என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்த கதாநாயகி ஒருவர் சாந்தனுவுடன் காதல் ஆல்பம் ஒன்றிருக்கு இணைந்திருக்கிறார்.
    சமீபத்தில் பல நடிகர்கள் ஆல்பம் பாடல்களில் நடித்து அது மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் பெற்று வருகின்றனர். அதே பாணியில் திரைகதையின் நாயகன் பாக்யராஜ் அவர்களின் மகன் சாந்தனுவும் களத்தில் இறங்கியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக விஜய்சேதுபதி நடித்த புரியாத புதிர் படத்தில் நடித்த மகிமா நம்பியார் நடித்திருக்கிறார். ஆதவ் கண்ணதாசன் இயக்கி இருக்கும் இந்த ஆல்பத்திற்கு 'குண்டுமல்லி' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 

    மகிமா நம்பியார்

    இது பற்றி மகிமா நம்பியார் கூறியதாவது, ஆதவை எனக்கும் ஐந்தாறு வருடங்களாகத் தெரியும் என்றாலும், அவருக்குள் ஒரு இயக்குனர் இருக்கிறார் என்பதை இந்த ஆல்பத்தில் நடித்தபோது தான் தெரிந்துகொண்டேன். நிச்சயம் அவர் நல்ல தரமான படத்தை விரைவில் இயக்கி முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடிப்பார். திரைப்படப்பாடல்களில் நடிக்க நமக்கு போதுமான அவகாசம் கிடைக்கும். ஆனால் ஆல்பத்தில் ஸ்பாட்டுக்கு வந்தவுடன் காதல் மூடுக்கு வந்துவிடவேண்டும் அப்படிதான் சாந்தனுவை பார்த்ததும் காதல் செய்ய ஆரம்பித்தேன்’ என்றார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் நடித்து வரும் புதிய படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்து இருக்கிறார்.
    சல்மான் கான் நடிப்பில் வெளியான டைகர் படத்தின் பாகம் ஒன்று மற்றும் 2 சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து டைகர் படத்தின் 3ஆம் பாகம் உருவாகி வருகிறது. இதில் சல்மான்கானுக்கு ஜோடியாக கத்ரினா கைப் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஷாருக்கான் - சல்மான் கான்
    ஷாருக்கான் - சல்மான் கான்

    இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சல்மான் கான் படத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பது, ரசிகர்கள் மத்தியில் டைகர் 3 பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தை தவிர பதான் என்ற படத்திலும், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் ஷாருக்கான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்று சாதனை படைத்துள்ளது.
    எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த படம் சுல்தான். அதிரடி ஆக்‌ஷன் படமான இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைத்திருந்த இப்படம், ஏப்ரல் 2-ந் தேதி தமிழ், தெலுங்கில் வெளியானது. 

    சுல்தான்

    தமிழகத்தைப் போலவே ஆந்திரா, தெலுங்கானாவிலும் சுல்தான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘ஜெய் சுல்தான்...’ என்ற பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இந்நிலையில் இப்பாடல் யூடியூப் தளத்தில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதை கார்த்தி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
    சன்னி லியோன் நடனம் ஆடிய பாடல் இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    மும்பை:

    கிருஷ்ணர் - ராதையின் காதலை பேசும் ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ பாடலுக்கு நடிகை சன்னி லியோன் நடனமாடிய வீடியோ ஒன்றை சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த நடனம் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஆபாசமாக அமைந்துள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். 

    இந்நிலையில் சன்னி லியோன் அந்த பாடலை 3 நாட்களுக்குள் நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய பிரதேச மந்திரி நரோட்டம் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

    நரோட்டம் மிஸ்ரா

    இதையடுத்து அந்த பாடலை வெளியிட்டுள்ள சரிகம நிறுவனம், மூன்று நாட்களுக்குள் பாடலின் வரிகளும், பெயரும் மாற்றப்படும் என உறுதி அளித்துள்ளது.
    திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களை மாணிக்க விநாயகம் பாடியுள்ளார்.
    சென்னை:

    பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமானார்.

    2001-ம் ஆண்டு வெளியான ’தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.

    திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுபுறப்பாடல்கள் என 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ள இவர், திருடா திருடி, கம்பீரம், பேரழகன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

    இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    ரஜினி, கமல் உச்சத்தில் இருந்த காலத்திலும் பாடல்கள் மூலம் பிரபலமான மைக் மோகன் என அழைக்கப்படும் மோகன் மீண்டும் நடிக்க வருகிறார்.
    தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977-ம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் கதாநாயகனாக உயர்ந்தார்.

