற கே.பி.சுந்தராம்பாள் வெண்கல அக்னி சட்டியேந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பெருமை பெற்றது இந்த கரூர் மாரியம்மன் கோவில்.

    இன்னல் நீங்க வேண்டி எத்தனையோ ஆயிரம் பேர் அக்னிசட்டி ஏந்தி வருகிறார்கள். எத்தகையோ பக்தர்கள் 10, 12 அடி நீளமுள்ள அலகு குத்தி வருகிறார்கள். சில பக்தர்கள் பறக்கும் காவடி பாடைக்காவடி, விமான காவடி எடுத்துஅங்கப் பிரதட் சணம் செய்து கொஞ்சும் மழலைவேண்டி வணங்கி, பின்னர்மாரி அருளால் வந்த குழந்தைகளை கரும்பில் தொட்டில் கட்டி தூக்கி வருவதே பேரழகு தான்.

    சிலர் கரும்புள்ளி, செம் புள்ளி குத்தி குழந்தை வரம் வேண்டுதல், முடிக்காணிக்கை செலுத்துவது, பல்லாயிரம் மாவிளக்கு வைத்தல் என எத்தனை வழிபாடு. அம்மாவாம் கருவூர் மாரிகுழந்தைகளின் உடம்பிலே விளையாட்டாய், விளையாட்டு அம்மையாய் விளையாடும் அழகு தான் எத்தனை. அழகு செதுக்கிய முத்துக்களாய் கோர்த்த மாலையாய் அவர் பார்க்கும் அழகும் வேப்பிலையும், அபிஷேக தீர்த் தமும் வந்த வேகத்தில் வடியும் அழகும் அம்மையின் திருவிளையாடல் அல்லவா! லட்சோப லட்சம் மக்கள் ஆம் பிராவதி எனும் அமராவதி ஆற்றின் கரையில் கூடி வழிபடும் இப்பெருவிழாவை காணாதவர்கள் கண்டு களிக் கவும் அம்மனை தரிசிக்கவும் அழைக்கிறார்கள் அம்மனின் தீவிர பக்தர்கள்.
    கோயம்புத்தூரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாக இருந்து வருகிறது.
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்டம், பூண்டி தாலுகா, வெள்ளியங்கிரி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் மலைப்பாதை அமைக்கும் பணிக்கான சாத்தியக்கூறுகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். உடன் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோயம்புத்தூரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாக இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் 'வெள்ளியங்கிரி' என்ற பெயர் பெற்றது. இம்மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த இடம், இமயமலையில் உள்ள கைலாய மலைக்கு இணையாக போற்றப்படுகிறது.

    கைலாய மலையப் போல வெள்ளியங்கிரி மலையிலும் சிவபெருமான் வீற்றிருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். மலையின் உச்சிப்பகுதியில் உள்ள ஒரு குகைக்குள் சுயம்பு லிங்கமாக காட்சித் தருகிறார் வெள்ளியங்கிரி ஆண்டவர். இந்த மலையில் மொத்தம் 7 குன்றுகள் உள்ளன. கடுமையான இந்த மலைப்பாதைகளை கடந்து தான் வெள்ளியங்கிரி ஆண்டவரை பக்தர்கள் தரிசிக்க முடியும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இந்தியா முழுவதும் உள்ள சிவனடியார்கள், பக்தர்கள் பல்வேறு கால கட்டங்களில் தரிசனம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் கூட்டம் அதிமாக வருவதால் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் மலைப்பாதை அமைக்க வழியுறுத்தி உள்ளார்கள். அந்த அறிவிப்பன்படி மலைப்பாதை அமைப்பதற்கு விரைவில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு மலைப்பாதை அமைக்கும் பணிக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ரூ1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறினார்.
    தேய்பிறை அஷ்டமியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை செய்து பைரவரை வழிபட்டால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.
    தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

    இழந்த பொருட்களை மீண்டும் பெற:- பைரவரின் சன்னதி முன்னால் 27 மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.

    குழந்தைச் செல்வம் பெற:- திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.

    சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க:- சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.

    தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்:- ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும்.

