என் மலர்
சினிமா செய்திகள்
நடிகை ஏமி ஜாக்சனும், இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே ஏமி ஜாக்சன் கர்ப்பமாகி இருக்கிறார். #AmyJackson #GeorgePanayiotou
தமிழ், இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த ஏமி ஜாக்சனுக்கும், இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயியோட்டுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. விடுமுறையை கொண்டாட ஜாம்பியா சென்ற இடத்தில் ஜார்ஜ் காதலை தெரிவித்ததாக ஏமி தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதை காதலர் ஜார்ஜுடன் இருக்கும் புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருக்கு அக்டோபர் மாதம் குழந்தை பிறக்க உள்ளது. திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாவது, குழந்தை பெற்றுக் கொள்வது எல்லாம் இங்கிலாந்தில் சகஜம்.

இந்நிலையில் எமியின் அறிவிப்பை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜார்ஜின் தந்தை ஆன்ட்ரியஸ் பனயியோட்டு இங்கிலாந்தின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவரின் சொத்து மதிப்பு ரூ.3 ஆயிரத்து 600 கோடி ஆகும். ஏமி ஜாக்சனுக்கு திருமணம் என்றதுமே அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவர் தாயாகப் போவதால் கண்டிப்பாக சில காலத்திற்கு நடிக்க மாட்டார் என்கிறார்கள். #AmyJackson #GeorgePanayiotou
ஸ்காட் மேன் இயக்கத்தில் டேவ் பேட்டிஸ்டா - லாரா பீக் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஃபைனல் ஸ்கோர்' படத்தின் விமர்சனம். #FinalScoreReview #DaveBautista
ராணுவ அதிகாரியான பேட்டிஸ்டா தனது சகோதரர் வீட்டிற்கு வருகிறார். அங்கு தவறான வழிக்கு சென்று தனது அம்மாவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் தனது சசோகதரரின் மகளான லாரா பீக்கை வெளியே அழைத்துச் செல்கிறார். இருவரும் கால்பந்தாட்ட போட்டியை காணச் செல்கின்றனர்.
மைதானத்தில் லாரா பீக் தனது நண்பர் ஒருவரை பார்க்க சென்றுவிடுகிறார். லாராவை காணாமல் தேடும் பேட்டிஸ்டா, அந்த மைதானத்தை ஒரு மர்மகும்பல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதை தெரிந்து கொண்டு, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் அவர்களை தடுக்கவும், போலீசுக்கு தகவல் தெரிவிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

கடைசியில் லாரா பீக்கை, பேட்டிஸ்டா கண்டுபிடித்தாரா? மைதானத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த மர்ம கும்பலின் நோக்கம் என்ன? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆக்ஷன் மற்றும் காமெடி கதாபாத்திரத்தில் பார்த்த பேட்டிஸ்டாவை ஆக்ஷன் கலந்த செண்டிமென்ட் கதாபாத்திரத்தில் பார்க்க முடிகிறது. பியர்ஸ் பிராஸ்னன், லாரா பீக், ரே ஸ்டூவன்சன், அலெக்சாண்ட்ரா தினு, மார்டின் போர்டு, அமித் ஷா, லக்கி கேஸ்கல் என அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களது பணியை சிறப்பாக செய்துள்ளார்கள்.

