என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் படம் 'பகாசூரன்'.
    • இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

    பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.


    பகாசூரன்

    இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடல் 'காத்தமா' வெளியாகியுள்ளது.


    பகாசூரன்

    இப்பாடல் வெளியாகுவதற்கு முன்பு இயக்குனர் மோகன் ஜி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், படத்திற்கு தேவை உள்ளதால் இந்த மாதிரியான துள்ளல் பாடல் இடம்பெற்றுள்ளதாகவும் பகாசூரன் திரைப்படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



    • இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள படம் யசோதா.
    • இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    யசோதா

    திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


    யசோதா போஸ்டர்

    அதன்படி, 'யசோதா' திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அப்துல் மஜீத்.
    • தற்போது இவர் விமல் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

    2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான "தமிழன்" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அப்துல் மஜீத். அதன்பின்னர் துணிச்சல், டார்ச் லைட் போன்ற பல படங்களை இயக்கினார். தற்போது விமல், யோகி பாபு நடிக்கும் புதிய படத்தை கான்ஃபிடன்ட் பிலிம் கேப் சார்பில் தயாரித்து இயக்கி வருகிறார். இதில் விமலுக்கு ஜோடியாக சாம்மிகா, ஐஸ்வர்யா தத்தா நடிக்கின்றனர். மேலும் மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், சாம்ஸ், நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

     

    அப்துல் மஜீத் - விஜய்

    அப்துல் மஜீத் - விஜய்

    இப்படம் தன்னுடைய சுயநலத்திற்காக வியாபாரத்திலும், தொழில் ரீதியாகவும் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அந்த பாதிப்பில் இருந்து கதாநாயகன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி, சென்டிமென்ட, ஆக்‌ஷன் ரொமான்ஸ் கலந்து இப்படம் உருவாகிறது.

     

    விமல்

    விமல்

    இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு சென்னையிலும் அதன் சுற்றுபுறங்களிலும் நடந்து முடிந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சி வேலூர், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள அரண்மனை போன்ற இடத்தில் நடக்க உள்ளது. இந்த படத்தை பொங்கல் திருநாளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘சியான் 61’.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்றது.

     

    சியான் ௬௧ பூஜை

    சியான் ௬௧ பூஜை

     

    இதைத்தொடர்ந்து, பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. 'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா, நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் இதன் டெஸ்ட் ஷூட் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

     

    மாளவிகா மோகனன்

    மாளவிகா மோகனன்

    இந்நிலையில் சியான் 61 படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழில் மாஸ்டர், பேட்ட, மாறன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்த மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • நயன்தாரா 6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது.
    • படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நயன்தாரா அடுத்த மாதம் தான் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன், திருமணம் முடிந்த 4 மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். அதை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையில் நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக தெரியவந்தது. இது நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது.

     

    வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் நயன்தாராவுக்கு குழந்தை பெறும் தகுதி இல்லை என்பது மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். வாடகைத்தாய் தேர்விலும் ஏகப்பட்ட நடைமுறைகள் உள்ளன. இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதும் தெரியவில்லை. இந்த பிரச்சினை சர்ச்சையானதும் விசாரணை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

     

    இதையடுத்து மருத்துவ பணிகள் துறை 3 பேரை கொண்ட குழுவை நியமித்தது. இந்த குழுவினர் விசாரணையை தொடங்கிய நிலையில் நயன்தாரா 6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெறுவது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டதாகவும், சட்டம் அதன் பிறகுதான் அமுலுக்கு வந்ததால் நயன்தாராவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்ற தகவலும் பரவி வருகிறது.

     

    இதுதொடர்பாக மருத்துவ பணிகள் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கடந்த டிசம்பரிலேயே ஒப்பந்தம் போட்டிருந்தாலும் மருத்துவமனை நிர்வாகம் அப்போதே முறைப்படி அரசுக்கு தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். மேலும் வாடகைத்தாய் விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்பது பற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

     

    இதற்கிடையில் நயன்தாரா இந்த விவகாரத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவர் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் சென்று விட்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. அங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நயன்தாரா அடுத்த மாதம் தான் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

     

    இந்த பிரச்சனை மிகப்பெரியதாக உருவெடுத்த்தால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மருத்துவமனைகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிவாளம் போட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். நயன்தாரா படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பியதும் அவரிடம் நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளார்கள். அவர் தரப்பில் இருக்கும் ஆதாரங்களையும் கேட்க முடிவு செய்துள்ளார்கள்.

    • இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே’.
    • இப்படத்தில் இடம்பெற்ற புதிய பாடலை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

     

    லவ் டுடே 

    லவ் டுடே 

    பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 'லவ் டுடே' படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

     

    லவ் டுடே 

    லவ் டுடே 

    இந்நிலையில் லவ் டுடே படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலான "பச்சை இலை" பாடலை இசையமைப்பாளர் யுவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சமீபத்தில் அஜித் சுற்றுபயணம் மேற்கொண்டு கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
    • தற்போது அஜித்குமார் 62 நாடுகளில் தொடர்ந்து 18 மாதங்கள் மோட்டார்சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அஜித்குமார் சினிமாவில் நடிப்பதோடு ஓய்வு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார். விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பில் பங்கேற்று முடித்ததும் இமயமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளத்தில் வெளியானது.

     

    சுற்றுபயணத்தில் அஜித்

    சுற்றுபயணத்தில் அஜித்

    அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க அஜித் தயாராகி உள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு மோட்டார் சைக்கிளில் உலகை சுற்ற அஜித்குமார் திட்டமிட்டு உள்ளார். அதாவது 62 நாடுகளில் தொடர்ந்து 18 மாதங்கள் மோட்டார் சைக்கிளில் அவர் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றரை வருடம் மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணம் செய்து முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

    அஜித்தின் துணிவு படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • தற்போது பாலிவுட் சினிமாவில் சத்ராம் ரமானி இயக்கும் ‘டபுள் எக்ஸ்.எல்.' என்ற படத்தில் சிம்பு பாடகராக அறிமுகமாகியுள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படம் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. சிம்பு தற்போது கிருஷ்ணா இயக்கி வரும் 'பத்து தல' படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பத்து தல படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

    சிம்பு

    சிம்பு

     

    இதற்கிடையே பாலிவுட் சினிமாவில் சிம்பு பாடகராக அறிமுகமாகி உள்ளார். சத்ராம் ரமானி இயக்கும் 'டபுள் எக்ஸ்.எல்.' என்ற படத்தில் 'தாலி... தாலி...' என்ற பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த படத்தில் ஹீமா குரோஷி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மகத் உள்பட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இதன் மூலம் பாலிவுட் சினிமாவில் பாடகராக சிம்பு அறிமுகமாகி இருக்கிறார். ரசிகர்களும், திரை உலகினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    மேலும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க வைக்க சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • தில், காசி, ஜெமினி, சாமுராய், தூள், சாமி, பிதாமகன், அந்நியன், தெய்வதிருமகள், ஐ என பல வித்யாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர் விக்ரம்.
    • இவர் திரைத்துறைக்கு அறிமுகமாகி கிட்டத்தட்ட 32 வருடங்கள் ஆகியுள்ளது.

    1990-ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் விக்ரம். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்த விக்ரம், இரட்டை இயக்குனர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் வெளியான உல்லாசம் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் தடம் பதித்தார். இதனை தொடர்ந்து பாலா இயக்கிய சேது படத்தில் இவரின் நடிப்பு மூலம் தமிழ் திரையுலகினரை திரும்பி பார்க்க செய்தார். தில், காசி, ஜெமினி, சாமுராய், தூள், சாமி, பிதாமகன், அந்நியன், தெய்வதிருமகள், ஐ என பல வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து இவரின் நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து தனக்கான இடத்தை பிடித்தார்.

     

    பொன்னியின் செல்வன் - விக்ரம்

    பொன்னியின் செல்வன் - விக்ரம்

    விக்ரம் நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடகர் என பண்முகத்தன்மை கொண்டவர். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். இப்படத்தின் புரோமஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட விக்ரம் பேசியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அதில், நான் படங்களில் நடிப்பதற்கு முன்பு சோழா என்ற ஒரு விளம்பரப் படத்தில் நடித்திருந்தேன். இப்பொழுது சோழ நாட்டின் இளவரசனாக நடித்திருக்கிறேன் என்று நெகிழ்ச்சியோடு பகிர்ந்திருந்தார். விக்ரம் திரைத்துறைக்கு அறிமுகமாகி 32 வருடங்களின் உழைப்பை சமூக வலைத்தளத்தில் பலரும் வெகுவாக பாராட்டினர்.

