13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஆயிரத்தில் ஒருவன் கூட்டணி

செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன படத்தின் இசையமைப்பாளராவர்.சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தங்கலான் திரைப்படத்திற்கு இசையமைத்தார்.
13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஆயிரத்தில் ஒருவன் கூட்டணி
Published on

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பவர் ஜி.வி பிரகாஷ். இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன படத்தின் இசையமைப்பாளராவர். இந்த இரண்டு படத்திலும் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே நல்ல ஹிட்டானது. 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மிண்டும் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றப் போவதாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜி.வி பிரகாஷ் சமீபத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தங்கலான் திரைப்படத்திற்கு இசையமைத்தார். படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ஜிவி இசையமைத்த எமர்ஜென்சி, லக்கி பாஸ்கர், அமரன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் , வீர தீர சூரன், வணங்கான் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது.

செல்வராகவன் தற்பொழுது சிலப் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ராயன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அடுத்து செல்வராகவன் எம்மாதிரியான கதையை இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com