என் மலர்
சினிமா செய்திகள்
இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி அடுத்ததாக விஜய் மில்டன் படத்தில் நடிக்கிறார்.
கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இப்படம், முதல் முறையாக தாமன் & தியூ பகுதியில் படமாக்கப்படும் முதல் தமிழ்படம் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது. 2022 ஆம் ஆண்டு மத்தியில் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிக முக்கியமான பாத்திரமொன்றில் நடிக்கிறார். கன்னட திரையுலகின் மிக திறமை வாய்ந்த இரண்டு நடிகர்களான தனஞ்செயா மற்றும் ப்ருத்வி அம்பர் இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்கள்.

இப்படி பல பேர் இணைந்த கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இப்படம், முதல் முறையாக தாமன் & தியூ பகுதியில் படமாக்கப்படும் முதல் தமிழ்படம் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது. 2022 ஆம் ஆண்டு மத்தியில் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிக முக்கியமான பாத்திரமொன்றில் நடிக்கிறார். கன்னட திரையுலகின் மிக திறமை வாய்ந்த இரண்டு நடிகர்களான தனஞ்செயா மற்றும் ப்ருத்வி அம்பர் இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்கள்.
மேலும் சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாகூர் பிரணிதி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் ரமணா ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேகா ஆகாஷ்
இப்படி பல பேர் இணைந்த கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சன்னி லியோன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இந்தியாவிலேயே இருக்க முடியாது என எச்சரித்து வருகின்றனர்.
மும்பை:
பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வெளியிட்டுள்ள நடன வீடியோ ஒன்று இந்து மதத்தை அவமதிப்பதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1960-ம் ஆண்டு எஸ்.யூ சன்னி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோஹினூர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ என்ற பாடலுக்கு நடனமாடி நடிகை சன்னி லியோன் சமீபத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இதை தடை செய்யக்கோரி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து உத்தரப்பிரதேசம் மதுராவை சேர்ந்த தலைமை மத குருவான சந்த் நாவல் கிரி மகராஜ் கூறியதாவது:-
கிருஷ்ணர் - ராதையின் காதலை பேசும் ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ பாடலுக்கு நடிகை சன்னி லியோன் ஆபாச நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த நடனம் இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. அந்த பாடலை அரசு உடனே தடை செய்ய வேண்டும். சன்னி லியோனும் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும். மீறினால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். அவர் இந்தியாவிலேயே இருக்க முடியாது.
இவ்வாறு சந்த் நாவல் கிரி மக்ராஜ் எச்சரித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையும், தமிழில் ரட்சகன், முதல்வன் படங்களில் நடித்த நடிகை சுஷ்மிதா சென், காதலரை பிரிந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்.
தமிழில், நாகார்ஜுனா ஜோடியாக ‘ரட்சகன்’ படத்தில் நடித்தவர் சுஷ்மிதா சென். அர்ஜுன் நடித்த ‘முதல்வன்’ படத்தில் ஷக்கலக்க பேபி பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘ஆர்யா-2’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
சுஷ்மிதா சென்னுக்கு 45 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் தன்னைவிட 16 வயது குறைந்த ரோஹ்மன் சால் என்ற விளம்பர பட நடிகரை 3 வருடமாக சுஷ்மிதா காதலித்து வந்தார். இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் பரவியது.

இந்த நிலையில் காதல் முறிந்து விட்டதாக சுஷ்மிதா சென் அறிவித்து உள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஷ்மிதா சென் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ரோஹ்மனுடனான எனது காதல் உறவு முறிந்துவிட்டது. ஆனாலும் நண்பர்களாக இருப்போம், அன்பு தொடரும். நீண்டகால உறவு முடிவுக்கு வந்து விட்டது’ என்று கூறியுள்ளார்.
விஜயகாந்த் தற்போது கட்சிப்பணிகளை பார்ப்பதுடன், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஓய்வில் இருப்பதாக பிரேமலதா கூறினார்.
இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடிக்க உள்ளதாகவும் இதற்காக நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயகாந்த் நடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நடிக்க இருப்பதாக வந்த தகவல் தவறானது என பிரேமலதா கூறியுள்ளார்.
விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக வந்த செய்தியை பார்த்து வியந்தேன். தவறான செய்தி அது. விஜயகாந்த் தற்போது கட்சிப்பணிகளை பார்ப்பதுடன், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஓய்வில் இருக்கிறார்.
ஒருவேளை விஜயகாந்த் நடிப்பதாக இருந்தால் கட்சியின் தலைமைக்குழு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நடிக்க இருப்பதாக வந்த தகவல் தவறானது என பிரேமலதா கூறியுள்ளார்.
விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக வந்த செய்தியை பார்த்து வியந்தேன். தவறான செய்தி அது. விஜயகாந்த் தற்போது கட்சிப்பணிகளை பார்ப்பதுடன், உடற்பயிற்சியை மேற்கொண்டு ஓய்வில் இருக்கிறார்.
ஒருவேளை விஜயகாந்த் நடிப்பதாக இருந்தால் கட்சியின் தலைமைக்குழு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராதே ஷியாம் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு பிறகு 'ராதே ஷியாம்' படம் மூலம் மீண்டும் ஒரு காதல் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று டிரைலர் சூப்பர் ஹிட் ஆனது.
பிரபாஸுக்கும் பூஜா ஹெக்டேவுக்கும் இடையிலான காதல் தான் படத்தின் முக்கிய அம்சமாக டிரைலரில் உள்ளது. இவர்களின் காதல் வாழ்க்கையை விதி எப்படி பாதிக்கிறது என்பதுதான் படத்தின் சாராம்சம் என்று டிரைலரை பார்க்கும் போது தெரிகிறது.
யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில் உருவாகி வரும் ராதே ஷியாம் படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார்.
பெண்கள் குறித்து சமூகம் கொண்டிருக்கும் பொதுப்பார்வையை கேள்வி கேட்கும், வலிமையான பெண் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாக ஹார்னாஸ் சாந்து தெரிவித்துள்ளார்.
புது டெல்லி:
கடந்த டிசம்பர் 12-ம் தேதி இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற உலக பிரபஞ்ச அழகி போட்டியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஹர்னாஸ் கவுர் சாந்து வெற்றி பெற்றார். அவர், தான் வாழ்க்கையில் போராடும் இளைஞரை தான் காதலிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அவர் கொடுத்த பேட்டியில் கூறியிருப்பது:-
நான் ஒரு பணக்காரரை காதலிப்பதை விட வாழ்க்கையில் முன்னேற கடுமையாக போராடும் ஒரு இளைஞரை தான் காதலிக்க விரும்புகிறேன். காரணம் நானும் வாழ்க்கையில் போராடி தான் பிரபஞ்ச அழகி போட்டியில் வெற்றி பெற்றேன். இன்னும் போராடிக்கொண்டு தான் இருக்கிறேன். வாழ்க்கையில் போராட்டம் அவசியம் என நான் நாம்புகிறேன். அப்போது தான் நம்முடைய சாதனைகளுக்கு நாம் மதிப்பை வழங்க முடியும்.
திரைப்படங்களில் நடித்தால் வழக்கமான பெண் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை. பெண்கள் குறித்து சமூகம் கொண்டிருக்கும் பொதுப்பார்வையை கேள்வி கேட்கும் வலிமையான பெண் கதாபாத்திரங்களில் தான் நடிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு ஹர்னாஸ் கவுர் சாந்து கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில், நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான்... கைவிடமாட்டான் என்று கூறியிருக்கிறார்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது அண்ணாத்த படத்தின் 50-வது நாள் வெற்றி விழாவை சென்னையில் படக்குழுவினர் கொண்டாடினர். இதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு தங்க செயின் பரிசளித்தார்.
பின்னர் அவர்களுடன் சிலமணி நேரம் கலந்துரையாடியபோது, ‘‘அண்ணாத்த படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியான பிறகும் தமிழகத்தில் பல தியேட்டர்களில் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தியேட்டர் அதிபர்களும் போனில் தொடர்பு கொண்டு சந்தோஷப்பட்டனர். இந்தியிலும் படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. உங்களை சந்தித்தது மகிழ்ச்சி’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் ஹூட் செயலியில் பேசி ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பல இடர்களை தாண்டி அண்ணாத்த படத்தை முடித்தோம். எதிர் விமர்சனம், மழை, ஆகியவற்றை கடந்து அண்ணாத்த படம் வெற்றி பெற்றுள்ளது. மழை இல்லையென்றால் படம் இன்னும் பெரிய வெற்றியடைந்து இருக்கும். நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான். கைவிடமாட்டான்’’ என்று கூறியுள்ளார்.
