என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்

X
கணவருடன் காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் கர்ப்பம்
By
மாலை மலர்2 Jan 2022 5:38 AM GMT (Updated: 2 Jan 2022 5:38 AM GMT)

நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை அவரது கணவர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.
நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த காஜல் அகர்வால், அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை கடந்தாண்டு காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர உமா என்கிற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமடைந்துள்ள தகவலை அவருடைய கணவர் கௌதம் கிச்சலு சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
Next Story
×