என் மலர்
சினிமா செய்திகள்
- நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது இளம்பெண் நடன இயக்குநர் பாலியல் புகார் அளித்தார்.
- ஜன சேனா கட்சியில் இருந்து ஜானி நீக்கப்பட்டார்.
ஆந்திர மாநில திரைப்பட நடனக் கலைஞராக இருக்கும் இளம்பெண் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது சைதராபாத், ராய்துருக்கம் போலீசில் பாலியல் புகார் அளித்தார்.
புகார் குறித்து விசாரித்த போலீசார் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பலாத்காரம், கொலை மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடன இயக்குநர் மீது அவரிடம் வேலை செய்யும் பெண் நடனக் கலைஞர் பலாத்கார புகார் அளித்துள்ள சம்பவம் தெலுங்கு திரைப்படத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இருந்து நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தெலுங்கானா ஃபிலிம் சேம்பரில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து தெலுங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் ஒரு கமிட்டி அமைத்து இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் தெலுங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்து நடன இயக்குநர் ஜானி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெகுதூரம் துரத்திச்சென்று லாரியை மடக்கினார்.
- விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவரை கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பட்டணங்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேசன். சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு டிரெய்லர் லாரி வந்தது.
அந்த லாரி சைக்கிளில் சென்ற ரமேசன் மீது மோதியது. இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இருந்த போதிலும் அவர் மீது மோதிய லாரி நிற்காமல் சென்றது. இந்நிலையில் அந்த வழியாக நடிகை நவ்யா நாயர் தனது காரில் வந்தார்.
அவர் சைக்கிளில் சென்றவர் மீது மோதிய லாரி நிற்காமல் சென்றதை பார்த்தார். அவர் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அந்த லாரியை தனது காரில் பின் தொடர்ந்தார். காரின் ஹாரனை அடித்து லாரியை நிறுத்துமாறு சிக்னல் கொடுத்தார்.
ஆனால் லாரி டிரைவர், லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றார். இருந்தபோதிலும் நடிகை நவ்யா நாயர் விடாமல் வெகுதூரம் துரத்திச்சென்று அந்த லாரியை மடக்கினார்.
இதையடுத்து லாரியை டிரைவர் நிறுத்திவிட்டார். இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நடிகை நவ்யா நாயர் தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு பட்டணங்காடு உதவி சப்-இன்ஸ்பெக்டர் தெரசா மற்றும் போலீசார் சென்றனர். அவர்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவரை கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
லாரி மோதியதில் படுகாயமடைந்த ரமேசனை நெடுஞ்சாலை ரோந்து போலீசார், தங்களின் வாக னத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். முதலில் துறவூர் தாலுகா ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது .
பின்பு மேல் சிகிச்சைக் காக தனியார் ஆஸ்பத்திரியில் ரமேசன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை துணிச்சலாக காரில் துரத்திச்சென்று மடக்கிப்பிடித்த நடிகை நவ்யா நாயரை போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நான் எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.
- இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறோம் என்றார்.
இயக்குனர் கொரட்டல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தேவரா'. இந்த படத்தில் ஜான்வி கபூர் படித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகிற 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனிடையே இப்படத்தில் நடித்தவர்கள் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், கலையரசன், அனிருத் என பலரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அப்போது ஜான்வி கபூர் தனது பேச்சை தமிழில் ஆரம்பித்தார். அவர் பேசுகையில், சென்னை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். எனது அம்மாவுடன் இருந்த சிறந்த நினைவுகள் எல்லாம் சென்னையில்தான் இருக்கிறது. நீங்கள் எனது அம்மா மீது காட்டிய அன்புதான் நானும், எனது குடும்பமும் இந்த நிலைமையில் இருப்பதற்கான காரணம். நான் எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். எனது அம்மாவுக்கு கொடுத்த அன்பை எனக்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறோம் என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படம் வருகிற 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
- ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், கலையரசன், அனிருத் என பலரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இயக்குனர் கொரட்டல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தேவரா'. இந்த படத்தில் ஜான்வி கபூர் படித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகிற 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனிடையே இப்படத்தில் நடித்தவர்கள் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், கலையரசன், அனிருத் என பலரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஜூனியர் என்.டி.ஆர், சென்னை எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான இடம். என்னுடைய ஃபேவரைட் இயக்குனர் வெற்றிமாறன். சார் என்னுடன் ஒரு படம் பண்ணுங்கள். அதை நேரடி தமிழ் படமாக பண்ணலாம். தெலுங்கில் டப் செய்யலாம் என்றார்.
" I'm gonna ask my favourite director #Vetrimaaran sir, please do a straight Tamil film with me. We can dubbed in Telugu " - #JrNTR
— Ayyappan (@Ayyappan_1504) September 17, 2024
pic.twitter.com/IQlG9e1MQF
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இறுதி சடங்கு இன்று மாலை பெங்களூருவில் நடக்கிறது.
