என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் அப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
    அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி யூடியூப்பில் டிரெண்டானது.

    அஜித்

    மேலும் பல பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துவரும் நிலையில், வலிமை படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். அதாவது படத்திற்கு தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதாகவும், வலிமை படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
    சிம்பு நடிப்பில் வெளிவரவிருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தை பற்றிய புதிய அப்டேட்டை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
    மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் வெந்து தணிந்தது காடு. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய கவுதம் மேனன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். 

    இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கயாடு லோகர் கதாநாயகியாக நடிக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தற்போது இவர்கள் கூட்டணியில் மற்றொரு கதாநாயகியாக சிட்தி இட்னானி இணைந்திருக்கிறார்.

    பாவை கதாபாத்திரத்தில் நடிக்கும் சிட்தி இட்னானியை படக்குழுவினர் இன்று வரவேற்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். சிம்பு, சிட்தி இட்னானி சம்பந்தப்பட்ட காட்சிகளை ஜனவரி 3 ஆம் தேதி முதல் படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.


    பா.இரஞ்சித் தயாரிப்பில், சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி இருக்கும் ரைட்டர் படத்தை ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார்.
    இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ரைட்டர் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் ரைட்டர் படம் பார்த்த ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குனர் பிராங்ளின்,
    மற்றும் சமுத்திரக்கனி ஆகியோருக்கு போன் செய்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

    'பிரமாதமான படம் ரைட்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ரொம்ப சூப்பரா எல்லோரும் நடிச்சிருக்காங்க, சமுத்திரக்கனி சிறப்பா நடிச்சிருக்கிறார். சிறந்த எதிர்காலம் பிராங்ளினுக்கு இருக்கு. படம் விறுவிறுப்பாக இருந்தது சீக்கிரம் படம் முடிகிறதே என்கிற உணர்வு வந்தது என்று ரஜினி பாராட்டி இருக்கிறார்.

    சமுத்திரகனி

    ரஜினிகாந்த் போன் செய்து பாராட்டியதில் ரைட்டர் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
    காதல் திருமணம் செய்து கொண்ட அபி சரவணன் - அதிதி மேனன் அவர்களின் திருமணப் பிரச்சனை சில வருடங்களுக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
    கடந்த 2016-ல் வெளியான பட்டதாரி என்ற படத்தில் இணைந்து நடித்தவர்கள் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன். தற்போது அபி சரவணன், விஜய் விஷ்வா என்றும் அதிதி மேனன் தற்போது மிர்னா என்றும் பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார்கள்.

    பட்டதாரி படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்து பின் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். சில மாதங்களில் அபி சரவணனுக்கும் தனக்கும் திருமணம் நடக்கவில்லை என்றும், போலியான சான்றிதழ்களை வைத்து தன்னை அவர் மிரட்டுகிறார் என்றும் காவல்துறையில் மிர்னா புகார் அளித்தார். இதுகுறித்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மிர்னா மீது குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் அபி சரவணன்.

    அபி சரவணன் - அதிதி மேனன்

    தற்போது டிசம்பர் 22, 2021 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்துள்ளது. அந்த தீர்ப்பில் மிர்னாவும் அபி சரவணனும் திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என்றும் இரண்டு மாதத்திற்குள் மிர்னா மேனன் அபி சரவணனுடன் இணைந்து வாழ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

    நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மிர்னா மேனன் என்னுடன் தான் வாழவேண்டும் என ஒருபோதும் நான் கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனால் அவருக்காக எப்போதும் நான் காத்திருப்பேன். ஏனென்றால் என் காதல் உண்மையானது. உண்மையான என் காதலை புரிந்துகொண்டு அவர் மீண்டும் என்னிடம் திரும்பி வந்தால் என்னைவிட சந்தோஷப்படும் நபர் வேறு யாருமில்லை என்று கூறினார் அபி சரவணன்.


