என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’.
    • இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.20 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


    இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.


    • நடிகை ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்டில் செல்வது போன்ற வீடியோ வெளியானது.
    • அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. சமீபத்தில் முன்னணி நடிகையான ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்டில் செல்வது போன்ற வீடியோ வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.


    இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து deep fake மூலம் 'டைகர் 3' திரைப்படத்தில் நடிகை கத்ரீனா கைஃப்யின் சண்டை காட்சி மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்துடன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், அந்த வீடியோ deep fake மூலம் போலியாக உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமான ரோஸி பிரீனின் வீடியோவில் அவரது முகத்திற்கு பதிலாக கஜோலின் முகத்தை வைத்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’.
    • இப்படம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.


    இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்ததையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தங்கலான்' திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    டேனியல் கால்டாகிரோன்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணியை ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் முடித்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும், "தங்கலான் அற்புதமாக வந்துள்ளதாக" குறிப்பிட்டுள்ளார்.


    • ராம்குமார் பாலகிருஷ்ணன் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
    • இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

    ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பார்க்கிங்' . திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.


    இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், 'பார்க்கிங்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பார்க்கிங்கால் ஏற்படும் பிரச்சினையை விவரிக்கும் விதமாக உருவாகியுள்ள இந்த டிரைலரில் 'என்ன செஞ்சவங்கள திருப்பி எதாவது செய்யனும்ல' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'பார்க்கிங்' திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



    • இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி’.
    • இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    இளைஞர்கள் கொண்டாடும் படங்களை இயக்கியவர் செல்வராகவன். 2004-ம் ஆண்டில் ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடிப்பில் இவர் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது.


    19 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்குவதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த பாகம் இயக்கவுள்ளதாகவும் இதில், ஹீரோவாக ரவி கிருஷ்ணாவும் ஹீரோயினாக அனஸ்வர ராஜனும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக செய்தி பரவி வந்தது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, '7ஜி ரெயின்போ காலனி 2' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துள்ளதாகவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் செய்தி வலம் வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் விக்னேஷ் சிவன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
    • இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

    2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.


    இதையடுத்து லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் திடீரென அந்த படத்தினை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் அதில், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவிவந்தது. மேலும் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.


    இந்நிலையில், விக்னேஷ் சிவன் படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் இப்படத்தின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதால் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
    • இப்படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார்.

    'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.


    இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில் இப்படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் ,இப்படத்தின் கதையை இனிதான் எழுதவுள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் 'தலைவர் 171' படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறினார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கடுகுதடி புதூர், கோரம்கொம்பு, கே.சி.பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படப்பிடிப்பு நடந்தது.

    படத்தில் இயல்பான காட்சிக்காக உள்ளூர் மக்கள் பலரை இதில் நடிக்க வைத்தனர். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அறிவுரையின் பேரில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் படக்குழுவினருடன் அவர்கள் நடித்தனர்.

    ஆரம்பத்தில் நடிப்பதற்கு தயக்கம் காட்டிய பழங்குடியின மக்களுக்கு சுமார் 1 மாதம் அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. கேமரா முன்பு நடிப்பதாக நினைக்கக்கூடாது. நீங்கல் இயல்பாக ஒருவரிடம் எவ்வாறு நடந்து கொள்வீர்களோ அதே போல் பேச வேண்டும். எங்களுக்காக உங்களது பாசை மற்றும் இயல்புகளை மாற்றிக் கொள்ள வேண்டாம். உங்கள் வீட்டிலும், நீங்கள் வேலை பார்க்கும் இடத்திலும் எவ்வாறு இருப்பீர்களோ அதே போலவே இருக்கலாம் என்று தைரியம் அளித்தனர்.

