என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஜய் ஆண்டனி 'ரோமியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படம் அடுத்த ஆண்டு கோடையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    நடிகர் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் 'ரோமியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், விஷாலின் 'எனிமி' படத்தில் நடித்த மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குட் டெவில் புரொடக்ஷன் சார்பாக விஜய் ஆண்டனி வழங்கும் இப்படம் அடுத்த ஆண்டு (2024) கோடையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ரோமியோ போஸ்டர்

    இந்நிலையில், 'ரோமியோ' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் தென்காசி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார்.




    • தனுஷின் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

    தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தனுஷ் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க இசையமைப்பாளர் தேவா மறுத்துள்ளார். அதாவது, தனுஷின் 50-வது படம் வட சென்னை சார்ந்த படம் என்பதால் இசையமைப்பாளர் தேவாவை வில்லானாக நடிக்க வைக்க தனுஷ் அணுகியுள்ளார். ஆனால், தேவா தனக்கு வசனங்களை மனப்பாடம் செய்வது கடினமாக இருக்கும் என்றும் இதனால் பல டேக்குகளை எடுக்க நேரிடலாம், இது மற்ற நடிகர்களை பாதிக்கும் என்பதால் மறுத்துவிட்டேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் கிச்சா சுதீப் 'நான் ஈ' படத்தில் நடித்து பிரபலமானார்.
    • இவர் விஜய்யின் ‘புலி’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

    பிரபல கன்னட நடிகர் சுதீப் தமிழில் வெளியான 'நான் ஈ' படத்தில் சமந்தாவுடன் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் வெளியாகி ஹிட்டான சேது மற்றும் ஆட்டோகிராப் போன்ற படங்களின் ரீமேக்கிலும் நடித்துள்ளார். மேலும், விஜய்யின் 'புலி' படத்திலும் நடித்து ரசிகர்களை கவந்தார்.


    கிச்சா 47 போஸ்டர்

    இந்நிலையில், நடிகர் கிச்சா சுதீப்பின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் 47-வது படத்தை இயக்குனர் சேரன் இயக்கவுள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தங்களது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.




    • தடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தன்யா ஹோப்.
    • இவர் ’கிக்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

    தடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தன்யா ஹோப். அடுத்ததாக 'தாராளபிரபு' என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'கிக்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.


    இந்நிலையில் நடிகை தன்யா ஹோப் தன் உதட்டு அறுவை சிகிச்சை குறித்து மனம் திறந்துள்ளார். அதில், "நான் முதன் முதலாக காமெடி படத்தில் நடித்துள்ளேன். 'கிக்' படத்தில் ரசிகர்களின் வரவேற்பு எப்படி உள்ளது என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன். படம் முழுவதும் சந்தானத்துடன் ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் பல காட்சிகளில் நடித்துள்ளேன்.


    என்னிடம் உங்கள் உதடு எப்படி பெரிதாக உள்ளது. அறுவை சிகிச்சை செய்தீர்களா? என்று கேட்கிறார்கள். நான் உதட்டை அறுவை சிகிச்சை எதுவும் செய்யவில்லை. இயற்கையாகவே என் உதடு இப்படிதான் உள்ளது. இந்தியர்களுக்கு உதடுகள் பெரிதாக இருந்த போதும் என்னிடம் மட்டும் ஏன் இப்படி கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. சென்னையில் இ.சி.ஆர். சாலை எனக்கு பிடித்த இடம். ஸ்கை டைவிங் செய்வது ரொம்ப பிடிக்கும்" என்று கூறினார்.

    • விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'.
    • இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.

    இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.



    கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், 'இறுகப்பற்று' படத்தின் முதல் பாடலான 'பிரியாதிரு'பாடல் வெளியாகியுள்ளது. யுவன் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.




    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியானது.
    • இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினி. இவர் பல டாப் இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். தன் நடிப்பினாலும், ஸ்டைலினாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த ரஜினியை 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்துடன் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

    இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி மற்றும் நெல்சனுக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கார்- காசோலைகளை பரிசாக வழங்கினார்.

    இந்நிலையில், நடிகர் ரஜினியை  முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நேரில் சென்று சந்தித்தார். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'லியோ' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், 'லியோ' படத்தில் நடிக்காதது குறித்து நடிகர் விஷால் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது இயக்குனர் லோகேஷ் 'லியோ' படத்தில் நடிப்பதற்காக கால் ஷீட் கேட்டு வந்தார். நான்கு மாதங்கள் கால் ஷீட் கேட்டார். ஆனால், இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது என்பதால் 'லியோ' படத்தை நிராகரித்துவிட்டேன். நான் கண்டிப்பாக விஜய்யை வைத்து படம் இயக்குவேன் என்று பேசினார்.

