என் மலர்
சினிமா செய்திகள்
- 'கருடன்' திரைப்படத்தின் இயக்குநருமான ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.
- ஆக்ஷன் திரில்லராக இந்த படத்தை அவர் இயக்கி வருகிறார்.
பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்த முதல் திரைப்படமான 'தி லெஜெண்ட்' திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தனது இரண்டாவது படத்தை அவர் தொடங்கினார்.

தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'காக்கி சட்டை', 'கொடி', உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'கருடன்' திரைப்படத்தின் இயக்குநருமான ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.
புதுமையான கதைக் களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, 'பாகுபலி' பிரபாகர், சந்தோஷ் பிரதாப், 'லியோ' புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் நடிக்க, இதர முக்கிய பாத்திரங்களில் முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளனர்.
இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள லெஜெண்ட் சரவணனின் சொந்த ஊரான பணிக்க நாடார் குடியிருப்பில் தற்போது தொடங்கி அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது. தேனியை மையமாக வைத்து துரை செந்தில்குமார் உருவாக்கிய 'கருடன்' பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தூத்துக்குடியை மையமாக வைத்து உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக இந்த படத்தை அவர் இயக்கி வருகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டிலும், மும்பை, டில்லி உள்ளிட்ட நகரங்களிலும் நடைபெற உள்ளது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கம்: துரைராஜ், நிர்வாக தயாரிப்பு: அம்பிகாபதி, உடைகள் வடிவமைப்பு: தீப்தி, புகைப்படங்கள் சுரேஷ், போஸ்டர் வடிவமைப்பு: தினேஷ், சண்டை காட்சிகள்: மேத்யூ மகேஷ், தயாரிப்பு நிர்வாகி: சின்னமனூர் சதீஷ், புரொடக்ஷன் மேலாளர்கள்: முனுசாமி, ஆர் எஸ் கோவிந்தராசு.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள டாக்டர் காந்தராஜ் நடிகைகள் பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
- சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து டாக்டர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.
மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து தமிழ் திரை உலகில் பாலியல் புகார்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக நடிகை ரோகிணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 6-ந்தேதி அன்று டாக்டர் காந்தராஜ் என்பவர் மீது புகார் அளித்திருந்தார். அதில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள டாக்டர் காந்தராஜ் நடிகைகள் பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
பழைய நடிகைகள் முதல் தற்போதுள்ள நடிகைகள் வரையில் அனைவருமே பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்று கருத்து தெரிவித்துள்ள டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப் ரிவு சைபர்கிரைம் போலீசார் டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
296 (பொது வெளியில் ஆபாசமாக பேசுதல்), 75 (பாலியல் தொந்தரவு), 79 (பெண்களின் மாண்பை அவமதித்தல்), 352 (அவதூறாக பேசுதல்), 67 (தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல்) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து டாக்டர் காந்தராஜ் மீது கைது நடவடிக்கை பாய்கிறது. காந்தராஜ் பேசிய வீடியோ பேச்சின் அடிப்படையில் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து டாக்டர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார் அவரை கைது செய்வது பற்றியும் ஆலோசித்து வருகிறார்கள்.
- 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீரங்கநாயக சுவாமி கோவிலில் திருமணம்.
- புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிந்துள்ளனர்.
நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் திருமணம் செய்து கொண்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் `பாய்ஸ்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
கடந்த ஆண்டு வெளிவந்த சித்தா படம் வெற்றியை கொடுத்தது.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் காதலில் இருப்பதாக செய்திகள் பரவியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இணைந்து பொது இடங்களில் உலா வரும் புகைப்படங்களும் வெளியாகின.
மேலும் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். அதில் விரைவில் திருமணம் குறித்து வெளியிடுவோம் என்றும் கூறி இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்று நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீரங்கநாயக சுவாமி கோவிலில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிந்துள்ளனர்.
சித்தார்த்-அதிதி தம்பதிக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பெண் நடன கலைஞர் பாலியல் புகார்.
- வழக்கு பதிவு செய்து விசாரணை.
திருப்பதி:
ஆந்திர மாநில திரைப்பட நடன கலைஞராக இருப்பவர் 21 வயது இளம்பெண். இவர் திரைப்பட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது சைதராபாத், ராய்துருக்கம் போலீசில் புகார் செய்தார்.
அதில் நடன இயக்குனர் ஜானி பாஷாவிடம் நான் நடன கலைஞராக வேலை செய்து வந்தேன். அப்போது சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடந்த படப்பிடிப்பின் போது என்னை ஓட்டல்களில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.

மேலும் நர்சிங்கியில் உள்ள அவரது வீட்டிற்கு வரவழைத்து பலாத்காரம் செய்தார் என கூறியிருந்தார்.
