search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amirkhan"

    • இயக்குனர் பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இந்த படத்தில் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.


    இந்நிலையில், இயக்குனர் பார்த்திபன் நடிகர் அமீர்கானை புகழ்ந்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இந்தி'ய திரையுலகில் அவருடைய படங்கள் மூலம், மிக உயர்வாக மதிக்கப்படும் சிறந்த நடிகர். ஒவ்வொரு முறையும் என்னை ஆச்சர்ய ஆனந்தத்தில் திளைக்க வைக்கும் மனிதர். நேற்றிரவு கமல் சார் பிறந்த நாளில் … நடப்பவை(பவங்)களை ஒரு ஒதுக்கு புறமாக நின்று ரசித்துக் கொண்டிருந்த என்னை கண்டு ஓடி வந்து இறுக அனைத்துக் கொண்டு நெற்றியில் என்னவென்று விசாரித்து, தன்னுடைய தாயாருக்கு உடல்நிலை சுகமில்லை என வருந்தி,அடுத்த படமென்ன?- தெரிந்துக் கொண்டு,பின்னர் திரும்பிச் செல்கையில் மறக்காமல் வந்து சொல்லிவிட்டு சென்றார்.


    எங்கே சென்றார் ? இதயத்தின் நாற்புறமும் ஆணியடித்து அங்குமிங்கும் நகரா நாற்காலியிட்டு அமர்ந்துக் கொண்டார். இத்தனைக்கும் சிற்சில சந்திப்பே இதற்குமுன்… என் விடாமுயற்சிகளை பற்றி கேட்டறிந்து என்னை அவர் பாராட்டவும்,அவரின் நல்ல படங்களை நான் புகழவும் பழகினோம். அவரின் அற்புத நட்பு அலாதியானது. மணி சார்+கமல் சார்+ ரஹ்மான் சார்+ ரவி k சந்திரன் கூட்டணி மிரட்டியது 'thug life'-ல்!" என்று பதிவிட்டுள்ளார்.


    • நடிகர் அமீர்கான் தற்காலிகமாக சினிமாவிற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.
    • இவர் சென்னைக்கு குடியேற திட்டமிட்டுள்ளார்.

    பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காக தற்காலிகமாக சினிமாவுக்கு ஓய்வு கொடுத்துள்ளார். மேலும் இவர் சென்னைக்கு குடியேற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    தாயாருடன் அமீர்கான்

    அதாவது, கடந்த ஆண்டு அமீர்கானின் தாயார் ஜூனத் ஹூசைனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பினார். தற்போது அவருக்கு மீண்டும் சிகிச்சை தேவைப்படும் நிலையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள்.

    அதனால் தாயாரை உடனிருந்து கவனிக்கும் வகையில், மருத்துவமனைக்கு அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சில மாதங்கள் அங்கு தங்கியிருக்கவும் அமீர்கான் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் அமீர்கான்.
    • நடிகர் அமீர்கான் தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றியுள்ளது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

    இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் 'சுதந்திர தின அமிர்த பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக 'இல்லம் தோறும் தேசிய கொடி' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதன்படி, 13-ம் தேதி (நேற்று) முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.

     

    இந்நிலையில், நடிகர் அமீர்கான் மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று தேசியக்கொடி ஏற்றினார். தனது வீட்டின் மாடியில் தேசியக்கொடி ஏற்றப்பட்ட பகுதியில் அமீர்கான் தனது மகள் இரா கானுடன் நிற்கும் புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ×