தனுஷ் 50-இல் வில்லன்.. தேவாவை தேடி வந்த வாய்ப்பு.. என்ன சொன்னார் தெரியுமா?

தனுஷின் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
தனுஷ் 50-இல் வில்லன்.. தேவாவை தேடி வந்த வாய்ப்பு.. என்ன சொன்னார் தெரியுமா?
Published on

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தனுஷ் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க இசையமைப்பாளர் தேவா மறுத்துள்ளார். அதாவது, தனுஷின் 50-வது படம் வட சென்னை சார்ந்த படம் என்பதால் இசையமைப்பாளர் தேவாவை வில்லானாக நடிக்க வைக்க தனுஷ் அணுகியுள்ளார். ஆனால், தேவா தனக்கு வசனங்களை மனப்பாடம் செய்வது கடினமாக இருக்கும் என்றும் இதனால் பல டேக்குகளை எடுக்க நேரிடலாம், இது மற்ற நடிகர்களை பாதிக்கும் என்பதால் மறுத்துவிட்டேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com