என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பேச்சி படத்தை ராமசந்திரன் இயக்கியுள்ளார்.
    • திரைப்படத்தின் ஓடிடி குறித்து தற்பொழுது அப்டேட் வெளியாகியுள்ளது,

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் பால சரவணன். விஜய் டி.வியில் சின்னத்திரையில் நடித்து பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகினார். சசிகுமார் நடிப்பில் வெளிவந்த குட்டிப்புலி படத்தின் மக்களின் கவனத்தை பெற்றார்.

    அதைத்தொடர்ந்து டார்லிங் மற்றும் திருடன் போலீஸ் திரைப்படத்தில் பால சரவணனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தாண்டு வெளியான அயலான், இங்க நான் தான் கிங்கு, ஹிட் லிஸ்ட் போன்ற வெற்றிப் படங்களில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கடந்த மாதம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி பேச்சி எனும் திகில் நிறைந்த திரில்லர் படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இவருடன் காயத்ரி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ராமசந்திரன் இயக்கியுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான திரைப்படமாக அமைந்தது.

    திரைப்படத்தின் ஓடிடி குறித்து தற்பொழுது அப்டேட் வெளியாகியுள்ளது, திரைப்படம் நாளை முதல் ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரைப்படத்தை திரையரங்குகளில் காண தவறவிட்டவர்கள். ஓடிடியில் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
    • இது தனுஷ் நடிக்கும் 52 ஆவது படமாகவும், அவர் இயக்கும் 4 ஆவது படமாகும்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ். சமீபத்தில் இவர் நடித்து, இயக்கி வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷ் நடிப்பில் வெளியான 50 ஆவது படமாக ராயன் அமைந்தது.

    ராயன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கும் நான்காவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தில் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தனுஷ் நடிக்கும் 52 ஆவது படமாகவும், அவர் இயக்கும் 4 ஆவது படமாகும்.

     


    "இட்லி கடை" என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை கிரன் கௌஷிக் மேற்கொள்ள படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா ஜிகே மேற்கொள்கிறார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரிக்கின்றனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷேன் நிகாம் தற்போது 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கியுள்ளார்.
    • படத்தின் முதல் பாடலான தை தக்க கல்யாணம் என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கிஸ்மத்' படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம்.

    தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 'இஷ்க்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'ஆர்டிஎக்ஸ்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

    இதன் மூலம் மலையாள சினிமாவில் அடுத்து வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார் ஷேன் நிகாம்.

    ஷேன் நிகாம் தற்போது 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கியுள்ளார்.

    இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர். வசந்தகுமார் படத்தொகுப்பு செய்கிறார்.

    இந்நிலையில், ஷேன் நிகாம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் 'மெட்ராஸ்காரன்' திரைப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்தின் முதல் பாடலான தை தக்க கல்யாணம் என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் கல்யாண வைபில் மிக ஜாலியான பாடலாக அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏ.டி. படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது
    • பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராஜா சாப் படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

    தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்து வருபவர் பிரபாஸ். பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து இவரது நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வந்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து வருகிறது.

    சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏ.டி. படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலையும் வாரி குவித்தது.

    இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் 5 புதிய படங்கள் உருவாகி வருகிறது.

    ராஜா சாப்:- பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராஜா சாப் படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

    ஸ்பிரிட்:- சந்தீப் வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ஸ்பிரிட் படம் ரூ.350 கோடியில் உருவாகிறது.

    கல்கி 2898 ஏ.டி. 2-ம் பாகம்:- நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாக உள்ள கல்கி 2898 ஏ.டி. படத்தின் பட்ஜெட் ரூ.700 கோடி ஆகும்.

    சலார்-2:- நீல் பிரசாந்த் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள சலார்-2 படம் ரூ.350 கோடியில் உருவாகிறது.

