என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங்.
    • காரின் இன்சூரன்ஸ் காலாவதியான காரை ஓட்டும் ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணைய தளம் மூலம் ஒருவர் போலீசுக்கு புகார் தெரிவித்து உள்ளார்.

    பிரபல இந்தி நடிகரான ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று நெருக்கமானவர்கள் மறுத்தனர். இதற்கிடையே ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் வெளியாகியும் எதிர்ப்புக்கு உள்ளானார்.

     

    ரன்வீர் சிங்

    ரன்வீர் சிங்

    இந்நிலையில் இன்சூரன்ஸ் காலாவதியான காரை ஓட்டியதாக ரன்வீர் சிங் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட தனது ஆடம்பர ஆஸ்டன் மார்ட்டின் சொகுசு காரை ஓட்டி வருகிறார். காரின் விலை ரூ.3 கோடியே 90 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த காரின் இன்சூரன்ஸ் காலாவதியாகி விட்டதாகவும் அதை புதுப்பிக்காமல் காரை ஓட்டும் ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணைய தளம் மூலம் ஒருவர் போலீசுக்கு புகார் தெரிவித்து உள்ளார்.

     

    ரன்வீர் சிங்

    ரன்வீர் சிங்

    அதற்கு பதில் அளித்துள்ள மும்பை போலீசார் ''இதுகுறித்து போக்குவரத்து பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளோம்" என்று கூறியுள்ளனர். புகார் கூறியவரை ரன்வீர் சிங் ரசிகர்கள் வலைத்தளத்தில் கடுமையாக கண்டித்து வருகிறார்கள்.

    • மோகன்லால் தற்போது வைசாக் இயக்கத்தில் மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
    • மான்ஸ்டர் படத்தை வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மோகன்லால் தற்போது மான்ஸ்டர் என்ற புதிய மலையாள படத்தில் நடித்துள்ளார். இதில் லட்சுமி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இயக்குனர் வைசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 21-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 3 நாட்களுக்கு இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.

     

    மான்ஸ்டர்

    மான்ஸ்டர்

    இந்நிலையில் மான்ஸ்டர் படத்தை 'கல்ப்' நாடுகள் எனப்படும் வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மான்ஸ்டர் படத்தை அந்த நாடுகளின் தணிக்கை குழுவுக்கு படக்குழுவினர் அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், படத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்று உள்ளதால் திரையிட அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

     

    மான்ஸ்டர்

    மான்ஸ்டர்

    வளைகுடா நாடுகளில் படம் வெளியாகாவிட்டால் வசூல் பெருமளவு பாதிக்கும் என்பதால் சர்ச்சை காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் வளைகுடா நாடுகளின் தணிக்கை குழுவுக்கு அனுப்ப படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் உடனடியாக இந்த பணிகளை முடிப்பது சிரமம் என்பதால் மான்ஸ்டர் இந்தியாவில் வெளியாகும் அதேநாளில் வளைகுடா நாடுகளில் வெளியாகாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.

    • வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
    • இப்படத்தின் காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், 'வாரிசு' திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருவதாக கூறப்படுகிறது.


    வாரிசு

    அதாவது, இப்படத்தில் இடம்பெறும் ரஞ்சிதமே.. ரஞ்சிதமே என்ற பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளாராம். இந்த பாடலை தான் தீபாவளியன்று படக்குழு வெளியிட திட்டமிருந்ததாகவும் தற்போது இந்த பாடல் மற்றும் இதன் காட்சிகள் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பும் 'வாரிசு' படத்தின் பல காட்சிகள் இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ஜோதிகா.
    • இவர் தற்போது மம்முட்டியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை ஜோதிகா. இவர் திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் மீண்டும் 36 வயதினிலே படம் மூலம் நடிக்க தொடர்கினார். தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.


    ஜோதிகா

    தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கவுள்ளார்.


    காதல் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

    இந்நிலையில் ஜோதிகாவின் பிறந்த நாளான இன்று படக்குழு டைட்டில் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு படக்குழு 'காதல்' என்று பெயர் வைத்துள்ளது. மேலும் இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.  