    6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கைகூடும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்த ஆண்டிற்கான விசாகத் திருவிழா வருகிற ஜூன் மாதம் 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தொடங்குகிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் விசாக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விசாகத் திருவிழா வருகிற ஜூன் மாதம் 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று வசந்த உற்சவம் தொடங்குகிறது. அன்று உற்சவருக்கும், சண்முகப் பெருமான் வள்ளி தெய்வானைக்கு மாககாப்பு கட்டுதல் நடக்கிறது.

    இதையடுத்து கோவிலுக்குள் வசந்த மண்டபத்தில் 9 நாட்கள் தினமும் இரவு 7 மணிஅளவில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளுதல் நடக்கிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) விசாக விழா கோலாகலமாக நடக்கிறது. இதனையொட்டி விசாக கொறடு மண்டபத்தில் வள்ளி தெய்வானையுடன் சண்முகப்பெருமாள் எழுந்தருளுவார். திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

    விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளக்கூடிய சண்முகப் பெருமானுக்கு காலையில் இருந்து மாலைவரை இடைவிடாது குடம் குடமாக பால் அபிஷேகம் நடைபெறும். விசாக திருவிழாவையொட்டி துணை கமிஷனர் சுரேஷ் மேற்பார் வையில் கோவிலுக்குள் உள்ள கொறடு மண்டபம் மற்றும் வசந்த மண்டபம் சுத்தப்படுத்தப்பட்டு மெருகு ஏற்றி தயார்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
    என் நாவில் நீ தங்கி குடியிருந்து சொற்பிழை பொருட்பிழை நீக்கி நல்லறிவும் நல்வாழ்வும் நீ தந்து தஞ்சமென்ற பிள்ளைகளுக்கு சாஸ்வதமான சரஸ்வதி தாயே உன் திருவடி சரணம் போற்றி... போற்றியே .....
    சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபிணி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா...
    ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
    ஏய உணர்விக்கும் என் அம்மை -தூய
    உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
    இருப்பளிங்கு வாராது இடர்.

