search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின்
    X
    உதயநிதி ஸ்டாலின்

    பிரபல இயக்குனரை மேடையில் புகழ்ந்து பேசிய உதயநிதி

    சென்னையில் நடைபெற்ற ஆர்.ஆர்.ஆர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மேடையிலேயே அப்படத்தின் இயக்குனரை புகழ்ந்து பேசினார்.
    பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.

    ஆர்.ஆர்.ஆர்

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசும் போது,  இரண்டு வருடங்களுக்கு பிறகு சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்கிறேன். அதற்கு காரணம் இயக்குனர் ராஜமவுலி மட்டும்தான். அவருடைய பெரிய ரசிகன் நான். இந்தப் படம் பாகுபலியின் சாதனையை முறியடிக்கும் என ராஜமவுலியிடம் சொன்னேன். எனக்கு நடனம் வராது. சிலருக்கு நடனம் ஆடினால்தான் கழுத்து சுளுக்கும். இவர்கள் ஆடுவதை பார்த்தாலே எனக்கு கழுத்து சுளுக்கிக்கொண்டது.

    எனக்கு நடனம் சுத்தமாக வராது. இந்தப் படத்திற்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. 10 வருடங்கள் முன்னர் மஹதீரா படத்தை டப் செய்து தமிழில் வெளியிட்டோம். அப்போது சத்யம் திரையரங்கில் அப்படத்தை வெளியிட வேண்டும் என ராஜமவுலி கேட்டுக்கொண்டார். இப்போது ஆர்ஆர்ஆர்  படத்தை மூன்று ஏரியாக்களில் ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது. எப்படியும் சத்யம் திரையரங்கின் 6 திரைகளில் 5 திரைகளில் இந்தப் படத்தைத்தான் போடுவோம். இந்தப் படம் தென்னிந்தியாவின் ஒரு மைல் கல்லாக இருக்கும்” என்று கூறினார்.
    Next Story
    ×