இளம்பெண் நர்சிங்கி பகுதியில் வசிப்பதால் புகாரை நர்சிங்கி போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடன இயக்குனர் மீது அவரிடம் வேலை செய்யும் பெண் நடன கலைஞர் பலாத்கார புகார் அளித்துள்ள சம்பவம் தெலுங்கு திரைப்பட துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கான விருது விழாவான எம்மி விருதுகள் விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது
- நேற்றய தினம் நடந்த ரெட் கார்பெட் நிகழவில் தொலைக்காட்சி பிரபலங்கள் மிடுக்கான உடையணிந்து அணிவகுத்தனர்.
உலக அளவில் மார்க்கெட் கொண்டுள்ள ஹாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கான விருது விழாவான எம்மி விருதுகள் விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது . அந்த வகையில் 2024 எம்மி விருது வழங்கும் விழா நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றய தினம் நடந்த ரெட் கார்பெட் நிகழவில் தொலைக்காட்சி பிரபலங்கள் மிடுக்கான உடையணிந்து அணிவகுத்தனர். தொடர்ந்து இன்றைய தினம் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது,
❧சிறந்த ரிலாலிட்டி போட்டி - டிரையேட்டர்ஸ் [Traitors]
❧சிறந்த டிராமா சீரிஸ் - ஷோ கன் [Shogun]
❧சிறந்த டாக் சீரிஸ் தி டெய்லி ஷோ [The Daily Show]
❧சிறந்த ஆன்தாலஜி சீரிஸ் - பேபி ரெய்ன்டீர் [Baby Reindeer]

❧சிறந்த நடிகர் விருது [காமெடி] - 'தி பியர்' [The Bear] சீரிஸ் நடிகர் ஜெர்மி ஆலன் வைட் [Jeremy Allen White]
❧சிறந்த துணை நடிகர் விருது [காமெடி] - 'தி பியர்' சீரிஸ் நடிகர் எபோன் மாஸ் [Ebon Moss]
❧சிறந்த நடிகை விருது [ காமெடி] ஹேக்ஸ் [Hacks] நடிகை ஜீன் ஸ்மார்ட்
❧சிறந்த துணை நடிகை விருது [காமெடி] - 'தி பியர்' சீரிஸ் நடிகை லிசா கோலன் [Liza Colon]

❧சிறந்த நடிகை விருது [டிராமா] - ஷோ கன் சீரிஸ் நடிகை அனா சவாய் [Anna Sawai]
❧சிறந்த துணை நடிகை விருது [டிராமா] - 'தி கிரவுன்' The Crown நடிகை எலிசபெத் டெபிக்கி [Elizabeth Debicki]
❧சிறந்த நடிகர் விருது [டிராமா] -ஷோ கன் சீரிஸ் நடிகர் ஹிரோயுகி சனாடா [Hiroyuki Sanada]
தொடர்ந்து பல்வேறு பிரிவுகளுக்கான எம்மி விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர், நடிகை இடையே நல்ல உறவு இருக்க வேண்டும்.
- நானும், நடிகர் சித்தாந்தும் எப்படியோ நடித்து விட்டோம்.
தமிழில் ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர், விக்ரமுடன் தங்கலான் படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன் தற்போது இந்தியில் யூத்ரா படத்தில் நடித்து இருக்கிறார். இதில் அவர் நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும், முத்த காட்சிகளிலும் நடித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து மாளவிகா மோகனன் அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் முத்த காட்சிகளிலும், நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும் நடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இதுமாதிரி காட்சிகளை படமாக்கும்போது எல்லா சினிமா படப்பிடிப்பு அரங்கிலும் ஒரு இண்டிமேட் கோ ஆர்டினேட்டரை நியமிப்பார்கள்.
நடிகர் - நடிகைகள் கூச்சப்படாமல் எப்படி நடிக்க வேண்டும் என்பதை அவர்கள் சொல்லி கொடுப்பார்கள். இது நல்ல முடிவு. ஆனால் எங்கள் அரங்கில் இதுபோன்ற கோ ஆர்டினேட்டர்ஸ் யாரும் இல்லை.
ஆனாலும் நானும், நடிகர் சித்தாந்தும் எப்படியோ நடித்து விட்டோம். முத்தம் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எளிதான காரியம் இல்லை. நடிகர், நடிகை இடையே நல்ல உறவு இருக்க வேண்டும். சவுகரியமான சூழல் இருக்க வேண்டும்'' என்றார்.
- மார்க் ஆண்டணி' படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.
- ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதனைத்தொடர்ந்து, 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', 'காதலை தேடி நித்யானந்தா, 'வெர்ஜின் மாப்பிள்ளை', 'பஹீரா' உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த 'மார்க் ஆண்டணி' மிகப்பெரிய ஹிட் அடித்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இந்நிலையில், 'மார்க் ஆண்டணி' படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த ஆதிக் 'எனக்கு நம்பிக்கை கொடுத்த அஜித் சாருக்கு நன்றி' என்றும் கூறியுள்ளார்.
