என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • டிமான்ட்டி காலனி 2 கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது.
    • திரைப்படம் இதுவரை உலகளவில் 55 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகத்தை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

    திரைப்படம் இதுவரை உலகளவில் 55 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தற்பொழுது திரைப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படமான கில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
    • ராகவா லாரன்ஸின் 25-வது படத்தை தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளார்.

    தமிழ் சினிமாவில் நடிப்பு, நடனம், படம் இயக்குவது போன்ற பல துறைகளில் ஜொலித்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் பல சிறந்த படங்களை இயக்கியும் நடித்தும் உள்ளார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அவரது 25- வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அதன்படி இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படமான கில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.

    இந்த படத்தை தெலுங்கில் ராக்ஷசடு, கில்லாடி படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளார்.

    ஏ ஸ்டூடியோஸ் எல்எல்பி சார்பில் கோனேரு சத்யநாராயணா, நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஹவ்விஷ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார். சத்யநாராயணாவும் ரமேஷ் வர்மாவும் இணையும் 3-வது படம் இது.

    மிகப்பெரிய ஆக்ஷன் அட்வென்சர் ஆரம்பம்' என்ற போஸ்டருடன் படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.

    இந்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் ரீமேக்கிலும் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பாக்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராகி வருகிறது.
    • அஜித் ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.

    அஜித் ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து இருக்கும் இரு படங்கள் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராகி வருகிறது.

    மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    மேலும் இந்த படத்தில் அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ், திரிஷா போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் படக்குழு ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.


    இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இந்த திரப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என்ற தகவல் பரவி வருகிறது. இது அஜித் ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
    • இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்பொழுது படத்தில் கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்யும் வீடியோவை படக்குழு வெளியிட்டு வருகின்றனர். அதில் முதலாக ரித்திகா சிங் கதாப்பாத்திர வீடியோவை வெளியிட்டனர். படத்தில் ரித்திகா சிங் காவல் அதிகாரியாக ரூபா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அடுத்ததாக நடிகை துஷாரா விஜயன் கதாப்பாத்திர அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளனர். துஷாரா விஜயன் இப்படத்தில் ஒரு ஆசிரியராக சரண்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது.

    இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • தூம் திரைப்படம் மிகப்பெரியளவில் வெற்றிப்பெற்ற திரைப்படமாகும்.

    சூர்யா அடுத்ததாக கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

    இதைத்தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யா இந்தியில் தூம்- 4 படத்தின் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தூம் திரைப்படம் மிகப்பெரியளவில் வெற்றிப்பெற்ற திரைப்படமாகும். அதன் முந்தைய பாகம் அனைத்தும் பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமாகும். கடைசியாக தூம் 3 திரைப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது. அமீர் கான் அதில் கதாநாயகனாக நடித்து இருந்தார்.

    இந்த தகவல் உண்மையெனில் சூர்யா நடிக்கும் முதல் திரைப்படம் இதுவே ஆகும். இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன படத்தின் இசையமைப்பாளராவர்.
    • சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தங்கலான் திரைப்படத்திற்கு இசையமைத்தார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் ஜி.வி பிரகாஷ். இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன படத்தின் இசையமைப்பாளராவர். இந்த இரண்டு படத்திலும் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே நல்ல ஹிட்டானது. 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மிண்டும் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றப் போவதாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஜி.வி பிரகாஷ் சமீபத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தங்கலான் திரைப்படத்திற்கு இசையமைத்தார். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ஜிவி இசையமைத்த எமர்ஜென்சி, லக்கி பாஸ்கர், அமரன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் , வீர தீர சூரன், வணங்கான் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.

    செல்வராகவன் தற்பொழுது சிலப் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ராயன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அடுத்து செல்வராகவன் எம்மாதிரியான கதையை இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.
    • படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

    2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார்.

    படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக கடந்த மாதம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.

    தற்பொழுது இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

    படக்குழு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். சுந்தர் சி இயக்கத்தில் அண்மையில் அரண்மனை 4 படத்தை இயக்கி மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து வடிவேலு நடிப்பில் கேங்கர்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.
    • ஜன சேனா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார்.

    ஆந்திர மாநில திரைப்பட நடன கலைஞராக இருக்கும் இளம்பெண் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது சைதராபாத், ராய்துருக்கம் போலீசில் பாலியல் புகார் அளித்தார்.