    மேலும் ஹனு ராகவாடி இயக்கத்தில் பெயரிடப்படாமல் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் ரூ.300 கோடியில் தயாராகிறது. அதிக பொருட் செலவில் பிரபாசின் நடிப்பில் வெளியாக இருக்கும் 5 படங்களின் மொத்த பட்ஜெட் ரூ.2100 கோடி என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தை ஹேஷ்டேக் FDFS தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
    • படத்திற்கு டோபமைன் @ 2.22 என தலைப்பிட்டுள்ளனர்.

    கடந்த மார்ச் மாதம் அறிமுக இயக்குனரான பாஸ்கல் வெப்பம் குளிர் மழை படத்தை இயக்கினார். ஹேஷ்டேக் FDFS நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    இந்த படத்தில், திரவ் மற்றும் இஸ்மத் பானு ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாகி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். எம்.எஸ். பாஸ்கர் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார். திரைப்படம் வெளியாகி மக்களிடையேவும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத் தொடர்ந்து திரவ் அடுத்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை ஹேஷ்டேக் FDFS தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு டோபமைன் @ 2.22 என தலைப்பிட்டுள்ளனர்.

    இப்படம் 7 வெவ்வேறு சூழலில் இருந்த வந்த நபர்கள் அவர்களின் வாழ்க்கை ஒரு நடக்கப் போகிற கொலையில் ஒன்று சேர்வது போலவும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது என படக்குழு கூறியுள்ளது.

    படத்தில் திரவ், விஜய் டியூக், விபிதா, நிகிலா சங்கர், சத்யா, மற்றும் பலர் நடித்துள்ளனர். திரவ் இயக்கும் இப்படத்திற்கு அவரே படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளார். மொத்த படமும் சென்னையை சுற்றி 20 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் 20 ஆம் தேதி சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. படத்தில் 2.22 மணிக்கு ஒரு கொலை நடக்க போகிறது எனவும் இது டோபமைனின் எஃபக்டினால் இந்த கொலை நடக்கவிருக்கிறது என காட்சிகள் அமைந்துள்ளது. இந்த கொலை எதற்காக நடக்கவிருக்கிறது என சஸ்பென்ஸ் மிகுந்த டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜானி மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் நர்சிங்கி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
    • தலைமறைவான ஜானியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    தமிழ், தெலுங்கு திரை உலகில் பிரபல நடன இயக்குநராக திகழ்பவர் ஜானி.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் மீது பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்புகளில் தன்னை ஜானி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்தார்.

    இதையடுத்து ஐதராபாத் அருகில் உள்ள நர்சிங்கி போலீசார் விசாரணை நடத்தி ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது.

    தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் நடன இயக்குநராக ஜானி பணிபுரிவதற்கு பிலிம் சேம்பர் தடை விதித்தது. மேலும் பவன் கல்யாண் கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.

    தனக்கு 16 வயதாக இருக்கும்போது ஜானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் குற்றம் சாட்டினார். மேலும் அதற்கான 40 பக்க ஆவணங்களை தெலுங்கானா மகளிர் ஆணையத்தில் இளம்பெண் சமர்பித்தார்.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது பற்றி மகளிர் ஆணையத்தின் தலைவியான நெரெல்லி சாரதா கூறுகையில், திரைப்பட துறையில் இது போன்ற வழக்குகளை விசாரிக்க உயர்மட்ட கண்காணிப்பு குழுவும் அமைக்கப்படும். இந்த வழக்கை மிகவும் தீவிரமாக நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று கூறினார்.

    இந்நிலையில் ஜானி மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் நர்சிங்கி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

    இதை தொடர்ந்து தலைமறைவான ஜானியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கோவாவில் தலைமறைவாக இருந்த அவரை தெலுங்கானா போலீசார் தற்போது கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    காவாலா, ரஞ்சிதமே, அரபிக்குத்து உள்பட பல தமிழ் பாடல்களுக்கு நடனம் அமைத்தவரும் சமீபத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டவருமான ஜானி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டிருப்பது திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
    • டீசர் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வெளியானது.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகி வரும் படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.


