என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தே, சமீபத்தில் அளித்த பேட்டியில், வெப் தொடர்களுக்கு சென்சார் கூடாது என்று கூறியிருக்கிறார். #RadhikaApte
    ‘சிந்திக்கும் ஆற்றல் நிறைந்த சிறந்த நடிகை’ என்ற பெயரை பெற்றிருக்கிறார், ராதிகா ஆப்தே. அதுவே அவருக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மொழிகளைக் கடந்து தனது அர்த்தமுள்ள நடிப்பால் முத்திரை பதிக்கும் ராதிகா ஆப்தே, ஒரே நேரத்தில் சினிமாவிலும் நடிக்கிறார். வெப் தொடர்களிலும் தோன்றுகிறார். அவரது பேட்டி:

    தற்போது புகழ் பெற்றுவரும், வெப் தொடர்களுக்கு ‘சென்சார்’ அவசியம் என்று நினைக்கிறீர்களா?

    வெப் தொடர்களுக்கு எந்த ‘சென்சார்ஷிப்’பும் கூடாது என்றே நான் கருதுகிறேன். அதற்கு என்ன காரணம் என்றால், மக்கள் எதைப் பார்க்க விரும்புகிறார்களோ, அதை எப்படியாவது பார்க்கத்தான் போகிறார்கள்.



    மீடூ இயக்கம், திரைத்துறையில் மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறதா?

    மீடூ இயக்கம் ஏற்படுத்திய பெரிய தாக்கம், இனி ஆண்கள் தவறு செய்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பார்கள். பெண்களும் தங்கள் மீதான அத்து மீறல்கள் குறித்துப் பேச வெட்கப்பட வேண்டியதில்லை என்று உணர்ந்திருக்கிறார்கள். இதெல்லாம் பெரிய முன்னேற்றம் தான்.
    நாயை மையமாக வைத்து உருவாகி வரும் ‘ராக்கி’ படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். #Rocky #Srikanth
    ஸ்ரீகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ராக்கி’. இதில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருடன் ஒரு நாய்க்குட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார் ஸ்ரீகாந்த். 

    ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். எம்.எல்.ஏ.வுடன் ஏற்படும் பிரச்சனையில், ஸ்ரீகாந்தை கொலை செய்து விடுகிறார்கள். ஆனால், ராக்கி ஸ்ரீகாந்தை கொலை செய்தவர்களை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.



    இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விவேக் வெளியிட்டார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. 
    குப்பத்து ராஜா படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் பாலக் லால்வானி, ரசிகர்கள் பாராட்டும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். #PalakLalwani
    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது ‘குப்பத்து ராஜா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக பாலக் லால்வானி நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலரில் அனைவரின் கவனத்தை ஈர்த்த இவர், தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

    "இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டபோது, நான் உற்சாகம் மற்றும் பதட்டம் கலந்த ஒரு உணர்வைக் கொண்டிருந்தேன். இந்த படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால், அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக பேச வேண்டும். கதாபாத்திரத்தை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக செய்ய வேண்டி இருந்தது. என் வசனங்களில் மிகவும் பொறுமையாகவும் உதவியாகவும் இருந்த இயக்குனர் பாபா பாஸ்கர் சார், ஜி.வி.பிரகாஷ் மற்றும் பலருக்கும் நன்றி" என்றார் பாலக் லால்வானி.



    மேலும் இப்படத்தில் சும்மா வந்து போகும் கதாப்பாத்திரமாக இருக்காது. குப்பத்து ராஜா படத்தில் எனக்கு கணிசமான பங்கு உள்ளது, ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என்றார். 

    இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் மற்றும் பாலக் லால்வானி ஆகியோருடன் யோகிபாபு, பூனம் பஜ்வா மற்றும் சில பிரபலமான நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். எஸ் போகஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சரவணன் எம், சரவணன் டி, சிராஜ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், பிரவீன் கேஎல் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது இந்த குப்பத்து ராஜா திரைப்படம். ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாக உள்ளது.
    தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்சி, அடுத்ததாக வயதான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். #Taapsee #TaapseePannu
    டாப்சி வழக்கமான கதாபாத்திரங்களிலிருந்து விலகி மாறுபட்ட வேடங்கள் ஏற்று நடித்து வருகிறார். குறிப்பாக அமிதாப்பச்சனுடன் ‘பிங்க்’ இந்தி படத்தில் மாறுபட்ட வேடம் ஏற்றிருந்தார். இப்படம் தற்போது தமிழில் நேர்கொண்ட பார்வை பெயரில் ரீமேக் ஆகிறது. அஜித் ஹீரோவாக நடிக்கிறார்.