    புகார் குறித்து விசாரித்த போலீசார் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடன இயக்குனர் மீது அவரிடம் வேலை செய்யும் பெண் நடன கலைஞர் பலாத்கார புகார் அளித்துள்ள சம்பவம் தெலுங்கு திரைப்பட துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடிகரும், ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார்.

    தற்போது இவர் மீது பாலியல் புகார் எழுந்ததோடு, போலீசார் இவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கட்சியில் இருந்து நீக்கபட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஜன சேனா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜன சேனா கட்சி பணிகளில் இருந்து ஜானி ஒதுங்கி இருக்க வேண்டும். அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி நடைப்பெறவுள்ளது.

    ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்பொழுது படத்தில் கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்யும் வீடியோவை படக்குழு வெளியிட்டு வருகின்றனர். அதில் முதலாக ரித்திகா சிங் கதாப்பாத்திர வீடியோவை வெளியிட்டுள்ளனர். படத்தில் ரித்திகா சிங் காவல் அதிகாரியாக ரூபா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது.

    இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2024 ஆம் ஆண்டு தென்னிந்திய SIIMA விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
    • தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

    2024 ஆம் ஆண்டு தென்னிந்திய SIIMA விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக கடந்த செப்டம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதி துபாயில் நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

     

    தமிழில் விருது வென்ற நபர்களின் பட்டியல்

    சிறந்த படம் - நெலசன் திலிப்குமார் {ஜெயிலர்}

    சிறந்த நடிகர் - சீயான் விக்ரம் [ பொன்னியின் செல்வன் 2]

    சிறந்த நடிகை - நயன்தாரா { அன்னப்பூரணி}

    சிறந்த நடிகர் க்ரிட்டிக் சாய்ஸ் - சிவகார்த்திகேயன் {மாவீரன்}

    சிறந்த நடிகை கிரிட்டிக் சாய்ஸ் - ஐஷ்வர்யா ராய் [ பொன்னியின் செல்வன் 2]

    சிறந்த வில்லன் நடிகர் - அர்ஜுன் {லியோ}

    சிறந்த இயக்குனர் க்ரிட்டிக் சாய்ஸ் - அருண் குமார் {சித்தா}

    சிறந்த பாடலாசிரியர் - விக்னேஷ் சிவன் {ரத்தமாரே}

    மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர்கள் - கவின், தாதா

    இந்த ஆண்டின் அசாதாரண நடிகர் - எஸ்.ஜே. சூர்யா

    சிறந்த நகைச்சுவை நடிகர் - யோகி பாபு

    சிறந்த துணை நடிகை - சரிதா ஈஸ்வரி, மாவீரன்

    சிறந்த அறிமுகம் - ஹிருது ஹாரூன்

    சிறந்த துணை நடிகர் - வசந்த் ரவி, ஜெயிலர்

    சிறந்த அறிமுக இயக்குனர் - விக்னேஷ் ராஜா, போர் தோழில்

    சிறந்த அறிமுக நடிகை - ப்ரீத்தி அஞ்சு அஸ்ரானி, அயோதி

    சிறந்த பின்னணி பாடகர் (ஆண்) - ஷான் ரோல்டன், நான் காலி - குட் நைட்

    இந்த ஆண்டின் வளர்ந்து வரும் தயாரிப்பாளர் - திட்டக்குடி கண்ணன் ரவி, ராவண கோட்டம்

    சிறந்த ஒளிப்பதிவாளர் - தேனீஸ்வர், மாமன்னன்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.

    இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கடைசியாக நடித்த 'மழைப்பிடிக்காத மனிதன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, 'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

    இப்படத்தில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.

    செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. படத்தில் நடுத்த நடிகர்களும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர். விஜய் ஆண்டனி மேடையில் பேசுகையில், கவுதம் வாசுதேவ் மேனனிடம் தனக்கு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க டிப்ஸ் தருமாறு மற்றும் பின் மேடையிலயே ஒரு டெமோ காட்டும்படி கேட்டுக் கொண்டார்.

    கவுதம் வாசுதேவ் மேனனும் எந்த வித தயக்கமும் இன்றி அவரது படத்தின் பிரபல வசனமான விண்ணை தாண்டி வருவாய் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வசனங்களை பேச சொன்னார். விஜய் ஆண்டனியும் அங்கு இருந்த நாயகிகளிடம் அந்த வசனத்தை பேசி ஒத்திகைப் பார்த்தார். இந்த சம்பவம் மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ளது. இந்த காட்சி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
    • இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து படக்குழு அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×