    இவர் படங்களில் பாடல்கள் சூப்பர் டூப்பட் ஹிட்டாக அமைந்திருந்தது. பெரும்பாலான படங்கள் மைக் பிடித்து பாடும் கேரக்டராக அமைந்தது. இதனால் இவரை மைக் மோகன் என்று அழைக்கப்பட்டார்.

    மோகன்

    1980- 90-களில் தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு இடம் இருந்தது. அதன்பின் நீண்ட காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது அவர்  ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

    தாதா 87  மற்றும் பவுடர் போன்ற  படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீஜி இயக்கும் புதிய படத்தில் மோகன் நாயகனாக நடிக்க உள்ளார். படத்திற்கு சில்வர் ஜுப்ளி ஸ்டார் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. பொங்கல் முடிந்ததும் ஷூட்டிங் தொடங்க இருக்கிறார்கள்.
    நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் டைரக்டர் சுராஜ்க்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அவரும் நேற்று இரவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    நடிகர் வடிவேலு, டைரக்டர் சுராஜ் இயக்கி வரும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

    இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக லண்டனில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு முடிந்து கடந்த 23-ந்தேதி வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

    அப்போது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து நேற்று முன்தினம் நடிகர் வடிவேலு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு 7-வது மாடியில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கான வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வடிவேலுவின் உடல் நிலை சீராக உள்ளது என்றும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நாட்களில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் படத்தின் டைரக்டர் சுராஜ்க்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அவரும் நேற்று இரவு அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் லண்டன் சென்று திரும்பிய படக்குழுவினர் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சல்மான் கான் தனது பண்ணை வீட்டிற்கு சென்றிருந்தார்.
    மும்பை:

    நடிகர் சல்மான் கான் நாளை தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதற்காக அவர் பன்வெல்லில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு செடிகளுக்கு இடையே இருந்த பாம்பு ஒன்று சல்மான் கானை கடித்தது.

    இதையடுத்து அவர் கமோதில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லப்பட்டார். சல்மான் கானை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை கடித்த பாம்பு விஷமில்லாதது என தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
    டிசம்பர் 16ந் தேதி அன்று இந்தியா முழுவதும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே சமயத்தில் Spider man No way Home படம் வெளியானது.
    ‘Spider man : No way Home' திரைப்படத்தில் ஸ்பைடர்மேன் முந்தைய பாகங்களில் நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட பலரும்  நடித்துள்ளனர். மேலும் டாக்டர் ஆக்டோபஸ் மிரட்டலாக நடித்துள்ளார். இளம் ரசிகர்களை கவர்ந்த இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

    இந்நிலையில் இப்படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனாக ரூ.6000 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
    இணையத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.
    தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அவருடைய எளிமையான அணுகுமுறையும், விஷய ஞானமும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்களைக் கொண்டுவந்து சேர்த்தது.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும்.

    வருண்-அக்‌ஷரா
    வருண்-அக்‌ஷரா

    அதன்படி இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்றுள்ளது. அக்‌ஷரா மற்றும் வருண் இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    80 நாட்களை கடந்து வலிமையான போட்டியாளர்கள் என்று பேர் எடுத்த அக்‌ஷரா மற்றும் வருண் ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை அடுத்து இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி போறப்போகிறார்கள் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது.
    ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா, அமைதியாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் என செல்வராகவன் பதிவு செய்துள்ளார்.
    காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, இரண்டாம் உலகம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிவர் செல்வராகவன். தனுஷ் அண்ணாகிய செல்வராகவன் தற்போது ராக்கி பட இயக்குனரின் சாணிக்காகிதம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.



    இந்த நிலையில் செல்வராகவன் இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் “ஒரு இடத்தில் உங்களை மதிக்கவில்லையா, அமைதியாய் புன்னகைத்து  விட்டு அங்கிருந்து வெளியேறி விடுங்கள் ! அவமானத்தை சகித்துக் கொண்டு உண்ணும் விருந்தை விட மானத்துடன் உண்ணும் பழையது அமிர்தம்” என தெரிவித்துள்ளார்.
    கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குநர் சுராஜ், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். இப்படப்பிடிப்பிற்காக லண்டன் சென்று திரும்பிய நடிகர் வடிவேலுவுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இந்நிலையில், இயக்குநர் சுராஜுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவரும் போரூர் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடிவேலுவும், தானும் நலமாக இருப்பதாக சுராஜ் தெரிவித்துள்ளார். 
    ×