    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் இளையராஜா இசையமைத்து வருகிறார்.
    இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் இளையராஜா இசையமைத்து வருகிறார்.  இந்த நிலையில் நேற்று இரவு உடல்நலக்குறைவால் இளையராஜா மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இதற்கிடையே தான் நலமுடன் இருப்பதாக இளையராஜாவே டுவிட்டரில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். 33 விநாடிகள் ஓடும் வீடியோவில் காரில் பயணிக்கும் இளையராஜா, தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

    இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அதன் டிரைலர் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது.
    அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இதையடுத்து இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். 

    வலிமை

    வெளியான சில மணி நேரங்களில் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை செய்தது. தற்போது வரைக்கும் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
    தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக விளங்கும் விஜய் சேதுபதியின் தெருக்கூத்து கலைஞன் காலண்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி பிறகு தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத கதாநாயகனாக மக்கள் மனதில் பதிந்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு நிகரான இடத்தில் தன்னை நிலைநிறுத்தி வைத்திருக்கிறார். நாடகங்களை பெரிதாக பின்பற்றும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் சில படங்களில் நாடக கலைஞராகவும் கதாபாத்திரங்களில் தோன்றி அசத்தியிருக்கிறார்.

    விஜய் சேதுபதி

    தற்போது விஜய் சேதுபதி தெருக்கூத்து கலைஞன் என்ற பெயரில் 2022-ம் ஆண்டிற்கான காலண்டரை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டிருக்கிறார். இந்த தெருக்கூத்து கலைஞன் காலண்டர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
    அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வலிமை. போனி கபூர் தயாரித்து இருக்கும் இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இதன் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

    தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி சக்திவேல் வீட்டில் சோகமான விஷயம் நடந்துள்ளது.
    இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாலாஜி சக்திவேல். ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பாலாஜி சக்திவேலின் காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை படைத்தது. அதன்பின் கல்லூரி, வழக்கு எண் 18/9 என அடுத்தடுத்து சிறந்த படங்களை இயக்கிய இயக்குநர் பாலாஜி சக்திவேல் அசுரன், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் நடிகராக நடித்துள்ளார். 

    சக்தி வடிவேல்
    பாலாஜி சக்திவேல் தந்தை

    தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவரான பாலாஜி சக்திவேலின் தந்தை சக்தி வடிவேல் இன்று உடல் நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84. சென்னை ராமாபுரத்தில் உள்ள இயக்குனர் பாலாஜி சக்திவேலின் இல்லத்தில் சக்தி வடிவேலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
    சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்த திரைப்படத்தை யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் சென்று நடிகை சாய் பல்லவி படம் பார்த்து இருக்கிறார்.
    பிரேமம் படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்தவர் சாய் பல்லவி. மாரி 2, என் ஜி கே, பாவ கதைகள் போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஷியாம் சிங்கா ராய் படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.

    சாய் பல்லவி

    இந்நிலையில் நடிகை சாய் பல்லவி அவர் நடித்த ஷியாம் சிங்கா ராய் படத்தை ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீராமுலு திரையரங்கில் ரசிகர்களுடன் மாறு வேஷத்தில் படத்தை கண்டு ரசித்துள்ளார். யாரும் அடையாளம் காணமுடியாதபடி மாறுவேஷத்தில் சாய் பல்லவி திரையரங்கில் படம் பார்த்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.
    பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட குருதி ஆட்டம் திரைப்படத்தை தடை விதிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    8 தோட்டாக்கள் படத்தை இயக்கி பெருமளவில் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் ஸ்ரீ கணேஷ். அதன் பின்னர் நடிகர் அதர்வாவை வைத்து குருதி ஆட்டம் என்ற படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். இந்த திரைப்படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்தது. 

    குருதி ஆட்டம்

    அதர்வா, பிரியா பவானி ஷங்கர், ராதா ரவி, போன்ற பெரிய நடிகர் பட்டாளம் நடித்த இந்த திரைப்படம் அனைவரின் மத்தியிலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த திரைப்படத்தை தடைவிதிக்க கோரி ப்ளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
    தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
    தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா. 

    ஸ்ரேயா
    ஸ்ரேயா

    அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்ரேயா வெளியிட்டு வருவார். இந்நிலையில், கணவருடன் லிப்-கிஸ் அடித்தபடி இருக்கும் புகைப்படத்தை ஸ்ரேயா பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறார்கள்.
    ×