- 600-க்கும் மேற்பட்ட படங்களில் சி.ஐ.டி. சகுந்தலா நடித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை சி.ஐ.டி. சகுந்தலா. இவர் பெங்களூருவில் உள்ள ஜஸ்வந்த்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று மாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி சி.ஐ.டி. சகுந்தலா மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. இறுதி சடங்கு இன்று மாலை பெங்களூருவில் நடக்கிறது.
மரணம் அடைந்த சி.ஐ.டி. சகுந்தலாவுக்கு செல்வி என்ற மகள் இருக்கிறார்.
சேலத்தை சேர்ந்த சி.ஐ.டி. சகுந்தலா ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்தார். 1960-ம் ஆண்டு 'கைதி கண்ணாயிரம்' என்ற படத்தில் நடன கலைஞராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
1970-ம் ஆண்டு வெளியான சி.ஐ.டி. சங்கர் என்ற படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போது முதல் சி.ஐ.டி. சகுந்தலா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.
படிக்காத மேதை, நினைவில் நின்றவள், ஒளிவிளக்கு, என் அண்ணன், ஜஸ்டிஸ் விஸ்வநாதன் புதிய வாழ்க்கை, இதய வீணை, ராஜராஜ சோழன், தேடி வந்த லட்சுமி, பாரத விலாஸ், தெய்வ பிறவி போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

மலையாளம், தெலுங்கு, கன்னட படங்கள் என 600-க்கும் மேற்பட்ட படங்களில் சி.ஐ.டி. சகுந்தலா நடித்துள்ளார்.
நடன கலைஞராக அறிமுகம் ஆகி பின்னர் கதாநாயகியாக உயர்ந்தார். எம்.ஜி.ஆர்.-சிவாஜி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள அவர் 1998-ம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
அதன் பிறகு டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார். பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்தார். குடும்பம், சொந்தம், வாழ்க்கை, அக்னி சாட்சி, கஸ்தூரி, பூவிலங்கு, கல்யாண பரிசு, தமிழ்ச்செல்வி போன்ற பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சி.ஐ.டி. சகுந்தலா மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் "ஜீப்ரா".
- பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகிறது.
ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் "ஜீப்ரா". ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் 2024 அக்டோபர் 31 ஆம் தேதி பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகிறது.
தமிழில் முதல் ஓடிடி திரைப்படமான பெண்குயின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான திரில்லர் திரைப்படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
ZEE தமிழ் தொலைக்காட்சியில், பெரும் வெற்றிபெற்ற "செம்பருத்தி" சீரியலின் தயாரிப்பாளர்கள், தங்களது முதல் திரைப்படமாக இப்படத்தினை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.
அரசின் அதிகாரமிக்க உலகில் நிகழும், நிதிக்குற்றங்களை ஆராயும் இப்படத்தின் கதைக்களம், ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். மூன்று வெவ்வேறு கதைகள் ஒன்றாக இணையும் இப்படத்தில், தென்னிந்தியத் திரைத்துறையின் மூன்று முக்கிய நட்சத்திரங்கள், ஒவ்வொரு கதையிலும் முதன்மைப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். தமிழிலிருந்து சத்யராஜ், தெலுங்கு சினிமாவில் இருந்து சத்யதேவ், கன்னடத்தைச் சேர்ந்த தனஞ்சயா என நட்சத்திர நடிகர்கள் இப்படத்திற்காகக் கைகோர்த்திருக்கின்றனர்.
இவர்களுடன், பிரபல நடிகர்களான பிரியா பவானி சங்கர், ஜெனிஃபர் பிசினாடோ, சுனில் வர்மா, சுரேஷ் மேனன் மற்றும் சத்யா அக்கலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர்.
சலார் மற்றும் கேஜிஎஃப் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது அதிரடியான பின்னணி இசை, இப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.
இப்படத்தை ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், எஸ்.என்.ரெட்டி, பால சுந்தரம் மற்றும் தினேஷ் சுந்தரம் இணைந்து, மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படைப்பாகத் தயாரித்துள்ளனர்.
நம்மைச் சுற்றி நிகழும் பெரும் நிதிக்குற்றத்தின் நாம் அறிந்திராத பக்கங்களைச் சொல்லும் ஒரு அதிரடி சஸ்பென்ஸ், திரில்லர் அனுபவத்திற்குத் தயாராகுங்கள். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சேவகர்'.
- இப்படத்தின் ட்ரெய்லர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது.
சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சேவகர்'.இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது.