தற்போது, அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
- இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி.
அண்மையில் சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் இதற்கு முன் அண்டே சுந்தரனிகி என்ற படத்தில் நானி நடித்துள்ளார்.
சூர்யாஸ் சாட்டர்டே படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக , சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். திரைப்படம் கடந்த 29 ஆம் தெதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் உலகளவில் வசூலில் 100 கோடி ரூபாயை கடந்துள்ளது. நானி நடித்த திரைப்படங்களில் மேலும் ஒரு மகுடம் சூடும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லியோனார்டோ டிகேப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லட் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது "டைட்டானிக்" திரைப்படம்.
- கேட் வின்ஸ்லட் 2012 ஆம் ஆண்டு எடவர்டை திருமணம் செய்துக் கொண்டார்.
1997 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியோனார்டோ டிகேப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லட் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது "டைட்டானிக்" திரைப்படம். இப்படம் உலகமுழுவதும் புகழ் பெற்ற திரைப்படமாகும்.
இதில் கதாநாயகியாக நடித்த கேட் வின்ஸ்லட் 2012 ஆம் ஆண்டு எடவர்டை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதி 12 வருடங்கள் திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக கடந்துள்ளனர். தற்பொழுது அவர்கள் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் காரணத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது "பெண்களுக்கு வயது அதிகம் ஆக அவர்கள் உடல் சோர்விலும், காம ஆசைகளும் குறைய தொடங்கி விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் அனைவரும் தைராயிட் குறைப்பாடால் இருக்கும் என எண்ணிக் கொள்கின்றனர். ஆனால் இதன் முக்கிய காரணமே பெண்களின் உடலில் டெஸ்டோஸ்டீரான் எனும் ஹார்மோன் குறைப்பாடும் கூட காரணமாக இருக்கலாம்."
இதனால் கேட் வின்ஸ்லட் Testosterone Replacement Therapy {TRT} என்ற சிகிச்சையை தான் எடுத்துக் கொண்டதாக கூறியுள்ளார். இதனால் அவரது உடல் சோர்வில்லாமலும், உடலுறவிலும் சிறப்பாக இருக்க முடிகிறது என மனம் திறந்து கூறியுள்ளார். இதனால் பெண்கள் தாங்கள்தான் அனைத்திற்கும் காரணம் என எண்ணாமல் மருத்துவரை அணுகி கேட்குமாறு கூறினார்.
"பெண்கள் வயதாக வயதாக தங்களை பற்றி அதிகம் தெரிந்து கொள்கின்றனர், இன்னும் ஆதிக்கத்துடன் பவர்ஃபுல்லாக இருக்கின்றனர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் உலகை எதிர்க்க தைரியம் வருகிறது." என்று கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் பேட்ட ராப்.
- திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது பகீரா திரைப்படம்.
இதனையடுத்து விஜய் நடிப்பில் வெளியான வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் பேட்ட ராப். படத்தில் நாயகியாக வேதிகா நடித்துள்ளார்.
புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் இத்திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள வச்சு செய்யுதே வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடனமாடியுள்ளார். பாடல் மிக கலர்ஃபுல்லாகவும், சன்னி லியோனின் நடனம் மிக அழகாக அமைந்துள்ளது
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் ப்ளடி பெக்கர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் ப்ளடி பெக்கர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் கவின் மற்றும் நெல்சன் திலீப்குமார் நடிகர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நெலசன் மற்றும் கவின் அவர்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இவர்கள துபாயில் உள்ள மாலில் ஒன்றாக புகைப்படம் எடுத்துள்ளனர். அஜித் ஒயிட் ஷர்ட் மற்றும் பேண்ட் அணிந்து மிகவும் ஸ்டைலாகவுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- படத்தின் ஓடிடி அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுப் பல விருதுகளையும் வென்றுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் இசை இல்லாதது படத்திற்கு கூடுதல் சிறப்பம்சம். தன் வீட்டுப் பெண் வேறு ஒருவனை காதலித்ததால் அவரை ஊர் சாமியாரிடம் அழைத்து சென்றால் சரி ஆகிவிடும் என குடும்பத்துடன் கிழம்புகின்றனர். இந்த பயணமே திரைப்படத்தின் கதைக்களமாகும்.
படத்தின் ஓடிடி அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி அமேசான் பிரைம் மற்றும் சிம்பிலி சவுத் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது.
திரையரங்கில் இப்படத்தை பார்க்க தவறவிட்டவர்கள். ஓடிடி-யில் பார்த்து மகிழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






