என் மலர்

  சினிமா செய்திகள்

  தியேட்டர்
  X
  தியேட்டர்

  தியேட்டர்களில் 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்ததை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
  சென்னை:

  தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக, நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில்,  ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

  அதன்பின்னர் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். 

  மேலும், பண்டிகை காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்ததை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

  குறிப்பாக, பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
  Next Story
  ×