    • நடிகர் நானி தற்போது நடித்துள்ள படம் தசரா.
    • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தசரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.


    தசரா

    மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது.


    தசரா போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தசரா திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் 'வெண்ணிலா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தசரா திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கத்தில் பிரியாமணி நடிக்கும் படம் 'டி.ஆர்.56’.
    • இப்படம் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் நடிகை பிரியாமணி. அதன்பின் நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார். பின்னர் தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் வர அங்கு அதிக கவனம் செலுத்தினார். தற்போது இயக்குனர் ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கத்தில் 'டி.ஆர்.56' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.


    டி.ஆர்.56

    இதில், பிரவீன், தீபக் ராஜ் ஷெட்டி, ரமேஷ் பட், யத்திராஜ், வீணா பொண்னப்பா, மஞ்சுநாத் ஹெக்டே, சுவாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு 'சார்லி 777' படத்திற்கு இசையமைத்த நோபின் பால் இசையமைக்கிறார். இப்படம் குறித்து இயக்குனர் ராஜேஷ் ஆனந்த் லீலா கூறியதாவது, "இது அறிவியல் சார்ந்த கிரைம் திரில்லர். தற்போது சமூகத்தில் நிலவிவரும் உண்மைச் சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறோம்.


    டி.ஆர்.56

    பிரியாமணி சி.பி.ஐ. அதிகாரியாக நடித்துள்ளார். இந்த கதையை சொல்லும்போதே பிரியாமணி மிகவும் பிரம்மிப்பானார். நேர்த்தியான சி.பி.சி. அதிகாரியாக நடிக்க தன்னை முற்றிலும் தயார்படுத்திக் கொண்டார். படம் தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுத்ததால் ஓரே காட்சிகளை மாற்றி மாற்றி எடுப்பதில் சவாலாக இருந்தது. விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களை அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும். பிரியாமணி தனது திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது" என்று கூறினார்.


    டி.ஆர்.56

    'டி.ஆர்.56' திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 9-ஆம் தேதி ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 'லவ் டுடே' படத்தின் மூன்றாவது பாடல் சமீபத்தில் வெளியானது.
    • இது குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    லவ் டுடே

    இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 'லவ் டுடே' படத்தின் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலான "பச்சை இலை" சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. எனினும் இப்படலின் வரிகள் போதைப் பொருட்களை ஊக்குவிப்பது போல் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.


    யுவன் ஷங்கர் ராஜா

    அதில், "பச்சை இலை பாடலை நீங்கள் அனைவரும் என்ஜாய் பண்ணிருப்பீங்கனு நம்புறேன். இது ஜாலியான தருணத்திற்காக உருவாக்கப்பட்ட ஃபன்னாண பாடல். நிஜ வாழ்க்கையில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதில் இருந்து விலகி இருங்கள். இது எனது வேண்டுகோள்" என்று குறிப்பிட்டுள்ளார். 


    • இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கிரிக்கெட் வீரர் சச்சினை சந்தித்துள்ளார்.
    • இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இவர் இசையில் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்குமேல் வசூல் சாதனை செய்து வருகிறது.


    ஏ.ஆர்.ரகுமான்

    இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தமிழில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார்.

    இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "நண்பர்களின் இலக்கு" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பகிர்ந்துள்ள சச்சின், "இசைப்புயலுடன் ஒரு அருமையான நாள்" என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களின் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    • கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி.
    • விஜய் சேதுபதி நடிப்பில் இவர் இயக்கிய இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாக தயாராகி வருவதாக தகவல் வெளியானது.

    இடம் பொருள் ஏவல்

    இடம் பொருள் ஏவல்

     

    இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விஷ்ணு விஷால் மற்றும் நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தில் இடம்பெற்றுள்ள வைய்யம்பட்டி வல்லக்குட்டி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் சீனு ராமசாமி பதிவிட்டு, பறவைகள் எச்சந்தான் காடு எங்க பண்பாட்டில் காடேதான் வீடு என்று குறிப்பிட்டிருந்தார்.