    அதன்படி சுமார் 2 மாதமாக இப்பகுதியில் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து அந்த கிராமத்துக்கு வந்த படக்குழுவினர் படத்தில் நடித்த அத்தனை பேருக்கும் தங்க காசு வழங்கியதுடன் கிடா விருந்து அளித்தனர். மேலும் மதுரை பாண்டி கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்கும் விருந்தளித்து மதுரையில் உள்ள தியேட்டரில் அனைவரையும் படம் பார்க்க வைத்தனர்.

    இந்த படத்தில் நடித்த பரமேஸ்வரி, மகேஸ்வரி, விஜயகுமார், முருகானந்தம், ரமேஷ் ஆகியோர் இது குறித்து தெரிவிக்கையில், ஆரம்பத்தில் எங்களை படத்தில் நடிக்க அழைத்தபோது நாங்கள் மறுத்து விட்டோம். ஆனால் படம் பழங்குடியினர் வாழ்க்கை முறையை பிரதிபலிப்பதாக இருக்கும் என்று தெரிவித்ததால் ஒத்துக் கொண்டோம். எங்கள் ஊரில் சினிமா தியேட்டரே கிடையாது. படம் பார்ப்பது டி.வி.யில் மட்டுமே. சினிமா உலகம் என்றால் எவ்வாறு இருக்கும் என்று கூட தெரியாது. எங்கள் ஊருக்கு ஒரு அதிகாரி வந்தால் கூட அவரை பார்த்துப் பேச பயமாக இருக்கும். ஆனால் டைரக்டர் கொடுத்த உத்வேகத்தால் நாங்கள் சிறப்பாக நடித்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

    படத்தை திரையில் பார்த்தபோது எங்களுக்கு மகிழ்ச்சியின் எல்லைக்கு அளவே இல்லை. இனிமேல் எந்த அதிகாரியையும் நாங்கள் தைரியமுடன் எதிர்கொண்டு பேசுவோம் என்று எண்ணத் தோன்றியுள்ளது. சுமார் 40-க்கும் மேற்பட்டோரை படத்தில் நடிக்க அழைத்து அதில் 25 பேர்களை தேர்வு செய்தனர். தாண்டிக்குடி கிராமத்தில் 35 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் திரையில் பார்ப்பதுபோல் இல்லாமல் எங்களுடன் சாதாரணமாக பழகினார்கள்.

    படப்பிடிப்பின் போது கடுமையான பனிப்பொழிவு இருந்தது. ஆனால் அதனையும் பொருட்படுத்தாது அவர்கள் சூட்டிங் நடத்தினார்கள். எங்களுக்கு இது போன்ற பனி எல்லாம் பழகிப்போனது. ஆனால் ஒரு படத்துக்காக எவ்வளவு தூரம் கஷ்டப்படுகிறார்கள் என்பது அவர்கள் எங்கள் ஊரில் எங்களுடன் இருந்த போதுதான் உண்மையாக தெரிந்தது.

    திரையில் படத்தை பார்த்தபோது அவர்களது கஷ்டம் அனைத்தும் விலகி விட்டதாக தெரிவித்தனர். ஒவ்வொரு திரைப்படமும் இது போல்தான் படமாகிறது என்பது இப்போதுதான் தெரிகிறது. எங்கள் கிராமத்தை விட்டே வெளியே வராத எங்களை தற்போது உலகறியும் வகையில் திரையில் காட்டிய படக்குழுவினருக்கு எப்போதும் நன்றிக்கடனாக இருப்போம். இனிமேல் அடுத்த படத்தில் நடிக்க அழைத்தாலும் தயக்கமின்றி நடிப்போம் என்றனர். 

    • வைரமுத்து பல படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார்.
    • அந்த வரிசையில் சீனு ராமசாமி படத்திற்கும் பாடல் எழுதுகிறார்.

    1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.



