என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நானா படேகர் 'Journey' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு உத்தரபிரதேசம் வாரணாசியில் நடைபெற்று வருகிறது.

    பாலிவுட் நடிகர் நானா படேகர் ரஜினியின் 'காலா' திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் தற்போது இயக்குனர் அனில் ஷர்மா இயக்கத்தில்  'Journey' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தன்னிடம் செல்பி எடுக்க வந்த ரசிகரை நானா படேகர் தலையில் அடித்து விரட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் 'ஒரு மனிதனை இப்படியா அடிப்பது' என்று விமர்சித்து வந்தனர்.


    இந்நிலையில், இது தொடர்பாக நானா படேகர் விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் ரசிகர் ஒருவரை அடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது நான் நடிக்கும் படத்தில் வரும் ஒரு காட்சி. நாங்கள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தோம். முதல் ஒத்திகை காட்சி சரியாக வரவில்லை என்பதால் இரண்டாவது ஒத்திகைக் காட்சிக்கு தயாரானோம். அப்போது எதிர்பாராத விதமாக நீங்கள் வீடியோவில் பார்த்த அந்த இளைஞர் உள்ளே வந்துவிட்டார். நான் ரிகர்செல் என நினைத்து அந்த இளைஞரை அடித்து அனுப்பினேன்.


    அவர் யார் என்று எனக்கு தெரியாது. அந்த இளைஞர் படக்குழுவைச் சேர்ந்தவர் என்று தான் நினைத்தேன். பின்தான், அவர் எங்கள் படக்குழுவைச் சேர்ந்தவன் இல்லை என்பது எனக்குத் தெரியவந்தது. உடனே நான், அவரை அழைக்க முயன்றபோது, அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். வீடியோ எடுத்தது அவரது நண்பராக இருக்கலாம் என நினைக்கிறேன். நான் யாரிடமும் புகைப்படங்களை எடுக்க வேண்டாம் என கூறியதில்லை. அப்படி சொல்லவும் மாட்டேன். இது தவறுதலாக நடந்த விஷயம். தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நான் இனி இப்படி செய்யமாட்டேன்" என உருக்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.


    • நடிகை கார்த்திகா ‘கோ’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
    • சினிமா வாய்ப்புகள் போதிய அளவு இல்லாததால் சினிமாவில் இருந்து விலகி தந்தையுடன் இணைந்து பிசினசில் ஈடுபட்டார்.

    80 கால கட்டத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ராதா. மும்பை தொழில் அதிபருடன் திருமணமாகி இவருக்கு கார்த்திகா, துளசி ஆகிய மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கார்த்திகா 'கோ' படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். சினிமா வாய்ப்புகள் போதிய அளவு இல்லாததால் சினிமாவில் இருந்து விலகி தந்தையுடன் இணைந்து பிசினசில் ஈடுபட்டார்.


    இந்த நிலையில் கடந்த மாதம் கார்த்திகாவுக்கு ரோகித் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த புகைப்படங்களை கார்த்திகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். தற்போது வருங்கால கணவரான ரோகித்துடன் இணைந்து எடுத்த ரொமான்ஸ் புகைப்படங்களை வலை தளங்களில் கார்த்திகா பதிவிட்டுள்ளார். புகைப்படத்துடன் "உன்னை சந்திக்க வேண்டும் என்று விதி எழுதப்பட்டுள்ளது. உன்னை விரும்பியது ஒரு மேஜிக்காக நிகழ்ந்தது. உன்னுடன் இணைந்து பயணிப்பதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது" என்று பதிவிட்டுள்ளார்.


    கார்த்திகா பதிவு

    கார்த்திகா- ரோகித் திருமணம் வருகிற 19-ந்தேதி காலை திருவனந்தபுரத்தில் நடக்கிறது. ராதாவுக்கு சொந்தமான ஓட்டலில் நடைபெறும் திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜிகர்தண்டா -2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
    • இப்படம் இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் 'ஜிகர்தண்டா 2' படத்தில் நடித்த மலைவாழ் மக்களுடன் இப்படத்தை பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், "ஜிகர்தண்டா 2 படத்தை அப்படத்தில் நடித்த தண்டிக்குடி மக்களுடன் திரையரங்கில் பார்த்தேன். பெரிய திரையில் வருவதை பார்த்து மகிழ்ச்சியடைந்த அவர்களை பார்த்து மகிழ்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஷ்ணு விஷால் 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், எஃப்ஐஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். 'லால் சலாம்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    நடிகர் விஷ்ணு விஷால் நவம்பர் 14-ஆம் தேதி தனது சமூக வலைதளத்தில் கமல் மற்றும் அமீர்கானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'Superstars are superstars for a reason' என்றும் குறிப்பிட்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த புகைப்படத்தில் ஏற்கெனவே இருந்த பதிவை மாற்றி 'stars are stars for a reason' என்று குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. அதுமட்டுமல்லாமல் பலரும் முதலில் சூப்பர் ஸ்டார்ஸ் என்று குறிப்பிட்டுவிட்டு பின்னர் ஏன் மாற்றவேண்டும்? என்று விஷ்ணு விஷாலை விமர்சித்து வந்தனர்.

