தொலைக்காட்சியின் ஆஸ்கர்!.. 2024 எம்மி விருதுகள் அறிவிப்பு - சிறந்த சீரிஸ் இவைதான்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கான விருது விழாவான எம்மி விருதுகள் விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது நேற்றய தினம் நடந்த ரெட் கார்பெட் நிகழவில் தொலைக்காட்சி பிரபலங்கள் மிடுக்கான உடையணிந்து அணிவகுத்தனர்.
தொலைக்காட்சியின் ஆஸ்கர்!.. 2024  எம்மி விருதுகள் அறிவிப்பு -   சிறந்த சீரிஸ் இவைதான்
Published on

உலக அளவில் மார்க்கெட் கொண்டுள்ள ஹாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கான விருது விழாவான எம்மி விருதுகள் விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது . அந்த வகையில் 2024 எம்மி விருது வழங்கும் விழா நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றய தினம் நடந்த ரெட் கார்பெட் நிகழவில் தொலைக்காட்சி  பிரபலங்கள் மிடுக்கான உடையணிந்து அணிவகுத்தனர். தொடர்ந்து இன்றைய தினம் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது,

❧சிறந்த ரிலாலிட்டி போட்டி - டிரையேட்டர்ஸ் [Traitors]

❧சிறந்த டிராமா சீரிஸ் - ஷோ கன் [Shogun]

❧சிறந்த டாக் சீரிஸ் தி டெய்லி ஷோ [The Daily Show]

❧சிறந்த ஆன்தாலஜி சீரிஸ் - பேபி ரெய்ன்டீர் [Baby Reindeer]

❧சிறந்த நடிகர் விருது [காமெடி] - 'தி பியர்' [The Bear] சீரிஸ் நடிகர் ஜெர்மி ஆலன் வைட் [Jeremy Allen White]

❧சிறந்த துணை நடிகர் விருது [காமெடி] - 'தி பியர்' சீரிஸ் நடிகர் எபோன் மாஸ் [Ebon Moss]

❧சிறந்த நடிகை விருது [ காமெடி] ஹேக்ஸ் [Hacks] நடிகை ஜீன் ஸ்மார்ட்

❧சிறந்த துணை நடிகை விருது [காமெடி] - 'தி பியர்' சீரிஸ் நடிகை லிசா கோலன் [Liza Colon]

❧சிறந்த நடிகை விருது [டிராமா] - ஷோ கன் சீரிஸ் நடிகை அனா சவாய் [Anna Sawai]

❧சிறந்த துணை நடிகை விருது [டிராமா] - 'தி கிரவுன்' The Crown நடிகை எலிசபெத் டெபிக்கி [Elizabeth Debicki]

❧சிறந்த நடிகர் விருது [டிராமா] -ஷோ கன் சீரிஸ் நடிகர் ஹிரோயுகி சனாடா [Hiroyuki Sanada]

தொடர்ந்து பல்வேறு பிரிவுகளுக்கான எம்மி விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com