வழக்கமான ஒரு கதையை வித்தியாசமான கோணத்தில் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதையாக இயக்கியிருக்கிறார் ஸ்காட் மேன். ராபர்ட் ஹாலின் படத்தொகுப்பு படத்துக்கு முக்கிய பலம்.
ஜேம்ஸ் எட்வர்டு பார்கர், டிம் டெஸ்பிக்கின் பின்னணி இசையும், எமில் டோபுசோவின் ஒளிப்பதிவும் சிறப்பு.
மொத்தத்தில் `ஃபைனல் ஸ்கோர்' விறுவிறுப்பு. #FinalScoreReview #DaveBautista
சுரேஷ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் `உயர்ந்த மனிதன்' படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கும் மகிழ்ச்சியை ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாசுடன் பகிர்ந்து கொள்வதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். #UyarndhaManithan
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் 60 வருடங்களாக திரைத்துறையில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இதுவரை தமிழ் படத்தில் நடித்ததில்லை. தற்போது முதல்முறையாக நேரடி தமிழ்ப்படத்தில் எஸ்.சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.
‘உயர்ந்த மனிதன்’ என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், எனது வாழ்க்கையின் மகிழ்வான தருணம் இது. நான் காணாத கனவை நிறைவேற்றிய கடவுளுக்கும், எனது பெற்றோருக்கும் நன்றி. அமிதாப் பச்சன் அவர்களுக்கும் நன்றி. எனது இந்த மகிழ்ச்சியை ரஜினிகாந்த் மற்றும்இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
Happiest moment of my life ... thank you God , mom, dad for fulfilling a dream which I have never even dreamt of .... 🙏 toThe evergreen superstar @SrBachchan , sharing it with our super star @rajinikanth & Dir @ARMurugadoss pic.twitter.com/Dwpd2s2nJG
— S J Suryah (@iam_SJSuryah) March 31, 2019
திருச்செந்தூர் முருகன் புரொடக்ஷன் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். தமிழ், மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தை கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இந்த இயக்குகிறார்.
உயர்ந்த மனிதன் படம் குறித்து தமிழ்வாணன் கூறும்போது, ‘எனது கனவு நிறைவேறியது. இதை விட நான் வேறு என்ன கேட்டு பெற்று விட முடியும். உலகெங்கும் புகழ் பெற்று, இந்திய திரை உலகின் முடிசூடா மன்னனாக திகழும் அமிதாப் சாருடன் பணி புரிவது மிக பெரிய பாக்கியம். தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் என் இயக்கத்தில் தான் என்பதே எனக்கு மிக பெரிய பெருமை’ என்றார். #UyarndhaManithan #AmitabhBachchan #SJSuryah
நான் எந்த கட்சியிலும், அமைப்பிலும் இல்லை. பொதுமக்களில் ஒருவன் என்று நடிகர் விவேக் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார். #LokSabhaElections2019 #ActorVivek
பாராளுமன்ற தேர்தலையொட்டி அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம், வாக்குறுதிகள் என அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இதற்கிடையில் டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்பட்டு வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் (அ.ம.மு.க.) நடிகர் விவேக் இணைந்துவிட்டார் என்றும், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட உள்ளார் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
ஆனால் இந்த தகவல் வெறும் வதந்தி என்று நடிகர் விவேக் மறுத்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நான் எந்த கட்சியிலும், அமைப்பிலும் இல்லை. பொதுமக்களில் ஒருவன். ஓட்டுப்போடுவது ஜனநாயக கடமை. அதை செவ்வனே செய்வேன். அனைத்து கட்சியினர், தலைவர்கள் என் நண்பர்கள். வதந்திகளை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #ActorVivek
அஜித் சொன்ன ஒரு வார்த்தை தன்னுடைய காதில் ஒலித்துக் கொண்டு இருப்பதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியிருக்கிறார். #Ajith #ThalaAjith #Ghibran
வாகைச்சூடவா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல விருதுகளையும், பலருடைய கவனத்தையும் ஈர்த்தவர் ஜிப்ரான். இவர் கமல் நடிப்பில் வெளியான உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார். மேலும் கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் என்றும் பலரால் அழைக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்திருக்கிறார். அப்பொழுது அஜித் ஜிப்ரானிடம் 'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்' என்று கூறியுள்ளார். அஜித் கூறியது தன் காதில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக ட்வீட் செய்துள்ளார் ஜிப்ரான். விரைவில் அஜித் படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
A true fanboy moment 🤗 with #ThalaAjith sir! He IS what everyone says and even more, 🙏🏻 From all the words he said, the only one keeps ringing 'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்' 😍😍
— Ghibran (@GhibranOfficial) March 31, 2019
Gratitudes 🙏🏻 #sundaysweetdaypic.twitter.com/vW8AXLTfRf
அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் அஞ்சலி, எனது சினிமா பயணத்திற்கு அது ஒரு தடையாக இருக்காது என்று கூறியிருக்கிறார். #Anjali
அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் என நடிக்க தெரிந்த நடிகை என்று பெயர் எடுத்தவர் அஞ்சலி. அஞ்சலியை சுற்றி சமீபகாலமாக நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. நடிகர் ஜெய்யை அவர் காதலிப்பதாக செய்திகள் வந்தன. இருவருமே மறுக்கவில்லை.