விநியோகஸ்தர் ஜெனிஷ் விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினார். அவர் பேசும்போது, இந்தப் படத்தின் கதை விஜய்க்காக உருவாக்கப்பட்டது. அப்படிப்பட்ட கதையில் பிரஜின் நடித்துள்ளார். சென்சாரிலேயே இந்தப் படத்தைப் பாராட்டினார்கள்.
சேவகர்' படத்தின் இயக்குநர் சந்தோஷ் கோபிநாத் பேசும்போது ,
"எனக்கு தமிழ் நாட்டின் மீது, திரை உலகத்தின் மீது மிகுந்த மரியாதை உண்டு . நல்ல நல்ல புதிய முயற்சிகளை வரவேற்பார்கள். அந்த நம்பிக்கையில் தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம்.
படத்தின் நாயகன் பிரஜின் பேசும் போது,
" ஒவ்வொரு ஊரிலும் ஊருக்கு நல்லது செய்யும் சேவகர்கள் நாலு பேர் இருப்பார்கள்.அவர்கள் ஊருக்கு எதாவது நல்லது செய்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் ஒரு குழுவாக இருப்பார்கள். அப்படி நல்லது செய்பவர்களைத் தடுக்கும் தீய சக்திகள் இருப்பார்கள். அப்படி நல்லது செய்யும் சேவகனும் அவனை தடுக்கும் தீய சக்திகளையும் பற்றிச் சொல்வது தான் இந்தப் படம். அப்படி ஒரு பாத்திரத்தில் தான் நான் நடித்துள்ளேன்.
இயக்குனர் கே.பாக்கியராஜ் பேசியதாவது
தயாரிப்பாளர் இல்லை என்றால் இயக்குநர் இல்லை நடிகர் இல்லை என்று கே. ராஜன் சொன்னார் .கதை இல்லை என்றால் தயாரிப்பாளரே இல்லை .கதை இல்லை என்றால் சினிமாவில் எதுவுமே முடியாது.
ஒருவருக்கு சினிமா பிடித்து விட்டது என்றால் அது விடவே விடாது. இந்தத் தயாரிப்பாளர் அப்படித்தான் இங்கே வந்திருக்கிறார் .
இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை.
- விஜயும் தவறான பாதையில் செல்வது தான் வருத்தமாக உள்ளது.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதை பார்த்தால் விஜய் தவறான பாதையில் செல்கிறாரோ என்று வருத்தமாக உள்ளது என்று இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மோகன் ஜி. "நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும், அதுவும் இளைஞர்களுக்கு பிடித்தவர் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான். ஆனால், விஜயும் தவறான பாதையில் செல்வது தான் வருத்தமாக உள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. ஆனால், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னது வருத்தமாக உள்ளது.
இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்னால், அது இந்துக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பது போல மாறிவிடும். ஏனெனில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பது போல, ஒரு தோற்றம் வந்துவிடும் என்பதால், இந்துவாக இருக்கும் பலரும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல பயப்படுகிறார்கள். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வது என்பது வேறு, பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பது வேறு, இந்த இரண்டையும் ஒன்றாக பார்க்கும் மனநிலை முதலில் மாற வேண்டும்" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சந்தீப் வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான படம் அனிமல்.
- டிரிப்தி டிம்ரி , விக்கி கவுசலுடன் பேட் நியூஸ் என்ற படத்தில் நடித்தார்.
சந்தீப் வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான படம் அனிமல். படத்தில் ராஷ்மிகா மந்தனா, பாபிதியோல், அனில் கபூர், டிரிப்தி டிம்ரி உள்பட பலர் நடித்திருந்தனர்.
படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் படத்தில் டரிப்தி டிம்ரி நடித்த கதாபாத்திரம் திரை உலகில் பேசும் பொருளானது. கடும் விமர்சனத்துக்குள்ளான அவரது கதாபாத்திரம் டிரிப்தி டிம்ரியை இந்திய அளவில் பிரபலமாக்கியது.
டிரிப்தி டிம்ரி அடுத்ததாக விக்கி கவுசலுடன் பேட் நியூஸ் என்ற படத்தில் நடித்தார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் ஷாருக்கான் மீது தனக்கு ஏற்பட்டுள்ள ஈர்ப்பு பற்றி கூறியுள்ளார்.
அதில், ஷாருக்கானை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு 5 அல்லது 6 வயது இருக்கும். அப்போதே நான் ஷாருக்கானை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று என் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் கூறினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கன்னட திரை உலகிலும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகைகள் புகார்.
- கன்னட திரை உலகிலும் பாலியல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள திரை உலகில் பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பற்றி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மலையாள திரை உலகை தொடர்ந்து தமிழ் திரை உலகிலும் பாலியல் தொந்தரவு நடந்ததாக சில நடிகைகள் கூறினர்.
தமிழ், மலையாள சினிமாவை தொடர்ந்து கன்னட திரை உலகிலும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகைகள் சஞ்சனா, நீது ஆகியோர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளனர்.