    வைரமுத்து தற்போது பல படங்களுக்கு பிசியாக பாடல் எழுதி வருகிறார். அந்த வரிசையில் இயக்குனர் சீனு ராமசாமி படத்திற்கும் பாடல் எழுதியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சீனுராமசாமி

    நல்லதொரு கதைசொல்லி

    அவள் பானை விற்கிறவள்;

    இவன் கோழி விற்கிறவன்

    பானைக்காரிக்குக்

    கோழிக்காரன்மீது

    ஒருதலைக் காதல்

    அவனோ

    வாழ்வில் நொந்துபோனவன்;

    பால்யத்தில் நரைத்தவன்

    அவளுக்குப் புரிகிற மொழியில்

    காதலை நிராகரிக்க வேண்டும்

    அதுதான் பாட்டு

    ரகுநந்தன் மெட்டுக்கு

    வட்டார வழக்கில்

    எழுதினேன்

    அவரவர் தொழில்வழி

    இயங்கியது தமிழ்:

    "ஒடைஞ்ச பானைக்கு

    ஒலை எதுக்கு? – அடி

    அறுத்த கோழிக்கு

    அடை எதுக்கு?"

    படித்ததும் –

    சீனிச்சேவு

    சாப்பிட்ட குழந்தைமாதிரி

    சிரித்தார் சீனு" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் ‘லியோ’ திரைப்படம் வெளியானது.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.


    இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில் இப்படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அப்போது தொகுப்பாளினி லோகேஷ் கனகராஜை புகழ்ந்து பேசினார். இதனால் கூச்சமடைந்த லோகேஷ் குடுகுடுவென எழுந்து சென்று நான் பேசிக்கொள்கிறேன் என்றார். ஆனால், அந்த தொகுப்பாளினியோ உட்கார்ந்து கேளுங்கள் நான் பேசிக் கொள்கிறேன் என்றார். அதன்பின்னர் பேசிய லோகேஷ் கனகராஜ் எனக்கு ரொம்ப தர்ம சங்கடமா இருக்கு என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் இதனை செய்கிறேன்.
    • சில குறும்புக்கார ரசிகர்கள் "விசாகப்பட்டினத்தில் 19-ந்தேதி சந்திப்போம்" என்றெல்லாம் "கமெண்ட்" செய்து வருகிறார்கள்.

    இந்தியாவில் நடந்து வரும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. இந்திய அணி இறுதி போட்டிக்கு நுழைந்திருக்கிறது.

    அகமதாபாத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த முறை கோப்பை நமக்கு தான் என்று இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்துள்ளனர்.

    இந்தநிலையில் பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், 'உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன்' என தெரிவித்துள்ளார்.

    இந்த கருத்தை பார்த்த ரசிகர்கள் பலர் சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று விமர்சித்துள்ளனர். ஆனால் ரேகா போஜ் இதை மறுத்து, 'இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் இதனை செய்கிறேன்' என்று பதில் அளித்துள்ளார். சில குறும்புக்கார ரசிகர்கள் 'விசாகப்பட்டினத்தில் 19-ந்தேதி சந்திப்போம்' என்றெல்லாம் 'கமெண்ட்' செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே 2011-ம் ஆண்டில் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால் கிரிக்கெட் மைதானத்தில் நான் நிர்வாணமாக ஓடுவேன் என்று நடிகை பூனம் பாண்டே தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார். ஆனால் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் பூனம் பாண்டே பின்னர் அமைதியாகி போனார் என்பதும், பின்னர் அவர் ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் அப்போது கிண்டல் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியதும், முதலில் பரபரப்பாக இருந்தது.
    • இந்திய அணி வெற்றிக்கு முகமது ஷமி தான் காரணம்.

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. மும்பையில் நடந்த அரையிறுதி போட்டியை நேரில் பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் விமானம் முலம் சென்னை திரும்பினார்.

    அப்போது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி தொடங்கியதும், முதலில் பரபரப்பாக இருந்தது. இந்திய அணி வெற்றிக்கு முகமது ஷமி தான் காரணம். 100 சதவீதம் உலகக்கோப்பை நமதே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×