என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தேவிற்கு நிறைவேறாத ஆசை இருக்கிறதாம். #RadhikaApte
ராதிகா ஆப்தே தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய படங்களில் சேலைகட்டிக்கொண்டு குடும்பப்பாங்காக நடிக்கும் ராதிகா ஆப்தே பாலிவுட், ஹாலிவுட்டில் படுகவர்ச்சி காட்சிகளில் நடிக்கிறார். அவருக்கு தீராத ஆசை ஒன்று இருக்கிறதாம்.
இதுபற்றி அவர் கூறியதாவது:- எனக்கு 8 வயதாக இருக்கும்போது என் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த ஒரு பையன் மீது எனக்கு அதிக ஆசை இருந்தது. அப்போது எனது வீட்டு வேலைக்கார பெண்ணுடன் அடிக்கடி சினிமாவுக்கு செல்வேன். நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். அதில் காதல் காட்சிகளில் மழையில் நனைந்தபடி காதலிக்கு காதலன் முத்தமிடும் காட்சி வரும். அதுபோல் நானும் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

நான் ஆசைப்பட்ட பையனுக்கு மழையில் நனைந்தபடி முத்தம் தர விரும்பினேன். ஆனால் அதை அவனிடம் சொல்வதற்கான தைரியம் எனக்கு அப்போது இல்லை. இப்போதுவரை மழையில் யாருக்கும் நான் முத்தம் தந்ததில்லை. அதுதான் எனக்கு நிறைவேறாத ஆசையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு அருகேயுள்ள பாகலூரு பகுதியில் இன்று நடைபெற்ற ‘ரணம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 வயது சிறுமி உள்பட இரு பெண்கள் உயிரிழந்தனர். #Womankilled #blastduringshoot #filmshoot #Bengalurushoot
பெங்களூரு:
வி.சமுத்ரா இயக்கத்தில் சிரஞ்சீவி சார்ஜா, சேத்தன் நடிப்பில் ‘ரணம்’ என்ற பெயரில் கன்னட மொழிப்படம் தயாராகி வருகிறது.
இந்த படத்தின் சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பு பெங்களூரு அருகேயுள்ள பாகலூரு பகுதியில் இன்று நடைபெற்றது. காட்சி அமைப்பின்படி கார் மோதி தீபிடிப்பது போன்ற அமைப்புகள் செய்யப்பட்டபோது அங்கிருந்த ஒரு எரிவாயு சிலிண்டர் திடீரென்று வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் படப்பிடிப்பை பார்க்க வந்திருந்த சுமைரா(28), ஆயிரா(8) ஆகிய இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயத்துடன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் இவ்விபத்து தொடர்பாக பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Womankilled #blastduringshoot #filmshoot in #Bengalurushoot
யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தர்மபிரபு’ படத்தின் டீசரில் அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னய்யா என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. #YogiBabu #DharmaPrabhuTeaser
விமல், வரலட்சுமி நடித்துள்ள `கன்னிராசி' படத்தை இயக்கிய முத்துகுமரன் அடுத்ததாக இயக்கிவரும் படம் `தர்மபிரபு'. இப்படத்தில் யோகி பாபு, `வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.
முழு நீள நகைச்சுவை படமாக உருவாகும் இதில், யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார். இதில் ‘இங்கு எல்லோரும் தகுதியுடன் தான் இருக்கிறார்களா?, அம்மா போனால் சின்னம்மா, ஐயா போனால் சின்னய்யா என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. #YogiBabu #DharmaPrabhuTeaser
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் மாநாடு படத்தில் கதாநாயகி யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #STR #Maanadu #STRinMaanaadu #VP9
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.