    இந்த நிலையில், விஷ்ணு விஷால் இதற்கு விளக்கமளித்துள்ளார். அதில், "சூப்பர் ஸ்டார்கள் சூப்பர் ஸ்டார்கள் தான். அந்தப் பதிவை நான் எடிட் செய்துவிட்டேன் என்பதற்காக நான் பலவீனமானவன் அல்ல. சூப்பர் ஸ்டாராக இருக்கும் அனைவரையும் நான் நேசிக்கிறேன். எனவே என்னுடைய டைம்லைனில் நெகட்டிவிட்டியை பரப்புவோர் இங்கிருந்து கிளம்புங்கள். நமக்கென்று ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் பட்டம் மட்டுமே உள்ளது. ஆனால் என்னுடைய மதிப்புக்கு அப்பாற்பட்டு, சாதித்த அனைவருமே சூப்பர் ஸ்டார்கள்தான். அனைவரையும் நேசியுங்கள். அன்பைப் பரப்புங்கள். வெறுப்பை அல்ல" என்று கூறியுள்ளார்.


    • தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் திருப்பூர் சக்தி சுப்ரமணியம்.
    • கடந்த தீபாவளி அன்று அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக சிறப்பு காட்சிகள் வெளியிட்டதாக புகார்கள் வந்தது.

    தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் திருப்பூர் சக்தி சுப்ரமணியம். இவருக்கு சொந்தமான தியேட்டர்கள் திருப்பூரில் உள்ளது. இங்கு கடந்த தீபாவளி அன்று அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக சிறப்பு காட்சிகள் வெளியிட்டதாக புகார்கள் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தாசில்தார் நேரடியாக ஆய்வு செய்து அதுதொடர்பான அறிக்கையை திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக சிறப்பு காட்சிகள் வெளியிட்டதற்கான விளக்கம் கேட்டு தியேட்டர் உரிமையாளர் சக்தி சுப்ரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் திருப்பூரில் இன்று சக்தி சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன். எனது சொந்த வேலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளேன். இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய் சேதுபதி பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் நடித்துள்ளார்.
    • தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளில் தனித்தனியாக பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர்.

    பாலிவுட் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'மேரி கிறிஸ்துமஸ்'. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிப்ஸ் பிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.


    இந்த படத்தின் தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளில் தனித்தனியாக பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். 'மேரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு முன்பே அறிவித்து பின்னர் டிசம்பர் 8-ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது.


    இந்நிலையில், தற்போது இந்த தேதியும் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, 'மேரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. கத்ரீனா கைஃப் - விஜய் சேதுபதியின் கெமிஸ்ட்ரியை பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்கள் இதனால் வெறுப்பின் உச்சத்தில் உள்ளனர்.

    • முதலில் களமிறங்கிய இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது.
    • இந்த வெற்றியை இந்தியா முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 398 என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 48.5 ஓவர்களில் 327 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியை இந்தியா முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் உலகக் கோப்பை தொடரையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகிறது. அதில், இயக்குனர் வெங்கட் பிரபு, "சாவு பயத்தை காட்டிட்டீங்களே பரமா என்பது போன்று இருந்தது. நீங்கள் யாரை மேன் ஆப்தி மேட்ச் என்று சொல்வீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும், நடிகர் சாந்தனு, "இந்தியா மீண்டும் ஒரு முறை இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. நன்றி முகமது சமி . 2019-யின் இழப்பு மீட்டெடுக்கப்பட்டது" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


    • நடிகை ஹன்சிகா 'மை நேம் இஸ் ஸ்ருதி' படத்தின் நடித்துள்ளார்.
    • இவருக்கு வேத பண்டிதர்கள் ஆசிர்வாதம் வழங்கினார்கள்.

    ஆந்திர மாநிலம் என். டி.ஆர். மாவட்டம் விஜய வாடாவில் பிரசித்தி பெற்ற கனகதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடிகை ஹன்சிகா நேற்று தரிசனம் செய்ய வந்தார். அவரை கோவில் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து ஹன்சிகா சாமி தரிசனம் செய்தார். வேத பண்டிதர்கள் ஆசிர்வாதம் வழங்கினார்கள். கோவில் நிர்வாகிகள் ஹன்சிகாவுக்கு அம்மன் உருவப்படம், பிரசாதம் வழங்கினார்கள்.

