`சேட்டை செய்ய சேட்டன் வந்நல்லே' வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
`சேட்டை செய்ய சேட்டன் வந்நல்லே' வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு
Published on

ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து படக்குழு அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com