சச்சின்- காம்ப்ளி வாழ்க்கையைத் தழுவி படம்! - கௌதம் மேனன் தகவல்

துருவ நட்சத்திரம் படத்திற்கான விளம்பர பணிகளில் கவுதம் வாசுதேவ் மேனன் ஈடுபட்டுள்ளார். தனது அடுத்த படம் குறித்த புதிய தகவலை கவுதம் மேனன் தெரிவித்து இருக்கிறார்.
சச்சின்- காம்ப்ளி வாழ்க்கையைத் தழுவி படம்! - கௌதம் மேனன் தகவல்
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், துருவ நட்சத்திரம் படத்திற்கான விளம்பர பணிகளுக்காக அவர் மும்பை சென்றிருக்கிறார். இன்று நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி போட்டியின் போது தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவுதம் வாசுதேவ் மேனன், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதன்படி நடிகர் ஆர்.ஜே. பாலாஜி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கவுதம் வாசுதேவ் மேனன், கிரிக்கெட்டை மையமாக கொண்டு புதிய படம் இயக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் காம்ப்ளியை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதையை உருவாக்கி இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com