என் மலர்
சினிமா செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை அவரது கணவர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.
நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த காஜல் அகர்வால், அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை கடந்தாண்டு காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர உமா என்கிற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமடைந்துள்ள தகவலை அவருடைய கணவர் கௌதம் கிச்சலு சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
நீண்ட இடைவேளிக்கு பிறகு சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் வடிவேலு. இப்படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று இந்தியா திரும்பிய அவருக்கு கடந்த 24-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அனுமதிக்கப்படும் போது அவருக்கு தீவிர அறிகுறிகள் ஏதும் இல்லை. இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு முழுமையாக குணமடைந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
பிரபல நடிகை தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட தகவலை அவருடைய சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் முர்னல் தாகூர். மராட்டியத்தை சேர்ந்த இவர் இந்தி, மராத்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்த டூபன் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகை முர்னலுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவலை அவருடைய சமூக வலைதளபக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லேசான அறிகுறியுடன் தொற்று உறுதியாகியுள்ளது. நான் நலமுடன் உள்ளேன். மேலும், நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். டாக்டர்கள் தெரிவித்த அறிவுறுத்தல்களை நான் கடைபிடித்து வருகின்றேன். என்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் விரைவில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அனைவரும் கவனமாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் புத்தாண்டையொட்டி ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தியை வீடியோவில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் ‘டாக்டர்’ படம் வெளியானது. இதையடுத்து அவரது நடிப்பில் ‘டான்’, ‘அயலான்’ படங்கள் வெளிவர தயாராகி வருகிறது.
புத்தாண்டையொட்டி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், SK20 படத்தை பிரபல இளம் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஜதி ரத்னலு’ என்ற படத்தை கொடுத்த இயக்குனர் அனுதீப்வுடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள இப்டத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் , சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் புதிய திரைப்படமான SK20 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.
#HappyNewYear2022 ❤️🤗👍 pic.twitter.com/47ChgZssG0
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 31, 2021
புத்தாண்டையொட்டி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், SK20 படத்தை பிரபல இளம் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘ஜதி ரத்னலு’ என்ற படத்தை கொடுத்த இயக்குனர் அனுதீப்வுடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள இப்டத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
70-களின் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் ராதே ஷ்யாம் படம் தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானா ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா மற்றும் பலரும் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இப்படம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்தின் 60-வது படமான ‘வலிமை’ ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா மற்றும் பலரும் நடித்து வருகிறார்கள்.
70-களின் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

ராதே ஷ்யாம்
இந்த நிலையில், இப்படம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்தின் 60-வது படமான ‘வலிமை’ ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டையொட்டி இசைஞானி இளையராஜா இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் இளையராஜா இசையமைத்து வருகிறார். இவருக்கு நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி இசைஞானி இளையராஜா இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, தான் நலமுடன் இருப்பதாக இளையராஜாவே டுவிட்டரில் வீடியோ மூலம் தெரிவித்திருந்தார். 33 விநாடிகள் ஓடும் வீடியோவில் காரில் பயணிக்கும் இளையராஜா, ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததுடன், இளமை இதோஇதோ, இனிமை இதோஇதோ என்ற பாடலை பாடி தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இளையராஜா
இந்நிலையில் புத்தாண்டையொட்டி இசைஞானி இளையராஜா இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஒமிக்ரான் பத்தி ரொம்ப கவல படாதீங்க என்றும் அது இன்னும் பத்து டிசைன்ல மாறி மாறி வரும் என்றும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் 2022 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி டுவிட்டரில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், டியர் ஃப்ரண்ட்ஸ் விஸ் யூ ஆல் எ வெரி ஹாப்பி நியூ இயர். ஒமிக்ரான் பத்தி ரொம்ப கவல படாதீங்க. அது இன்னும் பத்து டிசைன்ல மாறி மாறி வரும். உடம்புலயும் மனசுலயும் தெம்ப வளத்துக்கங்க. நமக்கு ஒன்னும் ஆகாது என கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி டுவிட்டரில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், டியர் ஃப்ரண்ட்ஸ் விஸ் யூ ஆல் எ வெரி ஹாப்பி நியூ இயர். ஒமிக்ரான் பத்தி ரொம்ப கவல படாதீங்க. அது இன்னும் பத்து டிசைன்ல மாறி மாறி வரும். உடம்புலயும் மனசுலயும் தெம்ப வளத்துக்கங்க. நமக்கு ஒன்னும் ஆகாது என கூறியுள்ளார்.
கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ், பவித்ரா லட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் நாய் சேகர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பிகில் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் நாய் சேகர். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்கிறார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்க, பிரவீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜீஷ் அசோக் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது புத்தாண்டை முன்னிட்டு நாய் சேகர் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜோடியாக புத்தாண்டை வரவேற்று இருக்கிறார்கள்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போடா போடி. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு ‘நானும் ரவுடி தான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இதில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படமும் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது.
நானும் ரவுடி தான் படத்தின் மூலம் ஒன்றாக இணைந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் நிஜ வாழ்க்கையிலும் இணைய முடிவு செய்தனர். இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். மேலும் இருவரும் அடிக்கடி ஒன்றாக இணைந்து வெளிநாடுகளுக்கு சென்று நேரத்தை செலவிடுவார்கள்.
அந்த வகையில் தற்போது புத்தாண்டை வரவேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகி இருக்கும் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.
இப்படம் ஜனவரி மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால், ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஏப்ரம் மாதம் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ போன்ற படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீஜி இயக்கும் புதிய படத்தில் ரீ என்ட்ரியாக மோகன் நடிக்க உள்ளார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977-ம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் கதாநாயகனாக உயர்ந்தார். 1980- 90-களில் தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு இடம் இருந்தது. அதன்பின் நீண்ட காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.

மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, 'ஹரா' படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பரவலாகப் பேசப்படும் என கூறப்படுகிறது.
‘ஹரா’ திரைப்படத்தை கோவை எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் குறித்த மேலும் பல சுவாரசிய தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும்.
‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ போன்ற படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீஜி இயக்கும் புதிய படத்தில் ரீ என்ட்ரியாக மோகன் நடிக்க உள்ளார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் வெள்ளி விழா நாயகன் என்று அனைவராலும் பாராட்டு பெற்ற நடிகர் மோகன் நடிக்க உள்ள படத்தின் பெயர் ‘ஹரா’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகன்
மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, 'ஹரா' படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பரவலாகப் பேசப்படும் என கூறப்படுகிறது.
‘ஹரா’ திரைப்படத்தை கோவை எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் குறித்த மேலும் பல சுவாரசிய தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும்.
கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்ததை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக, நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்பின்னர் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
மேலும், பண்டிகை காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்ததை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.