    ஓம் கலைவாணியே போற்றி
    ஓம் கல்வியறிவு தருபவளே போற்றி
    ஓம் நான்முகனின் நாயகியே போற்றி
    ஓம் நான்முகனின் நாநுனியில் வசிப்பவளே போற்றி
    ஓம் சகல கலா வல்லித்தாயே போற்றி
    ஓம் ஏகவல்லி நாயகியே போற்றி
    ஓம் பிரம்மதேவரின் பத்தினியே போற்றி
    ஓம் பரசுராமரைப் பெற்றவளே போற்றி
    ஓம் கல்வியறிவிற்கு அதிபதியே போற்றி
    ஓம் மஹா மாயா சக்தியும் நீயே போற்றி
    ஓம் தாமரை மலரில் வாசம் செய்பவளே போற்றி
    ஓம் கேட்கும் வரமனைத்தும் தருபவளே போற்றி
    ஓம் ஞானமுத்திரை தருபவளே போற்றி
    ஓம் புத்தகம் கரத்தில் கொண்டவளே போற்றி
    ஓம் மஹா வித்தை நீயே தாயே போற்றி
    ஓம் மஹா பாதகங்களை துவம்சம் செய்பவளே போற்றி
    ஓம் அனைத்து யோகங்களையும் தருபவளே போற்றி
    ஓம் மஹாகாளி மஹாதுர்கா மஹாலஷ்மி நீயே போற்றி
    ஓம் உயரிய கல்வியை கேட்டபடி தருபவளே போற்றி
    ஓம் கற்றதற்கு ஏற்ற உயர்வாழ்வை வரமாய்த் தருபவளே போற்றி
    ஓம் சர்வ மந்த்ரங்களின் மூலாதாரப் பொருள் நீயே போற்றி
    ஓம் சர்வ மங்கள மந்திரங்கள் சித்தி யளிப்பவளே போற்றி
    ஓம் சர்வ மங்கள மாங்கல்ய பலம் தருபவளே போற்றி
    ஓம் சர்வ சாஸ்த்திரங்களின் உற்பத்தி ஸ்தலம் நீயே போற்றி
    ஓம் கற்றோரை சென்ற இடமெல்லாம் சிறப்பிக்கும் தாயே போற்றி
    ஓம் நல்லவர் நாவில் இருந்து நல்வாக்கு சொல்பவளே போற்றி
    ஓம் அற்புத மந்திரம் எழுதும் வாணியே போற்றி
    ஓம் அழகுவீணை இசைப்பவளே போற்றி
    ஓம் கலைகள் மூன்றிற்கும் மூலாதாரச் சுடரே போற்றி
    ஓம் கல்வியை உனது ரூபமாகக் கொண்டவளே போற்றி
    ஓம் யந்திர தந்திர மந்த்ரம் கற்றுத் தருபவளே போற்றி
    ஓம் தொழிற் கல்வி அனைத்தும் தருபவளே போற்றி
    ஓம் அனைத்து வாகனங்களின் சூட்சுமம் நீயே போற்றி
    ஓம் கணிதம் தந்த கலைவாணித் தாயே போற்றி
    ஓம் கணிப்பொறி யியலின் காரணி போற்றி
    ஓம் காலம் நேரம் வகுத்தவளே போற்றி
    ஓம் விஞ்ஞானத்தின் மூலாதாரமே போற்றி
    ஓம் அண்ட சராசரங்களின் இருப்பிடம் கணித்த தாயே போற்றி
    ஓம் வான சாஸ்திர அறிவின் பிறப்பிடம் நீயே போற்றி
    ஓம் வறுமையை போக்கும் கல்வித் தாயே போற்றி
    ஓம் இயல் இசை நாடகம் போதித்த கலைமகளே போற்றி
    ஓம் வீணை யொலியில் மந்த்ரம் மீட்டும் தாயே போற்றி
    ஓம் மூவுலகும் மயங்கும் வீணை மீட்டும் வீணா கான வாணி போற்றி
    ஓம் முத்தமிழும் தழைக்கச் செய்த அன்னையே போற்றி
    ஓம் வாக்கிற்கு அதிதேவதை நீயே தாயே போற்றி
    ஓம் சௌபாக்ய செல்வம் தரும் மந்த்ரம் நீயே போற்றி
    ஓம் வாழ்வைப் புனிதமாக்கும் மந்திரமே போற்றி
    ஓம் கலைவாணித் தாயே சரஸ்வதியே போற்றி
    ஓம் ரக்தபீஜ சம்ஹார மந்த்ரம் தந்த வாணீ போற்றி
    ஓம் அம்பிகை சாமுண்டி வராஹி யாவரும் நீயே போற்றி
    ஓம் முக்காலங்களிலும் முகிழ்ந்து உறைந்தவளே போற்றி
    ஓம் சுபாஷிணி சுபத்ரை விஷாலாட்சி மூவரும் நீயே போற்றி
    ஓம் பிரஹ்மி வைஷ்ணவி சண்டி சாமுண்டி நீயே போற்றி
    ஓம் பாரதி கோமதி நாயகி நாண்முகி தாயே போற்றி
    ஓம் மகாலஷ்மி மஹாசரஸ்வதி மகாதுர்கா நீயே போற்றி
    ஓம் விமலா மாகாளி மாலினி யாவரும் நீயே போற்றி
