என் மலர்
சினிமா செய்திகள்

சச்சின் டெண்டுல்கர் - ஏ.ஆர்.ரகுமான்
இசைப்புயலுடன் ஒரு சந்திப்பு.. வைரலாகும் சச்சின் பதிவு..
- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கிரிக்கெட் வீரர் சச்சினை சந்தித்துள்ளார்.
- இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இவர் இசையில் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்குமேல் வசூல் சாதனை செய்து வருகிறது.
ஏ.ஆர்.ரகுமான்
இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தமிழில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "நண்பர்களின் இலக்கு" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பகிர்ந்துள்ள சச்சின், "இசைப்புயலுடன் ஒரு அருமையான நாள்" என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களின் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
A Sunday well spent with இசைப்புயல்! ♥️🎶 https://t.co/nDB5m3Bh5R
— Sachin Tendulkar (@sachin_rt) October 17, 2022






