என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பேச்சிலர் மற்றும் ஜெயில் படத்தை தொடர்ந்து நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் குடியரசு தினத்தில் வெளியாக இருக்கிறது.
    சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் மற்றும் ஜெயில் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், இவர் நடிப்பில் உருவாகி ஐங்கரன் திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

    ஐங்கரன் படத்தின் போஸ்டர்
    ஐங்கரன் படத்தின் போஸ்டர்

    காமன்மேன் நிறுவனம் சார்பில் பி.கணேஷ் ஐங்கரன் படத்தை தயாரித்துள்ளார். ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக, மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும், காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
    சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் வாழ்க்கை கதையை வைத்து எடுக்கபட்ட திரைப்படம் 83. இந்த படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பங்கஜ் திரிபாதி, ஜீவா போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் அறிவிப்பு வந்ததிலிருந்து எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. அதன்பிறகு இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியானதிலிருந்து அனைவரையும் அந்த படத்தை பற்றி முணுமுணுக்க வைத்தது. 

    இந்த படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்கள் அவர்களுடைய வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று நடிகர் ரஜினிகாந்த் 83 படம் குறித்து அவருடைய கருத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

    ரஜினிகாந்த் பதிவு
    ரஜினிகாந்த் பதிவு

    அதில் அவர் கூறியிருப்பது, வாவ் வாட்ட மூவி, அற்புதமான திரைப்படம் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இவருடைய இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவிவருகிறது.
    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியின் வரிசையில் இருக்கும் நடிகையின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
    விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை படங்களில் தோன்றி தமிழ் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் ’கலியுகம்’ என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார். இப்படம் நவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. இப்படத்தை ஆர்.கே இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ்.ராமகிருஷ்ணா தயாரிக்கிறார்.

    இப்படத்தில் நடிகர் கிஷோருடன் புதுமுக நடிகர்கள் நடிக்கிறார்கள். இயக்குனர் ப்ரமோத் சுந்தர் இயக்கி, கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.

    ஷ்ரத்தா ஸ்ரீநாத்
    ஷ்ரத்தா ஸ்ரீநாத்

    போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் தயாராகி வரும் 'கலியுகம்' திரைப்படம் இளைய தலைமுறை கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருகிறதால் இத்திரைபடத்தின் எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.
    ஆச்சார்யா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கிறார்.
    தமிழ் சினிமாவின் இயக்குனராக அறியப்பட்ட இயக்குனர் ஆச்சார்யா ரவி மாரடைப்பால் காலமானார். ’சேது’ திரைபடத்தில் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரவி, பிறகு விக்னேஷ் நடிப்பில் வெளியான 'ஆச்சார்யா' படத்தை இயக்கினார்.

    இத்திரைப்படத்தின் மூலம் ஆச்சார்யா ரவி என்று அறியப்பட்டார். சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். 

    இந்நிலையில் இயக்குனர் ஆச்சார்யா ரவி சிகிச்சை பலனின்றி இன்று (28.12.2021) காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    நடிகை சமந்தாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்து வருகிறது.
    மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு பலமொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் அழியா இடம் பிடித்தவர் நடிகை சமந்தா. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்துக்கொண்டார்.

    இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில் திடீரென தனது கணவரை பிரிந்தார்.

    அதன் பின்னர் இவர் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடிப்பதில் முழுகவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

    சமந்தா
    சமந்தா

    இவர் சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தில், சமந்தா ஆடிய  ஓ சொல்றியா மாமா பாடல்  சில எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துவந்தார்.

    இந்நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் தோழிகளுடன் கோவா சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அதில் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
    ஆர்.ஆர்.ஆர் திரைபடத்தின் இசைவெளியீட்டு விழாவில் அப்படத்தை பற்றியும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் பற்றியும் இந்திய மண்ணை பற்றியும் அப்படத்தின் இயக்குனர் ராஜமவுலி பேசினார்.
    பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.

    ஆர்ஆர்ஆர்

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் அப்படத்தின் இயக்குனர் ராஜமவுலி பேசும் போது, தமிழ் தாய்க்கு வணக்கம். சென்னை மாநகருக்கு வணக்கம். 13 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு முன்தொகை கொடுத்ததால் பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தை அவருக்கு கொடுத்துள்ளேன். இப்படத்தின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு நன்றி. எனக்கு 50 வயது ஆகிறது. இப்போதும் என் அப்பா அவர் மேல் உட்கார வைத்து உலகத்தை காட்டுகிறார். இந்திய மண்ணில் இருக்கும் ஒரு புரட்சி, இந்திய மண்ணில் இருக்கும் ஒரு கலாச்சாரம் அதுதான் இப்படம். இந்த மாதிரி படம் பண்ண இருவர் வேண்டும். நல்ல நண்பர்களாக சகோதரர்களாக அப்படி பட்ட இருவர்தான் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் என்றார்.
    சென்னையில் நடைபெற்ற ஆர்.ஆர்.ஆர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மேடையிலேயே அப்படத்தின் இயக்குனரை புகழ்ந்து பேசினார்.
    பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.