    ஓம் விந்திய விலாசினி வித்யா ரூபினி போற்றி
    ஓம் மஹா சக்தியினுள்ளே உறைபவள் போற்றி
    ஓம் சர்வ தேவியருள்ளும் உறைபவள் நீயே போற்றி
    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் கல்வியினால் அருள்பவளே போற்றி
    ஓம் திருமால் உந்தியில் உதித்தவனின் துணைவி போற்றி
    ஓம் உலகின் எல்லா எழுத்திற்கும் மூலமே போற்றி
    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் மந்திர எழுத்துகளின் ரூபமே போற்றி
    ஓம் மந்திர ராஜ்யத்தின் தேவி பீஜாட்ஸரி போற்றி
    ஓம் சர்வாம்பிகையே சத்தியவாசினி புத்தகவாசினியே போற்றி
    ஓம் சர்வ அபாயங்களையும் துவம்சிப்பவளே போற்றி
    ஓம் சாற்றுக் கவி நாநுனி யுரையும் அன்னையே போற்றி
    ஓம் காற்றில் கலந்த மந்திர ஒலியே போற்றி
    ஓம் வித்யா திருஷ்டா யுத்மா போற்றி
    ஓம் வாக்கின் தலைவியான வாக்தேவி போற்றி
    ஓம் விஞ்சு பகவதி உயர்புகழ் பிராம்ஹி போற்றி
    ஓம் சொல்லும் சொல்லின் மெய்ஞானப் பொருளே போற்றி
    ஓம் நீதித்துறை நடுநின்ற நாயகி போற்றி
    ஓம் பண் பரதம் கல்வி தருபவளே போற்றி
    ஓம் கற்றவர் நாவில் உறைபவளே போற்றி
    ஓம் யந்திர வாகன ஆயுதங்களின் அதிதேவதையே போற்றி
    ஓம் தேகத்தின் புத்திப் பகுதியில் உறைபவளே போற்றி
    ஓம் வேத தர்ம நீதி சாஸ்திரங்கள் வகுத்தவளே போற்றி
    ஓம் பூஜிப்போர் மனம் மகிழ்விப்பவளே போற்றி
    ஓம் அனைத்து புண்ய தீர்த்தங்களின் ரூபத்தவளே போற்றி
    ஓம் யமுனை நதி தீரத்தின் மையங் கொண்டவளே போற்றி
    ஓம் சர்வ ஜீவ காருண்ய மனம் கொண்ட மாதரசி போற்றி
    ஓம் பிரம்மா லோகத்தை மையம் கொண்ட பிரம்ம நாயகி போற்றி
    ஓம் உச்ச நிலை வறுமையையும் கற்ற வித்தை கொண்டு அழிப்பவளே போற்றி
    ஓம் சரணடைந்தவர்க்கு சாஸ்வத மானவளே போற்றி
    ஓம் வேதாந்த ஞானிகளின் ரூபத்தவளே போற்றி
    ஓம் எழு தாமரை யுறை புகழ் முன்றக் கரவுருள் போற்றி
    ஓம் பின்னமேதுமில்லாமல் தேவையானதை தருபவளே போற்றி
    ஓம் இடது ஒரு கையில் சுவடி கொண்டவளே போற்றி
    ஓம் இடது மறு கையில் ஞானாமிர்த கலசம் கொண்டவளே போற்றி
    ஓம் வலது ஒரு கையில் சின் முத்ரா கொண்டவளே போற்றி
    ஓம் வலது மறு கையில் சிருஷ்டியின் அட்சரமாலை கொண்டவளே போற்றி
    ஓம் பத்மாசனம் உறைபவளே போற்றி
    ஓம் புத்திப் பிரகாசம் தருபவளே போற்றி
    ஓம் வாக்கு வன்மை தருபவளே போற்றி
    ஓம் மனதில் தூய்மை சாந்தி அமைதி தருபவளே போற்றி
    ஓம் தத்துவ எழுத்து ரூபம் தாங்கிய தேவி போற்றி
    ஓம் மஹா நைவேத்யம் உவந்தவள் போற்றி
    ஓம் கற்பூர நீராஜனம் உவந்தவள் போற்றி
    ஓம் ஸ்வர்ண புஷ்பம் உவந்தவளே போற்றி
    ஓம் யுக தர்மம் கணித்தவளே சகலகலாவல்லியே போற்றி
    ஓம் ஸ்ரீசக்கர பூஜையின் மந்திர ரூபிணியே போற்றி
    ஓம் பதாம் புயத்தவளே சகலகலாவல்லியே போற்றி
    ஓம் கற்றறிஞர் கவிமழை தரும் கலாப மயிலே போற்றி
    ஓம் கண்ணும் கருத்தும் நிறை சகலாகலாவல்லியே போற்றி
    ஓம் வெள்ளோதிமைப் பேடே சகலகலாவல்லியே போற்றி
    ஓம் கண்கண்ட தெய்வமே சகலகாவல்லியே போற்றி
    ஓம் கல்விச் செல்வம் தந்தருள்வாய் கலைவாணியே
    போற்றி ... போற்றி ... போற்றி ... போற்றியே ....