கன்னட சினிமா உலகில் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது. இதுபற்றி கர்நாடக சினிமா வர்த்தக சபை கூட்டத்தில் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லை பற்றிய புகார்கள் குறித்து பேசவிடாமல் தடுத்துவிட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக முதல்மந்திரி சித்தராமையாவுக்கு கன்னட இயக்குனர் கவிதாலங்கேஷ் தலைமையிலான குழுவினர் சினிமா உலகில் பாலியல் தொல்லை பற்றி விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என கடிதம் அனுப்பினார். கன்னட திரை உலகிலும் பாலியல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வந்த படம் வாழை.
- வாழைத்தார் சுமக்கும் தொழிலாளியின் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வந்த படம் வாழை. தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் பகுதியில் வாழைத்தார் சுமக்கும் தொழிலாளியின் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது.
படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. விழாவில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், கிராமத்து பொதுமக்கள் பங்கேற்றனர்.
விழாவிற்காக கிராம மக்கள் 2 பேருந்துகளில் வரவழைக்கப்பட்டிருந்தனர். விழாவில் மாரி செல்வராஜ் பேசியதாவது:-
வாழை படம் இந்த அளவுக்கு நன்றாக வருவதற்கு காரணம் என் முந்தைய பட தயாரிப்பாளர்கள்தான். நான் படம் பண்ணும் போது அவ்வளவு சுதந்திரம் கொடுத்தார்கள்.
வாழை படத்தை ரெட் ஜெயண்ட் செண்பகமூர்த்தி பார்த்துவிட்டு வசூலாக எப்படி பண்ணும்னு தெரியல. ஆனால் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கி தரும் என்று சொன்னார். படத்தின் இறுதிக்காட்சியில் பூங்கொடி டீச்சர் (நிகிலாவிமல்) ஏன் வரவில்லை என்று பலரும் கேட்டனர்.
அவரது தேதி அப்போது கிடைக்கவில்லை. கடைசியில் அம்மா மடியில் சிவனானந்தன் படுத்திருப்பான். அம்மாவிற்கு பதில் டீச்சர் மடியில் படுத்திருக்கிற மாதிரிதான் காட்சி இருக்க ஆசைப்பட்டேன். விபத்தின் போது இஸ்லாமிய சகோதரர்கள்தான் காப்பாற்றினார்கள் என்ற உண்மை படத்தின் மூலமாக வெளிவந்துள்ளது.
வாழை படத்தின் 2-ம் பாகத்தை நிச்சயமாக எடுப்பேன். முதல் பாகத்தின் பின்னால் இருக்கும் கதையை சிவனானந்தனை வைத்து எடுப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் பிரபல இசையமைப்பாளர் ஆவார்.
- மியூசிக் வீடியோ சார்பில் தயாராகியுள்ள இந்த ஆல்பத்திற்கு எமில் மொஹம்மது இசையமைத்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் பிரபல இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவருமான ஏ.ஆர்.ரெஹைனா சினிமாவையும் தாண்டி சுயாதீன பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் அவரது குரலில் சர்வதேச தரத்தில் லேட்டஸ்ட் ஆக உருவாகியுள்ள ஆல்பம் தான் 'மாத்திக்கலாம் மாலை'.
மியூசிக் வீடியோ சார்பில் தயாராகியுள்ள இந்த ஆல்பத்திற்கு எமில் மொஹம்மது இசையமைத்துள்ளார். மணி வி.நாயர் இயக்கியுள்ள இந்த ஆல்பத்தில் சனூஜ் மட்டும் நடிகை கோமல் சர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை சுகாசினி, இயக்குநர் மாதேஷ், பாடகி பாப் ஷாலினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஏ.ஆர் ரெஹைனா பேசும்போது பிரபலமான ஹீரோக்களின் படங்களை பார்த்துவிட்டு தான் பாடல்கள் ஹிட் ஆகி வந்தன. ஆனால் இப்போது படங்களில் பாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகின்றது. உலகம் முழுவதும் சுயாதீன பாடல்கள் மூலமாக இசைக்கலைஞர்கள் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்கள். ஆனால் இங்கே தான் நாம் திரையுலகையை சார்ந்து அதை மட்டுமே நம்பிக்கொண்டே இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். பாடல் என்பது சினிமாவில் இருந்தால் என்ன, தனி ஆல்பமாக இருந்தால் என்ன ? ரசிகர்கள் எப்போதும் கேட்கத்தான் போகிறார்கள்.
இந்த பாடலை ரிலீஸ் வீடியோக்களாக வெளியிடுபவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன அதில் அதிகம் பார்க்கப்படும் வீடியோவுக்கு பரிசாக இரண்டு பேருக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






