என் மலர்
சினிமா செய்திகள்
மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரின் அடுத்த படைப்பை ரைட்டர் பட இயக்குனர் இயக்கவிருக்கிறார்.
மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தயாரித்த பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்கள் பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில் அவர் தயாரித்த ரைட்டர் திரைப்படம், தியேட்டரில் வெளியாகி விமர்சன ரீதியாக பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்துள்ள ரைட்டர் படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து திலீபன், இனியா, ஹரிகிருஷ்ணன், சுப்பிரமணியம் சிவா, மகேஸ்வரி, லிஸ்ஸி ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர். பிரதீப் காளிராஜ் ஒளிப்பதிவு செய்து கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை, இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கி நல்ல பாராட்டுக்களை பெற்றார். இதன் வெற்றியை தொடர்ந்து அவருக்கு அடுத்த படத்தை இயக்க வாய்ப்பு வந்துள்ளது. விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரும் கோப்ரா, மகான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களின் தயாரிப்பாளருமான லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து டிரைலரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
அஜித் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் செல்லும் இடங்களில் கேட்டு அதனை டிரெண்ட்டாக்கி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினார்கள். அதன் பிறகு இந்த படத்தின் அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளியானது. இந்நிலையில், போனிகபூர் தயாரித்து எச்.வினோத் இயக்கிய இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30 மணியளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் வெளியாவதை குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு முன்பு இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. வலிமை திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
போனிகபூரின் மகனும், பிரபல இந்தி நடிகருமான அர்ஜுன் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா இந்தி திரையுலகினரை அடுத்தடுத்து தாக்க தொடங்கி உள்ளது. பிரபல இந்தி நடிகைகள் கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். இந்த நிலையில் தற்போது இந்தி நடிகரும், தயாரிப்பாளர் போனிகபூரின் மகனுமான அர்ஜுன் கபூர் மற்றும் அவரது சகோதரி அன்ஷுலா கபூர் ஆகியோருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதுபோல் அர்ஜுன் கபூர் உறவினரும், பிரபல இந்தி பட தயாரிப்பாளரான ரியா கபூர் மற்றும் அவரது கணவர் கரண் பூலானி ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. போனிகபூருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது.

கொரோனா தொற்றில் சிக்கிய அர்ஜுன் கபூர் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலிலும், மற்றவர்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினரை கமல் ஹாசன் சந்தித்தபோது, நடிகரும் இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் உடனிருந்தார்.
சென்னை:
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்ததுடன், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில், விக்ரம் படப்பிடிப்பிற்காக பெங்களூரு சென்றிருக்கும் கமல்ஹாசன் அங்கு, இன்று காலை புனித் ராஜ்குமாரின் இல்லத்திற்கு சென்று, புனித் ராஜ்குமாரின் மனைவி மற்றும் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். கமல் ஹாசனுடன் நடிகரும் இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் உடன் சென்றிருந்தார்.
அமலா மற்றும் சர்வானந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கணம் படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் படம் கணம். அம்மா பாசத்தை மையமாக வைத்து சயின்ஸ் ஃபிக்ஷன் கலந்து உருவாகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீகார்த்திக் இயக்கியுள்ளார். இதில் அம்மா வேடத்தில் அமலா நடித்திருக்கிறார். இவருக்கு மகனாக சர்வானந்த் நடித்திருக்கிறார். மேலும் ரீது வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதைக்கு மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ஹித்தேஷ், ஜெய், நித்யா என மூன்று சிறுவர்கள் நடித்துள்ளார்கள்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த டீசர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படம் தமிழில் 'கணம்' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஒகே ஒக ஜீவிதம்' என்ற பெயரிலும் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், தனது தாயின் நினைவாக வீடியோ ஒன்றை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் வயது மூப்பு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். கரீமா பேகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது தாயாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். தாயின் நினைவால் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட இந்த உருக்கமான வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய படங்களில் நடித்த நடிகை ஜெனிலியா, பிரபல நடிகருடன் குத்தாட்டம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் தனது குறும்புத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் ஜெனிலியா. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த ஜெனிலியா, இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.

சல்மான் கான் - ஜெனிலியா
இந்நிலையில், சல்மான் கானுடன் ஜெனிலியா குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சல்மான் கானின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெனிலியா, அவருடன் டான்ஸ் ஆடும் வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
மும்பை சிட்டியில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் வாக்கிங் செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனை அடுத்து சூர்யா நடிப்பில் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படம் உருவாகியுள்ளது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் மும்பையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் அதிகாலையில் வாக்கிங் சென்றிருக்கிறார். இதை ரசிகர்கள் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் படம் பார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த வாரம் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீணா ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ராக்கி’. இப்படத்தை நயன்தாரா - விக்னேஷ் சிவன், தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் வழங்கி இருந்தார்கள். அருண் மாதேஸ்வரன் இயக்கிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ராக்கி படத்தை எஸ்கேப் சினிமாஸில் பார்த்து ரசித்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யை வைத்து ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி, ஆச்சார்யா ரவி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
’சேது’ திரைப்படத்தில் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரவி, விக்னேஷ் நடிப்பில் வெளியான 'ஆச்சார்யா' படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தின் மூலம் ஆச்சார்யா ரவி என்று அறியப்பட்டார். இவர் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். அதே சமயம், விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி இவர்தான் என்று செய்திகள் வெளியானது. இதையடுத்து ஷாஜகான் பட இயக்குனர் ரவி காலமானார் என்றும் செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவியது.

ஷாஜகான் பட இயக்குனர் ரவி அறிக்கை
இந்நிலையில், ஷாஜகான் பட இயக்குனர் ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வணக்கம், நான் விஜய் சாரை வைத்து ’ஷாஜகான்’ படத்தை இயக்கிய ரவி. நண்பர் ஆச்சார்யா பட இயக்குனர் ரவி மரணம் அறிந்து அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவரை இழந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பிரபல நடிகை தமன்னா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோ, ரசிகர்களிடம் கவனம் பெற்று வைரலாகி வருகிறது.
திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக நவம்பர் ஸ்டோரி என்னும் வெப் தொடர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தமன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், சிறுமி ஒருவர் தமன்னாவிற்கு லிப் ஸ்டிக் போடுகிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகி அமலாபாலிற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கோல்டன் விசா வழங்கியுள்ளது.
தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி, பிறகு மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை அமலாபால். தமிழ் திரையுலகின் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்த அமலாபாலுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கோல்டன் விசா வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் சினிமா பிரபலங்கள் சிலரை தேர்ந்தெடுத்து அவருக்கு கோல்டன் விசாவை வழங்கி கெளரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அமலாபாலுக்கு இந்த விசாவை வழங்கியிருக்கிறது. இந்த உற்சாக செய்தியை அமலாபால் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இதற்கு முன்பு நடிகை திரிஷா, இயக்குனர் பார்த்திபன், மலையாள நடிகர் மோகன்லால், மம்முட்டிக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.