ஆனால், தற்போது இப்படத்தில் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள், கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதை இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #STR #Maanadu #STRinMaanaadu #VP9
உங்களிடம் ஈகோவே கிடையாதா? என்ற கேள்விக்கு நடிகர் விஜய் சேதுபதி, “என்னிடம் நிறையவே ஈகோ இருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார். #VijaySethupathi #SuperDeluxe
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ இன்று வெளியாகி உள்ளது. படத்தை சிறப்பு காட்சிகளில் பார்த்தவர்கள் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதியின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் விஜய் சேதுபதியிடம், ‘உங்கள் ரசிகர்களின் பெயர்களைக்கூட நினைவு வைத்திருப்பீர்கள். ரசிகர்களிடம் எந்தவித ஈகோவும் பார்க்க மாட்டீர்கள் என்று உங்களைப் பற்றி கருத்து நிலவுகிறது. உண்மையில், உங்களிடம் ஈகோவே கிடையாதா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த விஜய் சேதுபதி, “என்னிடம் நிறையவே ஈகோ இருக்கிறது. ஆனால், அதை அடையாளம் கண்டு கொள்கிறேன். உண்மையில் ஈகோ இல்லாத மனிதரே இருக்க முடியாது. அதுதான் உங்களை வளர்த்து உயரத்துக் கொண்டு செல்கிறது.

ஆனால், ஈகோ அதிகமானால் அதை அடுத்தவர்களிடம் காட்டக்கூடாது. தொழிலில் மட்டுமே அந்த ஈகோவைக் காட்டவேண்டும்” என்றார். விஜய் சேதுபதி தற்போது ‘சங்கத் தமிழன்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய் சந்தர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
பிசியாக நடித்து வந்த நிக்கி கல்ராணியிடம், பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா என்ற கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார். #Kee #NikkiGalrani
டார்லிங் படத்தில் அறிமுகமான நிக்கி கல்ராணி வந்த வேகத்தில் 10 படங்களுக்கு மேல் நடித்தார். தற்போது அவர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் கீ படம் ரிலீசாக இருக்கிறது. அடுத்து சசிகுமார் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.
அவரிடம் வாய்ப்புகள் குறைந்தது போல் தெரிகிறதே? என்று கேட்டோம். ’வாய்ப்புகள் குறைந்து விட்டதாக சொல்வதைவிட, நான் தேர்வு செய்து நடிக்க தொடங்கி விட்டேன் என்று சொல்லலாம்.

ஒரு கதையைக் கேட்கும்போது இந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு ரசிகராக யோசிப்பேன். எனக்கு பல்வேறு வித்தியாசமான வேடங்களில் நடிக்கவேண்டும் என்று ஆசை. அதனால் தேர்வு செய்து நடிக்கிறேன்’. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், வதந்திகளுக்கு பயப்பட மாட்டேன் என்று கூறியிருக்கிறார். #RakulPreetSingh RakulPreet
ரகுல் ப்ரீத் சிங் நடித்த சில படங்கள் வெற்றி பெறாததால் கடந்த ஆண்டு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது. தனது சம்பளத்தை ரகுல் ப்ரீத் உயர்த்தியதால் அவருக்கு பட வாய்ப்புகள் வருவதில்லை என்று தகவல் பரவியது. இந்த தகவல் பற்றி அவர் கடுமையாக சாடி உள்ளார்.
இதுகுறித்து ரகுல் கூறும்போது, ’சிலர் என்னைப்பற்றி பொய்யான வதந்திகளை பரப்ப முயற்சிக்கின்றனர். அதுபோன்ற வதந்திகளை கண்டு பயப்படும் ஆள் நானில்லை. என்னை எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்துகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உயரத்திற்கு வருவேன்.

என்னை தாக்க வேண்டும் என்று எண்ணினால் நேரடியாக வாருங்கள் பார்க்கலாம்’ என்று கூறியுள்ளார். இந்த ஆண்டில் சூர்யாவுடன் என்ஜிகே, சிவகார்த்திகேயனுடன் புதியபடம் என 2 தமிழ் மற்றும் 2 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம்வரும் முத்துக்காளை தான் இறந்துவிட்டதாக வதந்தி பரப்புவதாக வேதனை தெரிவித்தார். #Muthukalai
அறிமுக நாயகன் ஜிஜி மற்றும் அறிமுக நாயகி கமலி நடிப்பில் நேசமானவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வாங்க படம் பார்க்கலாம்’.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட காமெடி நடிகர் முத்துக்காளை பேசியது பரபரப்பானது. முத்துக்காளை பேசும்போது, “இருக்கும் யூடியூப் சேனல்களில் நான் இறந்துபோய் 2 வாரம் ஆகிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. நான் உயிரோடு தான் இருக்கிறேன்.
நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன். படப்பிடிப்புகளுக்கு செல்வதைவிட, இதுபற்றி விசாரித்து தினசரி வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு நான் உயிரோடு இருக்கிறேன் என பதில் சொல்வது தான் பெரிய வேலையாக இருக்கிறது” என வேதனையுடன் குறிப்பிட்டார். #Muthukalai
பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி - அனகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்பே துணை’ படத்தின் முன்னோட்டம். #NatpeThunai #HipHopThamizha
அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நட்பே துணை’.
‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனகா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாண்டியராஜன், விக்னேஷ்காந்த், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - அரவிந்த் சிங், இசை - ஹிப் ஹாப் ஆதி, படத்தொகுப்பு - பென்னி ஆலிவர், கலை இயக்குநர் - பொன்ராஜ், நடன இயக்குனர்கள் - சந்தோஷ் & சிவராக் ஷங்கர், சண்டை பயிற்சி - ப்ரதீப் தினேஷ், நிர்வாக தயாரிப்பாளர் - அன்புராஜ், தயாரிப்பு - சுந்தர்.சி., இயக்குநர் - டி.பார்த்திபன் தேசிங்கு.

இவர் ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த இவர், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படம் ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. ஹாக்கி விளையாட்டு தவிர இப்படத்தில் நட்பு, காதல், குடும்பம் என அனைத்து சிறப்பம்சங்களோடு படம் உருவாகி இருக்கிறது.
படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சுந்தர்.சி பேசியதாவது:-
இப்படத்துக்காக அனைவருமே உழைத்துக் கொண்டே இருந்தார்கள். நான் இயக்கும் படங்களில் அறிவுரை சொல்ல முடியவில்லை. என் படங்களில் பொழுது போக்கை மட்டுமே எதிர்பார்த்து வருவார்கள். கருத்து சொன்னால் ‘அன்பே சிவம்‘ மாதிரி ரிசல்ட் கொடுத்து விடுகிறார்கள். ‘நட்பே துணை’ கதையைக் கேட்டவுடன் ரொம்ப பாசிட்டிவாக இருந்தது. காதல், காமெடி, எமோஷன் என அனைத்துமே இருக்கிறது. இதெல்லாம் கடந்து நல்ல ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தது. மீசையை முறுக்கு போலவே இந்த படமும் பெரிய வெற்றி பெறும்’. இவ்வாறு அவர் பேசினார். #NatpeThunai #HipHopThamizha #Anagha #SundarC
நட்பே துணை டிரைலர்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படையினர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சோதனை அதிகாரி தங்களை அவமரியாதையாக நடத்தியதாக நமீதாவின் கணவர் வீரா புகார் கூறியுள்ளார். #Namitha #Veer
பாராளுமன்ற தேர்தலையொட்டி சேலம் புலிக்குத்தி தெருவில் பறக்கும் படை அலுவலர் ஆனந்த யுவனேஷ் தலைமையில் நடிகை நமீதாவின் காரில் சோதனை நடத்தப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுக்கும் நமீதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கு நமீதாவின் கணவர் வீரா விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த சில நாட்களாக தவறான செய்திகள் வெளியாகின்றன. அதற்கு நான் வருந்துகிறேன். நடந்த சம்பவம் குறித்து எனது சார்பிலும், எனது மனைவி தரப்பிலும் விளக்கம் அளிக்கிறேன்.
படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நாங்கள் 8 மணி நேரம் காரில் பயணம் செய்தோம். எனது மனைவி நமீதா காரின் பின் இருக்கையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது இரவு 2.30 மணி இருக்கும்.