    வளையல் அலங்காரத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. மை நேம் இஸ் ஸ்ருதி படம் எனது நடிப்பில் 17-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக விஜயவாடா வந்தோம். அனைத்து பார்வையாளர்களும் ஆதரிக்க வேண்டும் என்று கூறினார்.

    • இயக்குனர்- நடிகராக வலம் வருபவர் சேரன்.
    • இவரது தந்தை சினிமா ஆப்பரேட்டராக பணிப்புரிந்தவர்.

    பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார்.

    இவரின் தந்தை எஸ். பாண்டியன் சினிமா ஆப்பரேட்டராக பணிப்புரிந்தவர். 84 வயதான பாண்டியன் சிறிது காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில், இவர் இன்று (நவம்பர் 16) காலை 6.30 மணிக்கு அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள பழையூர்பட்டியில் இருக்கும் அவர்களது வீட்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் பழையூர்பட்டியில் உள்ள வீட்டில் நடைபெறும். சேரன் தந்தை காலமானதை தொடர்ந்து பல்வேறு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாரி செல்வராஜின் 'மாமன்னன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இவர் இரண்டாவது முறையாக தனுஷுடன் இணையவுள்ளார்.

    கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு படங்களை இயக்கிய இயக்குனர் ராமின் உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பிறகு கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ்.

    இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். மேலும், இவர் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மாரி செல்வராஜ் இரண்டாவது முறையாக தனுஷுடன் இணையவுள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது.


    இந்நிலையில், மாரி செல்வராஜ் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பெருமைகளும் சாதனைகளும் அடுத்த தலைமுறைக்கு கை மாறும் தருணம் அற்புதமானது" என்று விராட்டின் புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் 'சூப்பர் ஸ்டார்' பட்டம் தொடர்பாக ரஜினியைதான் மாரி செல்வராஜ் கூறுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் விராட் கோலி தனது 50-வது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் சாதனையை இவர் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • ஜிகர்தண்டா 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில் மதுரையில் 'ஜிகர்தண்டா 2' படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் எஸ்.ஜே. சூர்யா,"ஒரு தரமான படைப்பிற்கு உலகளாவிய வெற்றி கிடைத்துள்ளது. கலெக்ஷன் பார்க்கும் படம் பெயர் எடுக்காது. பெயர் எடுக்கும் படம் கலெக்ஷன் பார்க்காது. ஆனால், இப்படம் இரண்டையும் செய்துள்ளது. மக்கள் படம் பார்க்கும் தரம் வளர்ந்திருக்கிறது. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிகப்பெரிய நன்றி. வார நாட்களையும், மழையையும் தாண்டி திரையரங்கு நிறைகிறது என்றால் இது மிகப்பெரிய வெற்றி. இப்படியும் நடிக்க முடியும் என்பதை ராகவா லாரன்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.



    நான்நடிகனாக வேண்டும் என்று தான் இயக்குனரானேன். நடிகனாகும் போது எல்லோரும் ஏன் இயக்குவதை விட்டு விட்டு நடிக்கிறாய் என்று கூறுவார்கள். அப்போது மன வருத்தமாக இருக்கும். ஆனால், இப்போது அந்த பெயரை மாற்றியது கார்த்திக் சுப்பராஜ் தான்" என்று பேசினார்.

    தொடர்ந்து வரும் தீபாவளியை எஸ்.ஜே. சூர்யாவின் தல தீபாவளியை எதிபார்க்கலாமா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எஸ்.ஜே. சூர்யா, "ஜிகர்தண்டா பொண்டாட்டினா இது எனக்கு தல தீபாவளிதான்" என்று கலகலப்பாக பேசினார்.

    • துருவ நட்சத்திரம் படத்திற்கான விளம்பர பணிகளில் கவுதம் வாசுதேவ் மேனன் ஈடுபட்டுள்ளார்.
    • தனது அடுத்த படம் குறித்த புதிய தகவலை கவுதம் மேனன் தெரிவித்து இருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

    இந்த நிலையில், துருவ நட்சத்திரம் படத்திற்கான விளம்பர பணிகளுக்காக அவர் மும்பை சென்றிருக்கிறார். இன்று நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி போட்டியின் போது தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவுதம் வாசுதேவ் மேனன், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    அதன்படி நடிகர் ஆர்.ஜே. பாலாஜி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கவுதம் வாசுதேவ் மேனன், கிரிக்கெட்டை மையமாக கொண்டு புதிய படம் இயக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் காம்ப்ளியை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதையை உருவாக்கி இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    ×