    விக்ரம்

    விக்ரம்

     

    இந்நிலையில் விக்ரம் திரைத்துறைக்கு அறிமுகமாகி 32 வருடங்களை ரசிகர் ஒருவர் ஒரு சிறிய வீடியோ தொகுப்பாக உருவாக்கி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பகிர்ந்த விக்ரம், இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெரும் முயற்சி மட்டுமே. இந்த 32 வருடத்துக்கு நன்றி. இந்த வீடியோவை தொகுத்த நபருக்கு நன்றி என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    • 500 கிலோ வெள்ளி பொருட்களையும் பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டதாக புகார்.
    • 1000 பவுன் நகையை அபகரித்துக் கொண்டதாகவும் அவர்கள் குற்றச்சாட்டியிருந்தனர்.

    மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் என இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர். கடந்த 2001-ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    அதில், இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளது. எனவே, பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும். தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துக்களை ராம்குமார், பிரபு விற்றுள்ளனர். அந்த விற்பனை பத்திரங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும். ஆயிரம் சவரன் தங்க நகைகளையும், 500 கிலோ வெள்ளி பொருட்களையும் பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டனர்.

     

    பிரபு - ராம்குமார்

    பிரபு - ராம்குமார்

    சாந்தி தியேட்டரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிரபுவும், ராம்குமாரும் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டனர். நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது. பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று தங்களை ராம்குமாரும், பிரபுவும் ஏமாற்றி விட்டனர். இவ்வாறு அதில் கூறியிருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் விசாரணைக்கு வந்த போது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

    இந்நிலையில் சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்கள் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்டது என்று நடிகர் பிரபு தரப்பும். சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010ம் ஆண்டிலேயே கைமாறி விட்டது என்று தனியார் கட்டுமான நிறுவனமும் விளக்கம் அளிக்கப்பட்டது. இரு தரப்பு விளக்கத்தை ஏற்று சிவாஜி மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 

    • கார்த்தியின் 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
    • இப்படத்தில் ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 21-ம் தேதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

     

    மாலைமலர் பேட்டி

    மாலைமலர் பேட்டி

    இந்நிலையில் சர்தார் படம் குறித்து ரெஜிஷா விஜயன், லைலா மற்றும் மாஸ்டர் ரித்விக் ஆகியோர் மாலைமலர் நேயர்களுக்காக பிரத்யேக பேட்டி அளித்தனர். இதில் ரெஜிஷா விஜயன் பேசுகையில், "கர்ணன் படத்தின் ரிலீசுக்கு முன் வெளியான தட்டான் தட்டான் பாடலை கேட்ட பிறகு பி.எஸ்.மித்ரன் சார் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு சர்தார் படத்தின் கதையை சொன்னார். அதை கேட்ட பிறகு அந்த கதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இந்த கதை இப்போது வரைக்கும் நாம் விவாதிக்காத ஒரு கதை. அதே நேரம் ரொம்ப ஜாலியா, கமர்சியலா தியேட்டர்ல பார்க்குற மாதிரி படத்தை எடுத்து வைத்திருக்கிறோம். எனக்கு இதில் ரொம்ப முக்கியமான ஒரு கதாப்பாத்திரம். படத்தை அனைவரும் பாருங்கள்" என்றார்.

    கார்த்தி மற்றும் சூர்யாவுடன் நடித்தது குறித்தும் அந்த அனுபவம் குறித்தும் ரெஜிஷா விஜயன்-லைலாவிடம் கேட்டபோது, இருவரும் பொதுவான கருத்தையே கூறினார்கள். கார்த்தியும் சூர்யாவும் மிகவும் அன்பானவர்கள், மென்மையான மனிதர்கள், கண்ணியமானவர்கள் என்றனர்.



    • கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி.
    • விஜய் சேதுபதி நடிப்பில் இவர் இயக்கிய இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது திரைக்குவர உள்ளதாக சீனு ராமசாமி நேற்று அறிவித்தார்.

     

    இடம் பொருள் ஏவல்

    இடம் பொருள் ஏவல்

    இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விஷ்ணு விஷால் மற்றும் நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள வைய்யம்பட்டி வல்லக்குட்டி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார். அதில், பறவைகள் எச்சந்தான் காடு எங்க பண்பாட்டில் காடேதான் வீடு என்று குறிப்பிட்டுள்ளார்.

    இடம் பொருள் ஏவல்

    இடம் பொருள் ஏவல்

     

    சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் பல விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.

    ×