    ஆர்.ஆர்.ஆர்

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசும் போது,  இரண்டு வருடங்களுக்கு பிறகு சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்கிறேன். அதற்கு காரணம் இயக்குனர் ராஜமவுலி மட்டும்தான். அவருடைய பெரிய ரசிகன் நான். இந்தப் படம் பாகுபலியின் சாதனையை முறியடிக்கும் என ராஜமவுலியிடம் சொன்னேன். எனக்கு நடனம் வராது. சிலருக்கு நடனம் ஆடினால்தான் கழுத்து சுளுக்கும். இவர்கள் ஆடுவதை பார்த்தாலே எனக்கு கழுத்து சுளுக்கிக்கொண்டது.

    எனக்கு நடனம் சுத்தமாக வராது. இந்தப் படத்திற்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. 10 வருடங்கள் முன்னர் மஹதீரா படத்தை டப் செய்து தமிழில் வெளியிட்டோம். அப்போது சத்யம் திரையரங்கில் அப்படத்தை வெளியிட வேண்டும் என ராஜமவுலி கேட்டுக்கொண்டார். இப்போது ஆர்ஆர்ஆர்  படத்தை மூன்று ஏரியாக்களில் ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது. எப்படியும் சத்யம் திரையரங்கின் 6 திரைகளில் 5 திரைகளில் இந்தப் படத்தைத்தான் போடுவோம். இந்தப் படம் தென்னிந்தியாவின் ஒரு மைல் கல்லாக இருக்கும்” என்று கூறினார்.
    ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஆர்.ஆர்.ஆர். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
    பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது. 

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஜூனியர் என்.டி.ஆர். பேசும் போது, இரண்டு பெரிய ஹீரோக்கள் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு... முன்பு ரஜினி, கமல் படங்கள் பார்த்த அதே உணர்வு தற்போது எழுந்துள்ளது. இரண்டு பெரிய ஹீரோக்களை வைத்து அப்போ கே.பாலசந்தர் செய்தார். தற்போது ராஜமவுலி செய்து இருக்கிறார்.

    ஜூனியர் என்.டி.ஆர்

    ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் தியேட்டரில் வந்து பாருங்கள் என்றார். 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், ஆர்.ஆர்.ஆர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது. 

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும் போது, ராஜமவுலி இயக்கிய மகதீரா திரைப்படம் பார்த்ததிலிருந்து மிகப்பெரிய ரசிகன் ஆகிவிட்டேன். அப்புறம் ஈ படம் பார்த்து பிரமித்து போனேன்.

    ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர்

    ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இவர்கள் இரண்டு பேரை புலி அல்லது சிங்கம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு திரையில் தெரிகிறார்கள். இவர்கள் இரண்டு பேர் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். சுதந்திரம் வாங்க நிறைய பேர் இரத்தம் சிந்தினார்கள். அந்தளவிற்கு ஆர்.ஆர்.ஆர் படத்தில் உள்ளவர்கள் இரத்தம் சிந்தி உழைத்து இருக்கிறார்கள். நாம் அனைவரும் தியேட்டரில் படத்தை பார்ப்பது தான், அவர்களுக்கு நாம் தரும் மரியாதை. நான் முதல் நாள் முதல் ஷோவை பார்த்துடுவேன் என்றார்.
    சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் 2வது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
    பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். 

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘வாடா தம்பி...’ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி வைரலானது. இந்நிலையில் அடுத்த பாடலான உள்ளம் உருகுதய்யா என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


    தமிழின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை பாலிவுட்டில் தடம் பதிக்க தயாராகவுள்ளார்.
    மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை அமலாபால். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உருவெடுத்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழியுலகில் முன்னணி நட்சத்திரங்களின் ஜோடியாக இணைந்து அனைவரின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

    பிறகு மலையாளத்தில் பிரித்திவிராஜ் உடன் இணைந்து நடித்துள்ள ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்தார். தமிழில் அமலாபால் நடிப்பில் திரில்லர் படங்களாக தயாராகியுள்ள ’அதோ அந்த பறவை போல’ மற்றும் ’கடாவர்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. 

    அமலா பால்

    இதனைதொடர்ந்து முதல்முறையாக பாலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார் அமலாபால். இவரது நடிப்பில் புதிய வெப்சீரிஸ் ஒன்று தயாராகி வெளிவரவுள்ளது. 1980களில் பிரபலமான பாலிவுட் நடிகையான பர்வீன் பாபியை மையப்படுத்தி உருவாகியுள்ள ரஞ்சிஷ் ஹி சஹி வெப் சீரிஸில் பர்வீன் பாபி என்ற கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ளார்.

    மகேஷ் பட் உருவாக்கியுள்ள இந்த வெப்சீரிஸில் தாஹிர் ராஜ் பாசின், அம்ரிதா பூரி மற்றும் பல முன்னணி கதாபாத்திரங்கள் இதில் நடிக்கின்றனர். புஷ்படீப் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. நேரடியாக இந்த வெப்சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமும் துருவும் இணைந்து நடித்து வெளியாக காத்திருக்கும் ‘மகான்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் 'மகான்'. விக்ரமும் அவருடைய மகனும் இணைந்து நடித்திருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    விக்ரம் - துருவ் விக்ரம்

    இந்நிலையில் இந்த படத்தை பற்றிய அப்டேட் இன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. ஒவ்வொரு படங்களும் தணிக்கைக்கு சென்றபிறகு அந்த படத்திற்கு எந்த சான்று கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும் மக்களிடையே அதிகரிக்கும். அந்தவரிசையில் மகான் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று அளித்துள்ளது. இதனை சமூகவலைத்தளங்கலில் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
    ×