தற்போது அந்த கிசுகிசுக்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் ‘நான் யாரையும் காதலிக்கவில்லை. சினிமாவைத்தான் நான் காதலிக்கிறேன். நடிகைகள் காதலிப்பது, திருமணம் செய்துகொள்வது எல்லாம் சகஜம் தான். என்னை பொறுத்த வரை திருமணம் செய்து கொண்ட பிறகும், நான் நடிப்பை தொடருவேன். எனது சினிமா பயணத்திற்கு திருமணம் ஒரு தடையாக இருக்காது”, என அவர் கூறினார்.
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்தாலும், பாலிவுட்டில் பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதாம். #Tamannah
தமன்னா கவர்ச்சியாக நடிக்க தயங்காதவர். பாகுபலி படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடிக்க மாட்டார். அது முத்தக்காட்சி. உதட்டு முத்தக்காட்சிகளில் நடிப்பதை மட்டும் தவிர்த்து விடுகிறார். அப்படியொரு காட்சியில் நடிக்கும் நிலை ஏற்பட்டால் யாருடன் நடிப்பீர்கள்? என்று கேட்டதற்கு இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் உடன் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.
எந்த நடிகருடன் டேட்டிங் செய்ய விருப்பம் என்று தமன்னாவிடம் கேட்டபோது?’ இந்தி நடிகர் விக்கி கவுஷல் உடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார். விக்கி கவுஷல் இந்தி பட இயக்குனர் ஷாம் கவுசலின் மகன். ராஸி, லஸ்ட் ஸ்டோரிஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் படங்களில் நடித்து வந்தாலும் தமன்னாவுக்கு இந்தி பட உலகில் வலம் வரவேண்டும் என்று ஆசை இருக்கிறது.

தற்போது காமோஷி என்ற இந்தி படத்தில் அவர் நடித்துள்ளார். அப்படம் வெளிவர தாமதமாகிறது. பாலிவுட் வட்டார இயக்குனர்கள், நடிகர்களின் கவனத்தை கவரவே அடிக்கடி இந்தி நடிகர்கள் பற்றி தமன்னா பேசி வருவதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்கா, எனக்கு நானே போட்டி என்று கூறியிருக்கிறார். #Anushka
அனுஷ்காவின் ரசிகர் ஹேம்சந்த் என்பவரால் முகநூலில் அனுஷ்கா பெயரில் ஒரு பக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அவரே அந்தப் பக்கத்தை நிர்வகித்து வந்த நிலையில், அனுஷ்கா தனது ஒரு பிறந்தநாளின்போது அதை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அதன் பின்பு இந்தப் பக்கத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இணைந்தனர். தற்போது இந்த முகநூல் பக்கத்தின் ரசிகர்கள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. அனுஷ்காவிடம் ‘சினிமாவில் உங்களுக்குப் போட்டியாக யாரை நினைக்கிறீர்கள்...’ என்று கேட்டால், ‘எனக்குப் போட்டி நான் மட்டுமே’ என்று சொல்லி இருக்கிறார்.
ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019 என்ற பட்டத்தை வென்ற அபூர்வி சைனி, விஜய் சேதுபதிதான் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். #ApurviSaini
சென்னையை சேர்ந்த அபூர்வி சைனி மார்ச் 17ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற "ரூபாறு பேஸ் ஆப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா" என்கின்ற அழகி போட்டியில் கலந்து கொண்டு "ரூபாறு மிஸ் இந்தியா எலைட் 2019" என்ற பட்டத்தை வென்றார். இந்தியா முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், அபூர்வி சைனி பட்டத்தை வென்றார்.
அபூர்வி தற்போது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். 21 வயது ஆகும் இவர், தனது 19ஆவது வயதில் மாடலிங் துறையில் கால் பதித்து "ரிலையன்ஸ் ஜுவேல்ஸ் மிஸ் இந்தியா சென்னை மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா, பிரெஷ் பேஸ் சோசியல் ஸ்டார் போன்றவற்றில் பங்கேற்று பட்டத்தை வென்றுள்ளார். இவர் விளம்பர படங்களிலும் பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டு தனது திறமையை நிரூபித்து உள்ளார்.