    வாணி சரஸ்வதி என் வாக்கில் நீ குடியிருந்து  
    தாயே சரஸ்வதியே சங்கரி நீ என் முன் நடந்து
    என் நாவில் குடியிருந்து நல்லோசை தந்துவிட்டு
    கமலாசனத்தாலே எமைக் காத்து
    என் குரலில் நீயிருந்து கொஞ்சிடனும் பெற்றவளே ...

    என் நாவில் நீ தங்கி குடியிருந்து
    சொற்பிழை பொருட்பிழை நீக்கி
    நல்லறிவும் நல்வாழ்வும் நீ தந்து
    மங்கல வாழ்விற்கு வழி வகுத்து
    தஞ்சமென்ற பிள்ளைகளுக்கு
    சாஸ்வதமான சரஸ்வதி தாயே
    உன் திருவடி சரணம் போற்றி...
    உன் மலரடி சரணம் போற்றி ...போற்றியே .....
    வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இசை கச்சேரியுடன் தண்ணீர் மிதந்து வரும் அழுகுமிகு காட்சி காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் 4 கரைகளிலும் திரண்டனர்.
    திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா கடந்த 20-ந் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று, தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் பார்வதி-கல்யாணசுந்தரர் எழுந்தருளினர்.

    பின்னர் இரவு 8.15 மணிக்கு குளத்தின் கீழ் கரை பகுதியில் தெப்பம் புறபட்டு தென்கரை, மேல்கரை, வடகரை வழியாக 3 முறை வலம் வந்தது. வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இசை கச்சேரியுடன் தண்ணீர் மிதந்து வரும் அழுகுமிகு காட்சி காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் 4 கரைகளிலும் திரண்டனர்.

    இதில் பூண்டி கே. கலைவாணனன் எம்.எல்.ஏ., நகரமன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்திட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவ நாட்களில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள் தோறும் பல்வேறு வாகனங்களில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    பிரம்மோற்சவம் முக்கிய விழாக்களான கருட சேவை மற்றும் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நடைபெற்றது. இதனையடுத்து நேற்று வரதராஜ பெருமாள் மேல் பல்லக்கில் காஞ்சீபுரம் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்து மீண்டும் கோவிலை அடைந்தார்.

    பின்னர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஆனந்த சரஸ் குளத்தில் பெருமாள் தீர்த்தவாரி கண்டார். அப்போது குளத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பெருமாளை வழிபட்டனர்
    உற்சவத்திற்காக பிரம்மாண்டமாக துரியோதனன் சிலை அமைத்து, கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் - துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி நடத்தப்பட்டது.
    காஞ்சிபுரம் பாலாற்றின் கரையில் உள்ள ஓரிக்கை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அக்னி வசந்த தீமிதி விழாவின் ஒரு பகுதியாக நாள்தோறும் பாரதம் சொற்பொழிவு நடத்தப்பட்டு வரும் நிலையில் நேற்று பீமன் - துரியோதனன் படுகள உற்சவம் நடைபெற்றது.

    உற்சவத்திற்காக பிரம்மாண்டமாக துரியோதனன் சிலை அமைத்து, கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் - துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி நடத்தப்பட்டது.

    பீமன் - துரியோதனன் படுகள காட்சியை தீமிதி விழாவிற்காக காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருக்கும் பக்தர்களும், ஓரிக்கை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களின் வேண்டுதல் காணிக்கையை செலுத்தி தரிசனம் செய்து, திரொளபதி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
    காலபைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பாகிறது. வாரத்தில் 7 நாட்களிலும் ராகு காலத்தில் பைரவருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
    காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப்பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.

    காலபைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பாகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, இனிப்பு பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களை சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும். அன்று அன்னதானம் சிறப்பிக்கப்படுகிறது.

    * திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும். வழக்கில் வெற்றி கிட்டும்.

    * திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும்.

    * செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.

    * புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம். தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம்.

    * தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயாசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    * வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்.

    * சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயாசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நடந்து செல்லும் வழியில் வெயிலின் சூடு தெரியாமல் இருக்க தேங்காய் நார் தரை விரிப்புகள் விரிக்கப்பட்டு இருந்தது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த நிலையில் இன்று திருவண்ணாமலையில் வெயில் வெளுத்து வாங்கியது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வந்து வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பக்தர்கள் நடந்து செல்லும் வழியில் வெயிலின் சூடு தெரியாமல் இருக்க தேங்காய் நார் தரை விரிப்புகள் விரிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர் வழங்கப்பட்டது. ஒரு சில பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.

    ×