    இந்நிலையில் 60 வயது கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் டாப்சி. உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் சந்த்ரோ டோமர், பிரகாஷி டோமர். இருவருக்குமே 80 வயதுக்கு மேல் ஆகிறது. இருவரும் ரிவால்வர் துப்பாக்கியால் எந்த இலக்கையும் குறிதவறாமல் சுடுவதில் கில்லாடிகள். இவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘சாந்த் கி ஆங்க்’ பெயரில் திரைப்படம் உருவாகிறது.



    இதில் பிரகாஷி டோமர் கதாபாத்திரத்தில் பூமி பெடுன்கர் நடிக்கிறார். சந்த்ரோ டோமர் கதாபாத்திரத்தில் டாப்சி நடிக்கிறார். நடிகைகள் இருவருக்குமே 30 வயதுதான் ஆகிறது. ஆனால் 60 வயது கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதுபற்றி டாப்சி கூறும்போது,’60 வயது பெண்ணாக சந்த்ரோ டோமர் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். நான் இதுவரை நடித்த வேடங்களிலேயே இது மிகவும் சவாலானது.

    கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தகுந்த பயிற்சி தேவைப்பட்டதால் சந்த்ரோ டோரை நேரில் சந்தித்து பயிற்சி பெற்றேன் என்றார். 
    தன்னுடைய படத்தின் பாடல்களை விரைவாக முடித்துக் கொடுத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார். #Suriya #GVPrakash
    செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரித்து நடிக்க உள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அனைத்து பாடல்களையும் முடித்துக் கொடுத்துவிட்டார். தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



    இப்படத்தின் கதை மற்றும் பாடல்கள் என அனைத்தையும் கேட்ட சூர்யா, ஜி.வி.பிரகாசை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவருக்கு ஒரு பெரிய பூங்கொத்து கொடுத்து அனுப்பி அதில் “ஜிவி ப்ரோ, பாடல் கேட்டு சிலிர்த்துவிட்டேன். அட்டகாசமான பாடல்கள்” என்று தன் கைப்பட எழுதியிருக்கிறார். இதனை புகைப்படம் எடுத்து ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    தற்போது 100 படத்தில் நடித்து வரும் அதர்வா, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். #Atharvaa
    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா.

    இந்த படத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணனின் இசை பக்கபலமாக அமைந்தது.



    இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது. இதில் சித்தார்த் வேடத்தில் அதர்வாவும், பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் மிருணாலினி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
    இம்மாதம் வெளியான சேரனின் திருமணம் திரைப்படம், பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் வெளியாக இருக்கிறது. #Thirumanam
    மார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய 'திருமணம்' திரைப்படம் வெளியானது.
     கதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதைகளமும், அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், மாணவமணிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை.



    பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்கவும், திரையரங்குகளின் மேலான ஒத்துழைப்போடும், இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி, 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படுகிறது.
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார். #KajalAggarwal
    காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை பற்றி அவர் கூறியதாவது:-

    “என்னை சந்திக்கிறவர்கள் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். இப்போது கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது, நேரம் வரும்போது எல்லோருக்கும் தெரிவித்துவிட்டு திருமணம் செய்து கொள்வேன். தமிழில் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படத்தை அதிகம் எதிர்பார்க்கிறேன். இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் ஆக தயாராகி உள்ளது.

    சமீபகாலமாக இளம் கதாநாயகர்களுடன் அதிகம் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். யாரோடு நடிக்கிறேன் என்பதை விட என்னமாதிரி கதாபாத்திரங்கள் தேர்வு செய்கிறேன் என்பது தான் முக்கியம். நல்ல கதை, கதாபாத்திரம் இருந்தால் எந்த நடிகர்களுடன் வேண்டுமானாலும் நடிப்பேன்.



    சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறேன். அதற்கு என் பணத்தையே செலவிடுகிறேன். ஆந்திராவில் உள்ள அரக்கு என்ற பகுதிக்கு சென்றபோது அங்குள்ள ஆதிவாசி குழந்தைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் இல்லாமல் அவதிப்படுவதை பார்த்தேன். இதனால் நன்கொடை வசூலித்து அரக்கு பகுதியில் பள்ளிக்கூடம் கட்டி கொடுத்து இருக்கிறேன்.

    நல்ல விஷயங்களை பேசுவேன். மற்றவர்ளை பற்றி மோசமாக பேசுவதும் அப்படி பேசுபவர்களை ஊக்குவிப்பதும் தவறு.” இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
    தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் அஞ்சலி, தன்னைப் பற்றி வரும் வதந்திகளுக்கு ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன், இப்போது இல்லை என்று கூறியிருக்கிறார். #Anjali
    தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் காதல் என்று கிசுகிசுக்கள் பரவின. பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அஞ்சலி அளித்த பேட்டி வருமாறு:-

    நான் டப்பிங் கலைஞராக சினிமா பயணத்தை ஆரம்பித்து, அதன்பிறகு நடிகையானேன். அம்மாவுக்கு நடிகையாக ஆர்வம் இருந்தது. அது பலிக்காததால் என்னை நடிகையாக்கி கனவை நிறைவேற்றிக்கொண்டார். நான் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என்று தகவல்கள் பரவி உள்ளன. அதில் சிறிதும் உண்மை இல்லை.