உடல்நிலைக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார்.
இப்படப்பிடிப்பிற்காக நடிகர் வடிவேலு லண்டன் சென்றிருந்தார். இந்நிலையில் உடல்நிலைக்குறைவு காரணமாக லண்டனில் இருந்து திரும்பிய அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லேசான அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வடிவேலு தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படப்பிடிப்பிற்காக நடிகர் வடிவேலு லண்டன் சென்றிருந்தார். இந்நிலையில் உடல்நிலைக்குறைவு காரணமாக லண்டனில் இருந்து திரும்பிய அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லேசான அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வடிவேலு தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் திடீரென சந்தித்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை சந்தித்து இருக்கிறார். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய்யின் அடுத்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார் என்று பதிவு செய்து வருகிறார்கள்.
சமீபத்தில் தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் ஒத்த செருப்பு படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி விருதை பெற்ற பார்த்திபனுக்கு தற்போது சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமான ஆர் பார்த்திபன் பெற்றுள்ளார். சினிமா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற திரைப்பட ஆளுமையான பார்த்திபனுக்கு துபாயின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஆணையத்தின் (ICA) அதிகாரிகள் விசாவை வழங்கினர். தனக்கு தங்க விசா வழங்கிய துபாய் அரசுக்கு பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து பேசிய அவர், "எனக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். துபாய் அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த சிறப்புரிமைக்கு தகுதியானவன் என்று என்னை கருதியதற்காக துபாய் அரசுக்கு அன்பும் நன்றியும்,” என்று கூறினார்.

தங்க விசா பெறும் பார்த்திபன்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா என்பது நீண்ட கால குடியிருப்பு விசா முறையாகும், இது ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுகிறது, மேலும் தானாகவே புதுப்பிக்கப்படும் வசதியையும் கொண்டதாகும். பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரிய திறன்களைக் கொண்டவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் குளிக்க வைக்க சிம்பு அதிரடி நடவடிக்கை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் பல தடைகளை கடந்து நவம்பர் மாதம் 25-ந்தேதி தியேட்டரில் வெளியானது. அடுத்த சில நாட்களில் மாநாடு படத்தின் வெற்றியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் சிம்பு கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் சில தினங்களுக்கு முன்பு மாநாடு படத்தின் 25 வது நாளை படக்குழுவினர் கொண்டாடினார்கள்.

இந்நிலையில் மாநாடு படம் ஹிட் ஆனதையொட்டி நடிகர் சிம்பு தன் ரசிகர்களுடன் ஒரு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவ்விழா ஜனவரி 6-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை சிம்பு மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்செய்தி சிம்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இயக்குனர் சேதுமாதவன் மறைவிற்கு நடிகர் கமல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவு செய்திருக்கிறார்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் சேதுமாதவன். மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனரான இவர் சென்னையில் வசித்து வந்தார். 90 வயதான சேதுமாதவன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இயக்குனர் சேதுமாதவனுக்கு மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
மலையாளத்தில் பல படங்களை இயக்கிய சேதுமாதவன் தமிழில் சிவகுமார்-ராதா நடித்த மறுபக்கம் படத்தை இயக்கினார். இப்படம் தேசிய அளவில் சிறந்த சினிமாவுக்கான விருதை பெற்றது. மலையாள சினிமாவில் நடிகர் கமல்ஹாசனை இவர்தான் அறிமுகம் செய்தார். 1962-ம் ஆண்டு கண்ணும் காராளும் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார்.
காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள். pic.twitter.com/CXPcyVuMDA
— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2021
இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சேதுமாதவன் மறைவிற்கு நடிகர் கமல் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம். மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர். தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூறப்படுவார். என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்’ என்று பதிவு செய்து இருக்கிறார்.