இச்சம்பவம் நடப்பதற்கு முன்பு பல்வேறு இடங்களில் 3 தடவை காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதற்கு நாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தோம்.

சேலம் - ஆற்காடு சந்திப்பை அடைந்த போது பறக்கும் படை அதிகாரி காரை தடுத்து நிறுத்தி எங்கள் அனைவரிடமும் மிகவும் அவமரியாதையாக நடந்து கொண்டார். எங்களை குற்றவாளிகள் போன்று நடத்தினார்.
எனது மனைவி அசதியில் தூங்கி கொண்டிருக்கிறார். தேவைப்பட்டால் அவரை எழுப்பிவிடுகிறேன் என்றேன். அதை பொருட்படுத்தாமல் நமீதா காரின் பின்புறம் கதவை திறந்தார். அப்போது அவர் காரில் இருந்து கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அதற்கு அவர் வருத்தம் தெரிவித்தார். ஆனால் நாங்கள் சில சட்ட விரோத பொருட்களை கடத்துவதாக கருதி காரில் சோதனை நடத்தினார். எங்களது அனைவரின் பைகளையும் சோதனை செய்தார்.
நமீதாவின் பையை சோதனை செய்ய தொடங்கினார். ஆனால் அதை திறக்க நமீதா மறுத்துவிட்டார். எனது பையை பெண் போலீசை வைத்து சோதனை செய்யுங்கள் என்றார்.
ஏனெனில் அதில் குறிப்பிட்ட சில முக்கியமான பொருட்கள் இருந்தன. பெண் போலீஸ் மூலம் சோதனை செய்தால் தனக்கு வசதியாக இருக்கும் என கருதினார். அதன் பின்னர் பெண் போலீஸ் வந்து பையை சோதனை செய்தார். அவ்வளவுதான் நடந்தது.
அசவுகரியமான நேரத்தில் பெண் போலீசை அழைப்பது ஒவ்வொரு பெண்ணின் உரிமை. ஆனால் இந்த விவகாரம் முழுவதும் வேறு விதமாக ஊதி பெரிதுபடுத்தப்பட்டுள்ளது.
அவர் ஒரு சாதாரண குடிமகனாக இருந்தால் அதுகுறித்து யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் அவர் ஒரு பிரபலமானவர் என்பதால் அனைவரும் உரிமை எடுத்துக் கொள்கிறார்கள். அவ்வளவு தான். இதை தவறாக எடுத்துக் கொள்வதற்கு பதிலாக இந்த விவகாரத்தில் இருந்து நமது நாட்டு பெண்கள் கற்றுக் கொள்வார்கள் என்றும் தங்களது உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்றும் நம்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Namitha #Veer
ஜீவா நடிப்பில் கீ படம் வருகிற வாரத்தில் ரிலீசாக இருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார். #Jiiva #AjithKumar
ஜீவா நடிப்பில் கீ, கொரில்லா, ஜிப்சி என 3 படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. அடுத்து 3 படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஜிப்சி படம் பற்றி அளித்துள்ள ஒரு பேட்டியில் ’இயக்குனர் ராஜூமுருகன் சொன்ன கதையைக் கேட்டு மிரண்டு போனேன். ஜிப்சி எனக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். தல அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை. அப்படியொரு கதை அமைய வேண்டும் என்று காத்திருக்கிறேன்’.
இவ்வாறு ஜீவா தெரிவித்தார். #Jiiva #AjithKumar
பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகும் `தமிழரசன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. #Thamizharasan #VijayAntony
விஜய் ஆண்டனி தற்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் `தமிழரசன்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
சோனு சூட் வில்லனாகவும், சுரேஷ்கோபி, ராதாரவி, யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இந்த படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், இன்னும் சில நாட்களில் அடுத்த கட்ட படப்பிடிப்பை துவங்கி விரைவில் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். #Thamizharasan #VijayAntony #RamyaNambeesan #SonuSood