    • நடிகை தமன்னா, பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார்.
    • இவர் சமீபத்தில் விஜய் வர்மாவுடனான காதலை உறுதி செய்தார்.

    தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ், ரஜினி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வந்ததையடுத்து சமீபத்தில் விஜய் வர்மாவுடனான காதலை உறுதி செய்தார்.


    இந்நிலையில், நடிகை தமன்னா தற்போது அவருக்கு திருமணம் நடைபெறபோவதில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், " திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ள தான் போகிறேன். ஆனால், இப்போது அதற்கான மனநிலை இல்லை.


    என் கேரியர் இப்போது சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. அதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன். படப்பிடிப்புதான் இப்போது என் மகிழ்வான இடம்" என்றார் பேசினார்.

    • சூப்பர் சிங்கர் மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர்.
    • சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல எளிமையானவர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இசையில் சிறந்து விளங்குபவர்கள், கலந்துகொள்ளும் இந்த சூப்பர் சிங்கர் பாட்டு நிகழ்ச்சி, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர்.

    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர் எனப் பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. இந்த பிரிவுகளிலிருந்தும் பல திறமையான பாடகர்கள் திரைத்துறையில் பிரபல பாடகர்களால் பல பாடல்கள் பாடி வருகின்றனர்.


    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல எளிமையானவர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பல அற்புதமான நிகழ்வுகள் நடந்து வருகின்றது.

    கடந்த வார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளம் சிறுமி ஹர்ஷினி நேத்ரா, மிமிக்ரி குரலில் பாடல்கள் பாடி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். ஹர்ஷினி நேத்ரா எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஆவார். விழுப்புரம் நகரை சேர்ந்த இவரின் தந்தை ஒரு சிறு கடை நடத்தி வருகிறார். தன் மகளின் பாடகி ஆசையை நிறைவேற்ற அந்த குடும்பமே உழைத்து வருகிறது.


    ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவாராக இருந்தாலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன் திறமையால் அனைவரையும் மயக்கி வருகிறார் ஹர்ஷினி நேத்ரா. கடந்த வார நிகழ்ச்சியில் 'ராசாத்தி' பாடல் பாடி அசத்திய அவர் அடுத்ததாக செய்த மிமிக்ரி தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    பிரபல பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி மற்றும் பாடகி தீ ஆகியோரின் குரலில் அச்சு அசலாக அவர்கள் பாடிய பாடலை பாடி அசத்தி அனைவரையும் மிரள வைத்தார். நடுவர்கள் அனைவரும் அவரின் திறமையை பார்த்து வியந்து அவரை வெகுவாக பாராட்டினர். அவர் மிமிக்ரியில் பாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. திறமையால் ஒளிரும் பலருக்கு ஒரு ஒரு சிறப்பான மேடையாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்கி வருகிறது.

    • முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் நடித்தவர் ஆர்.எஸ்.சிவாஜி.
    • இவர் பேசிய வசனம் தற்போது வரை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

    பிரபல திரைப்பட நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி (66) உடல் நலக்குறைவால் காலமானார்.

    80-களின் பிரபல திரைப்பட நடிகராக இருந்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான 'அபூர்வ சகோதர்கள்' திரைப்படத்தில் ஜனகராஜ் உடன் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்த இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தில் இவர் பேசிய 'தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க' வசனம் தற்போது வரை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.


    ஆர்.எஸ்.சிவாஜி

    இவர் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் காமெடி நடிகராகவும், குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'கார்கி' திரைப்படத்தில் ஆர்.எஸ்.சிவாஜியின் நடிப்பு பாராட்டை பெற்றது.

    இந்நிலையில், 66 வயதான ஆர்.எஸ்.சிவாஜி இன்று உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி, நடிகரும் இயக்குனருமான சந்தானபாரதியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இந்த திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


    மார்க் ஆண்டனி போஸ்டர்

    இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலர் நாளை ( செப்டம்பர் 3) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

    ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.


    இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினி மற்றும் இயக்குனர் நெல்சனுக்கு கார் மற்றும் காசோலையை பரிசாக வழங்கினார்.


    இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.




    ×