    திருமண செய்தியே பொய். அப்படி திருமணம் செய்துகொண்டாலும் சினிமாவை ஏன் விட வேண்டும். கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் உள்ளது. புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால் முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் அக்கறையும், ஆர்வமும் இருக்க வேண்டும். சாதிக்க பிடிவாதமும் இருக்க வேண்டும்.

    நான் மற்றவர்களை நோகடிப்பதாக பேசுகிறார்கள். அதில் உண்மை இல்லை. இதுவரை யாரையும் நோகடித்தது இல்லை. என்னை பற்றி வதந்திகள் வரும்போது ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது கண்டு கொள்வது இல்லை.” இவ்வாறு அஞ்சலி கூறினார்.
    மோடி படத்தில் தேர்தல் விதிமீறல் காட்சிகள் இல்லை என்று படக்குழுவினர் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளனர். #Modi #PMNarendraModi
    பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பிஎம் நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். ஓமங்க் குமார் இயக்கி உள்ளார். மோடியின் இளமை காலத்து வாழ்க்கையில் இருந்து 2014-ம் ஆண்டு தேர்தலில் வென்று பிரதமர் ஆனது வரை உள்ள சம்பவங்கள், அவர் நிறைவேற்றிய திட்டங்கள் படத்தில் உள்ளன.

    இந்த படத்தை அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு ஆதரவு அலையை படம் உருவாக்கும் என்று எதிர்ப்பு கிளம்பியது. படத்தை வெளியிடக் கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும், ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் புகார் அளித்தனர்.



    இதைத்தொடர்ந்து நேரில் விளக்கம் அளிக்கும்படி மோடி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து படத்தில் மோடியாக நடித்த விவேக் ஓபராய், தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார்கள். அதில் மோடி படத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் காட்சிகள் இல்லை என்று விளக்கம் அளித்தனர்.
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தேவிற்கு நிறைவேறாத ஆசை இருக்கிறதாம். #RadhikaApte
    ராதிகா ஆப்தே தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய படங்களில் சேலைகட்டிக்கொண்டு குடும்பப்பாங்காக நடிக்கும் ராதிகா ஆப்தே பாலிவுட், ஹாலிவுட்டில் படுகவர்ச்சி காட்சிகளில் நடிக்கிறார். அவருக்கு தீராத ஆசை ஒன்று இருக்கிறதாம்.

    இதுபற்றி அவர் கூறியதாவது:- எனக்கு 8 வயதாக இருக்கும்போது என் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த ஒரு பையன் மீது எனக்கு அதிக ஆசை இருந்தது. அப்போது எனது வீட்டு வேலைக்கார பெண்ணுடன் அடிக்கடி சினிமாவுக்கு செல்வேன். நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். அதில் காதல் காட்சிகளில் மழையில் நனைந்தபடி காதலிக்கு காதலன் முத்தமிடும் காட்சி வரும். அதுபோல் நானும் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். 



    நான் ஆசைப்பட்ட பையனுக்கு மழையில் நனைந்தபடி முத்தம் தர விரும்பினேன். ஆனால் அதை அவனிடம் சொல்வதற்கான தைரியம் எனக்கு அப்போது இல்லை. இப்போதுவரை மழையில் யாருக்கும் நான் முத்தம் தந்ததில்லை. அதுதான் எனக்கு நிறைவேறாத ஆசையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    பெங்களூரு அருகேயுள்ள பாகலூரு பகுதியில் இன்று நடைபெற்ற ‘ரணம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 வயது சிறுமி உள்பட இரு பெண்கள் உயிரிழந்தனர். #Womankilled #blastduringshoot #filmshoot #Bengalurushoot
    பெங்களூரு:

    வி.சமுத்ரா இயக்கத்தில் சிரஞ்சீவி சார்ஜா, சேத்தன் நடிப்பில் ‘ரணம்’ என்ற பெயரில் கன்னட மொழிப்படம் தயாராகி வருகிறது.

    இந்த படத்தின் சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பு பெங்களூரு அருகேயுள்ள பாகலூரு பகுதியில் இன்று நடைபெற்றது. காட்சி அமைப்பின்படி கார் மோதி தீபிடிப்பது போன்ற அமைப்புகள் செய்யப்பட்டபோது அங்கிருந்த ஒரு எரிவாயு சிலிண்டர் திடீரென்று வெடித்து சிதறியது.

    இந்த விபத்தில் படப்பிடிப்பை பார்க்க வந்திருந்த சுமைரா(28), ஆயிரா(8) ஆகிய இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயத்துடன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் இவ்விபத்து தொடர்பாக பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Womankilled #blastduringshoot #filmshoot in #Bengalurushoot 
    ×