விழா மேடையில் விஜய் ஆண்டனிக்கு ரொமான்ஸ்-க்கு கிளாஸ் எடுத்த கவுதம் மேனன்

தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.
விழா மேடையில் விஜய் ஆண்டனிக்கு ரொமான்ஸ்-க்கு கிளாஸ் எடுத்த கவுதம் மேனன்
Published on

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கடைசியாக நடித்த 'மழைப்பிடிக்காத மனிதன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, 'படைவீரன்', 'வானம் கொட்டட்டும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் 'ஹிட்லர்' என்கிற புதிய படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

இப்படத்தில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. படத்தில் நடுத்த நடிகர்களும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர். விஜய் ஆண்டனி மேடையில் பேசுகையில், கவுதம் வாசுதேவ் மேனனிடம் தனக்கு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க டிப்ஸ் தருமாறு மற்றும் பின் மேடையிலயே ஒரு டெமோ காட்டும்படி கேட்டுக் கொண்டார்.

கவுதம் வாசுதேவ் மேனனும் எந்த வித தயக்கமும் இன்றி அவரது படத்தின் பிரபல வசனமான விண்ணை தாண்டி வருவாய் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வசனங்களை பேச சொன்னார். விஜய் ஆண்டனியும் அங்கு இருந்த நாயகிகளிடம் அந்த வசனத்தை பேசி ஒத்திகைப் பார்த்தார். இந்த சம்பவம் மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ளது. இந்த காட்சி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com