    படத்தின் க்ளிம்ஸ் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு ஜூலை 22-ந் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வெளியானது.

    இந்த இரு வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஜூலை மாதம் வெளியான 'ஃபயர் சாங்...' எனும் முதல் பாடல் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.


    இதையடுத்து கடந்த மாதம் படத்தின் டிரைலர் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. இப்படி அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிட்டு வந்த படக்குழு அக்டோபர் 10-ந் தேதி வெளியிடுவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது.

    ஆனால் அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் படம் வருவதால், அந்த தேதியில் படம் வெளியாகவில்லை என சமீபத்தில் நடந்த கார்த்தியின் மெய்யழகன் பட இசை வெளியீட்டில் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து புது ரிலீஸ் தேதி எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நவம்பர் 14-ந் தேதி படத்தை வெளியிடுவதாக கங்குவா தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் கூலி.
    • கூலி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

    ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    லோகேஷ் மற்றும் ரஜினிகாந்த் இணைவதால், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே அதிகரித்து காணப்படுகிறது. பல்வேறு முன்னணி திரை பிரபலங்கள் நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்தது. இதனை பலரும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர, படக்குழு அதிர்ச்சி அடைந்தது.

    படப்பிடிப்பு வீடியோ வெளியானது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஒற்றை பதிவு காரணமாக பலரது இரண்டு மாத கால கடின உழைப்பு வீணாகி விடுகிறது. இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என அனைவரிடமும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவை ஒட்டுமொத்த அனுபவத்தையும் பாதித்து விடும். நன்றி," என குறிப்பிட்டுள்ளார்.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
    • இப்படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ளது.

    இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கடைசியாக நடித்த 'மழைப்பிடிக்காத மனிதன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, 'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

    இப்படத்தில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.

    செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், ஹிட்லர் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. ட்ரைலரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷ் தொடர்பாக விசாரிக்க கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியுள்ளதாக பெப்சி நிர்வாகத்தின் பத்திரிக்கை செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
    • ஃபெப்சி தொழிலாளிகள் உட்பட அனைவர் நலனையும் கருத்தில் கொண்டே இதுநாள் வரை தென்னிந்திய நடிகர் சங்கம் செயலாற்றி வருகிறது

    நடிகர் தனுஷ் விவகாரத்தில் கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தி உள்ளதாக ஃபெப்சி செய்தி வெளியிட்டுள்ளதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "தமிழ்த் திரைப்பட உலகில் ஒட்டுமொத்த மறு சீரமைப்பை கருத்தில் கொண்டு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இடையே நடந்த பலகட்ட பேச்சு வார்த்தைகளில், ஃபெட்சி உட்பட அனைத்து தமிழ் திரையுலக தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு. தென்னிந்திய நடிகர் சங்கம், ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 37 பரிந்துரைகளை, உடனடியாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் வழங்கியது.

    நடிகர் சங்க உறுப்பினர் தனுஷ் அவர்கள் விஷயத்திலும் தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னெடுத்த முயற்சியால் தீர்வு ஏற்பட்டு தனுஷ் அவர்களின் படப்பிடிப்பு தற்சமயம் நடைபெற்று வருகிறது.

    இதனிடையே தனுஷ் அவர்கள் தொடர்பாக எந்தவித விவாதமும் இல்லாத நிலையில் நேற்று (17.09.2024) திடீரென தனுஷ் அவர்கள் தொடர்பாக விசாரிக்க கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியுள்ளதாக பெப்சி நிர்வாகம் பத்திரிக்கை செய்திகள் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

    தயாரிப்பாளர்கள் - நடிகர்கள் இடையிலான சிக்கல்களை அந்த இரு அமைப்புகளும் சுமூகமாக கையாண்டு வரும்போது, எந்த முகாந்திரமும் இன்றி ஃபெப்சி நிர்வாகம் வலிய தலையிட்டு, இல்லாத ஒரு கருத்தை தெரிவித்து இருப்பது பெரும் கண்டனத்துக்குரியது.