நடிப்பு, பாடல், நடனம் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட இவர் இந்தியா சார்பில், பிலிப்பைன்ஸில் நடத்தப்படும் "பேஸ் ஆப் பியூட்டி" என்ற அழகு போட்டியில் இந்த வருட இறுதியில் கலந்துகொள்கிறார்.
தன்னுடைய நாடு சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும். என்னுடைய பட்டத்தின் மூலம் இந்த நாடு, மக்கள் மற்றும் என் பெற்றோர் அனைவருக்கும் பெருமை சேர்ப்பேன் என்றும், தற்போது பெரிய கனவுகளை கண்டு மக்களின் இதயத்தை வெல்ல வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
அவருடைய பெரிய கனவு வெள்ளித்திரையில் கால் பதித்து தனக்கு பிடித்த நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதே ஆகும். மேலும் எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி எனவும் கூறினார்.
‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ஆகிய படங்களை தொடர்ந்து உமாபதி அடுத்ததாக 2 கதாநாயகிகளுடன் நடித்து வருகிறார். #Umapathy
வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ். தம்பி ராமையா-ஷாகுல் ஹமீது இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குனர் இரா மகேஷ் இயக்கும், உமாபதி, யோகிபாபு அசத்தும் தேவதாஸ்.
‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ஆகிய படங்களை தொடர்ந்து உமாபதி ராமையா - யோகி பாபுவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் தேவதாஸ். இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நடிகர் யோகி பாபு கலகலப்பூட்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இத்திரைப்படம் முழுவதும் வலம் வருகிறார்.
மனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டற கலந்தது என்பது அறிந்ததே. ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய துக்கமும், ஒரே நேரத்தில் நடக்குமென்றால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதைக்களம். இந்த உணர்வுப்பூர்வமான கதையை நகைச்சுவை கலந்து, ஜனரஞ்சகமாக விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

இப்படம் பார்க்கும் அனைவரும் பல கட்டங்களில் தாங்கள் சந்தித்த, அனுபவித்த, கடந்து வந்த நினைவுகள் பிரதிபலிக்கும் விதமாக உருவாகி இருக்கிறது திரைக்கதை.
மனிஷா யாதவ், ‘சகா’ ஐரா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் உமாபதியோடு இணைகின்றனர். ஒளிப்பதிவாளர் யுகா காட்சி அமைப்புகளுக்கு வலு சேர்க்க, இப்படத்திற்கு தினேஷ் இசை அமைக்கிறார். படத்தொகுப்பு ரூபன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தே, சமீபத்தில் அளித்த பேட்டியில், வெப் தொடர்களுக்கு சென்சார் கூடாது என்று கூறியிருக்கிறார். #RadhikaApte
‘சிந்திக்கும் ஆற்றல் நிறைந்த சிறந்த நடிகை’ என்ற பெயரை பெற்றிருக்கிறார், ராதிகா ஆப்தே. அதுவே அவருக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மொழிகளைக் கடந்து தனது அர்த்தமுள்ள நடிப்பால் முத்திரை பதிக்கும் ராதிகா ஆப்தே, ஒரே நேரத்தில் சினிமாவிலும் நடிக்கிறார். வெப் தொடர்களிலும் தோன்றுகிறார். அவரது பேட்டி:
தற்போது புகழ் பெற்றுவரும், வெப் தொடர்களுக்கு ‘சென்சார்’ அவசியம் என்று நினைக்கிறீர்களா?
வெப் தொடர்களுக்கு எந்த ‘சென்சார்ஷிப்’பும் கூடாது என்றே நான் கருதுகிறேன். அதற்கு என்ன காரணம் என்றால், மக்கள் எதைப் பார்க்க விரும்புகிறார்களோ, அதை எப்படியாவது பார்க்கத்தான் போகிறார்கள்.

மீடூ இயக்கம், திரைத்துறையில் மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறதா?
மீடூ இயக்கம் ஏற்படுத்திய பெரிய தாக்கம், இனி ஆண்கள் தவறு செய்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பார்கள். பெண்களும் தங்கள் மீதான அத்து மீறல்கள் குறித்துப் பேச வெட்கப்பட வேண்டியதில்லை என்று உணர்ந்திருக்கிறார்கள். இதெல்லாம் பெரிய முன்னேற்றம் தான்.
நாயை மையமாக வைத்து உருவாகி வரும் ‘ராக்கி’ படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். #Rocky #Srikanth
ஸ்ரீகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ராக்கி’. இதில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருடன் ஒரு நாய்க்குட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார் ஸ்ரீகாந்த்.
ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். எம்.எல்.ஏ.வுடன் ஏற்படும் பிரச்சனையில், ஸ்ரீகாந்தை கொலை செய்து விடுகிறார்கள். ஆனால், ராக்கி ஸ்ரீகாந்தை கொலை செய்தவர்களை எப்படி கண்டுபிடிக்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விவேக் வெளியிட்டார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.