     

    இடம் பொருள் ஏவல்

    இடம் பொருள் ஏவல்

    இந்நிலையில் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இடம் பொருள் ஏவல் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் மிக விரைவில் வெளியிட தயாராக உள்ளோம் என்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

     

    இடம் பொருள் ஏவல் அறிவிப்பு

    இடம் பொருள் ஏவல் அறிவிப்பு

    சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் பல விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.

    • பல ஆவணப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் லீனா மணிமேகலை.
    • இவர் இயக்கத்தில் நடிகை பார்வதி நடிக்கவுள்ளார்.

    தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய ஆவணப்படங்களுக்கு பல விருதுகள் கிடைத்தன. இதைத்தொடர்ந்து செங்கடல், மாடத்தி போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். அண்மையில் இவர் இயக்கிய 'காளி' என்ற ஆவணப் படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


    லீனா மணிமேகலை

    இந்நிலையில், லீனா மணிமேகலை அடுத்து 'தன்யா' என்ற படத்தை இயக்கவுள்ளார். மலையாள நடிகை பார்வதி நடிக்கும் இப்படத்தை அபூர்வ பக்‌ஷி, மோனிஷா தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படம் சைபர் கிரைம் த்ரில்லர் கதையை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளது குறிப்பிடத்தகக்து.

    • ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சமீபத்தில் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
    • தற்போது மக்களின் பணிக்காக மன்றத்தை மீண்டும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்து விட்ட பிறகு தமிழ்நாடு முழுவதும் இருந்த ரஜினி ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ற அரசியல் கட்சிகளில் இணைந்து விட்டனர். ரஜினியின் தீவிர ஆதரவாளர்கள் மட்டும் தொடர்ந்து மன்றத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.

    ரஜினி தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதால் அவரது படங்கள் வெளியாகும் போது மட்டும் ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டும், நற்பணிகளை செய்தும் வருகிறார்கள். ஆனால் இந்த செயல்பாடுகள் தலைமை மன்றத்தின் ஆதரவோடு இல்லாமல் அவரவர்கள் அந்தப்பகுதிகளில் இருக்கும் ரசிகர்களோடு சேர்ந்து செய்து வருகிறார்கள்.

     

    ரஜினி அரசியலுக்கு முழுக்கு முடிவை அறிவித்தபோது ரசிகர்களின் நற்பணி மன்றம் தொடர்ந்து செயல்படும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதன் பிறகு மிகப்பெரிய நற்பணிகள் ரசிகர்களால் செயல்படுத்தப்படவில்லை. சிலர் பிற கட்சிகளில் இணைந்து பெரிய பொறுப்புகளைப் பெற்றிருக்கிறார்கள். இதன்படி கிருஷ்ணகிரி ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்டச் செயலாளராக இருந்த மதியழகன் மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

    இவரது செயல் பாடுகளில் நம்பிக்கை வைத்த தி.மு.க. தலைமை பர்கூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. இதை பயன்படுத்தி எம்.எல்.ஏ.-வாக மதியழகன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இப்போது மாவட்டச் செயலாளர் பொறுப்பும் கூடுதலாக அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

     

    தற்போது ரஜினியின் தீவிர ஆதரவாளர்கள் மட்டுமே மன்றத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள். சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவி வருகிறது. ரஜினி மன்றத்தின் தலைமையின் அனுமதியோடு நற்பணிகளை செய்ய வேண்டும் அதற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இதனால் ரசிகர்களின் இந்த மக்கள் பணிக்கு ரஜினி அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

    • மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் படம் 'பகாசூரன்'.
    • இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

    பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.


    பகாசூரன்

    இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடல் 'காத்தமா' வெளியாகியுள்ளது.


    பகாசூரன்

    இப்பாடல் வெளியாகுவதற்கு முன்பு இயக்குனர் மோகன் ஜி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், படத்திற்கு தேவை உள்ளதால் இந்த மாதிரியான துள்ளல் பாடல் இடம்பெற்றுள்ளதாகவும் பகாசூரன் திரைப்படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



    ×