    ஃபெப்சி நிர்வாகமே முன்னின்று திரைத்துறை சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு காண்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த முயலும் இந்த செயலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம் தெரிவிக்கிறது.

    ஏனெனில் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் இடையே சிக்கல் எழுந்தால், அதை பரஸ்பரம் பேசித் தீர்வு காணும் அனுபவமும், ஆற்றலும் உள்ளவர்கள் இரு அமைப்புகளிலும் உள்ளனர் என்பதை உறுதிப்பட நினைவுபடுத்துகிறோம்.

    மேலும் ஃபெப்சி தொழிலாளிகள் உட்பட அனைவர் நலனையும் கருத்தில் கொண்டே இதுநாள் வரை தென்னிந்திய நடிகர் சங்கம் செயலாற்றி வருகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம். அதற்கு உதாரணமாக, தமிழ்த் திரையுலகின் தொழிலாளிகளுக்கு மிகக் கடுமையான இன்னல்கள் ஏற்படும் எல்லா சூழல்களிலும், அனைவருக்கும் முன்பாக தென்னிந்திய நடிகர் சங்கமே நலத்திட்டங்களையும் முன்னெடுத்து, ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது என்பதை, கொரோனா உள்ளிட்ட காலங்களில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் செய்த அளப்பரிய உதவிகள் பறைசாற்றும். அதை ஃபெப்சி நிர்வாகமும் மறுக்க முடியாது என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.

    ஆகவே உழைக்கும் தொழிலாளிகளை பின்புலமாக நிறுத்தி, ஃபெப்சி நிர்வாகம் தங்களை அதிகார மையமாக சித்தரித்துக் கொண்டு, பிற சங்கங்களின் அலுவல்களில் தலையிடுவதைத் தவிர்த்து, அந்த கவனத்தை தங்கள் அமைப்பை சார்ந்தவர்கள் நலனில் செலுத்துவது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதை திரைத் தொழிலாளர்கள் மீது உள்ள உண்மையான அக்கறையால் அறிவுறுத்துகிறோம்.

    அத்துடன், திரைத்துறையில் பலகாலமாக நிலவும் பொது அமைதியையும் நல்லிணக்கத்தையும் குலைக்க முற்படும் ஃபெப்சி நிர்வாகத்தின் இத்தகைய வரம்பு கடந்த செயல்பாடுகளையும் வீண் சர்ச்சை ஏற்படுத்தும் அறிக்கைகளையும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் கண் கண்டிக்க வேண்டுமென தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்துகிறது" என்று தெரிவிதிக்கப்ட்டுள்ளது.

    • வேட்டையன் படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.
    • இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் "மனசிலாயோ" சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    முதல் பாடலைத் தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. இது குறித்து இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வேட்டையன் படத்தின் ஹண்டர் வண்டார் பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என்று குறிப்பிட்டு, பாடலின் ப்ரோமோ வீடியோவை பகிர்ந்துள்ளார்.



    இதைத் தொடர்ந்து வேட்டையன் படத்தில் நடிகர் பகத் பாசில் பேட்ரிக் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு தனி வீடியோ வெளியிட்டு தெரிவித்து உள்ளது. 



    வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது. இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 5 ஆம் தேதி தி கோட் படம் வெளியாகியிருந்தது
    • ரூ.1000 கோடி வரை வசூலிக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்திருந்தது.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. திரைப்படம் வெற்றிகரமாக இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் கோட் படம் வெளியாகி 13 நாட்களில் 413 கோடி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் ஈட்டியுள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படம் ரூ.1000 கோடி வரை வசூலிக்கும் என்று படக்குழு நம்பிக்கை  தெரிவித்திருந்தது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×