என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • கார்த்தியின் 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
    • இப்படத்தில் ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 21-ம் தேதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

     

    மாலைமலர் பேட்டி

    மாலைமலர் பேட்டி

    இந்நிலையில் சர்தார் படம் குறித்து ரெஜிஷா விஜயன், லைலா மற்றும் மாஸ்டர் ரித்விக் ஆகியோர் மாலைமலர் நேயர்களுக்காக பிரத்யேக பேட்டி அளித்தனர். இதில் ரெஜிஷா விஜயன் பேசுகையில், "கர்ணன் படத்தின் ரிலீசுக்கு முன் வெளியான தட்டான் தட்டான் பாடலை கேட்ட பிறகு பி.எஸ்.மித்ரன் சார் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு சர்தார் படத்தின் கதையை சொன்னார். அதை கேட்ட பிறகு அந்த கதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இந்த கதை இப்போது வரைக்கும் நாம் விவாதிக்காத ஒரு கதை. அதே நேரம் ரொம்ப ஜாலியா, கமர்சியலா தியேட்டர்ல பார்க்குற மாதிரி படத்தை எடுத்து வைத்திருக்கிறோம். எனக்கு இதில் ரொம்ப முக்கியமான ஒரு கதாப்பாத்திரம். படத்தை அனைவரும் பாருங்கள்" என்றார்.

    கார்த்தி மற்றும் சூர்யாவுடன் நடித்தது குறித்தும் அந்த அனுபவம் குறித்தும் ரெஜிஷா விஜயன்-லைலாவிடம் கேட்டபோது, இருவரும் பொதுவான கருத்தையே கூறினார்கள். கார்த்தியும் சூர்யாவும் மிகவும் அன்பானவர்கள், மென்மையான மனிதர்கள், கண்ணியமானவர்கள் என்றனர்.



    • கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி.
    • விஜய் சேதுபதி நடிப்பில் இவர் இயக்கிய இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது திரைக்குவர உள்ளதாக சீனு ராமசாமி நேற்று அறிவித்தார்.

     

    இடம் பொருள் ஏவல்

    இடம் பொருள் ஏவல்

    இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விஷ்ணு விஷால் மற்றும் நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள வைய்யம்பட்டி வல்லக்குட்டி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார். அதில், பறவைகள் எச்சந்தான் காடு எங்க பண்பாட்டில் காடேதான் வீடு என்று குறிப்பிட்டுள்ளார்.

    இடம் பொருள் ஏவல்

    இடம் பொருள் ஏவல்

     

    சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் பல விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.

    • அலைகள் ஓய்வதில்லை, நினைவெல்லாம் நித்யா, நல்ல தம்பி, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கார்த்திக்.
    • இவர் தற்போது நடித்து வரும் தீ இவன் படத்தில் சன்னி லியோன் இணைந்துள்ளார்.

    பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் கார்த்திக். அதன்பின்னர் நினைவெல்லாம் நித்யா, நல்ல தம்பி, மௌன ராகம், அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். இவர் தற்போது மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "தீ இவன்" படத்தில் நடித்து வருகிறார்.

    இதில் சுகன்யா, ராதா ரவி, சுமன்.ஜே, ஸ்ரீதர், ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம் புலி, ஜான் விஜய், சரவண சக்தி, இளவரசு, சுப்புராஜ், விஜய் கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கி தயாரித்த டி.எம்.ஜெயமுருகன் கதை, திரைக்கதை, வசனம், இசை மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் ஒளிப்பதிவை ஒய்.என். முரளி மேற்கொள்ள படத்தொகுப்பை மொகமத் இத்ரிஸ் கையாளுகிறார். இப்படம் பற்றி இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் கூறியதாவது, நம் தமிழ் சமுதாயம் கலை மற்றும் கலாச்சாரம், சமூக உறவுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டது ஆனால் இன்று அவைகள் கட்டுப்பாடுகளை இழந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறைக்கு நம் உறவையும் கலாச்சாரத்தையும் கொண்டுசெல்லும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.

    இந்த படத்தில் இடம் பெறவுள்ள "மேலே ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம்" என்ற பாடலுக்கு நடிகை சன்னி லியோனை நடனமாட வைக்க வேண்டும் என்று வெகு நாட்கள் காத்திருந்தோம், அந்த ஆசை தற்போது நிஜமாகியுள்ளது. நேற்றைய முன்தினம் மும்பை சென்று நடிகை சன்னி லியோனை நேரில் சந்தித்து படம் பற்றி கூறினேன் கதை மற்றும் நடிகர்களை கேட்டவுடன் அந்த பாடலுக்கு நடமாட ஒப்புக்கொண்டார். அதோடு பாடல் வரிகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார்.

    இந்த பாடலின் படப்பிடிப்பு நவம்பர் 15-ஆம் தேதி சென்னையில் மிக பிரம்மாண்டமாக செட் அமைத்து நடைபெற உள்ளது.

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான்.
    • யோகா குரு ராம்தேவ், போதை பொருள் பயன்படுத்தும் நடிகைகளை பற்றி கடவுளுக்கே தெரியும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் போதை பொருளுக்கு எதிரான இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஆரியவீர் மற்றும் வீராங்கனா மாநாடு என்ற பெயரிலான இதில், யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, நடிகர் சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்தியவர். நடிகர் ஆமீர் கானை பற்றி எனக்கு தெரியாது.

     

    யோகா குரு ராம்தேவ்

    யோகா குரு ராம்தேவ்

    நடிகர் ஷாருக் கானின் குழந்தை கூட போதை பொருள் பயன்படுத்தும்போது பிடிபட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். நடிகைகளை எடுத்து கொண்டால், கடவுளுக்கு மட்டுமே அவர்களை பற்றி தெரியும் என கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

     

    சல்மான் கான்

    சல்மான் கான்

    திரை துறை முழுவதும் போதை பொருள் விளையாடுகிறது. அரசியலிலும் கூட போதை பொருட்கள் உள்ளன மேலும் தேர்தலின்போது, மதுபானம் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு போதை பொருளுக்கு அடிமையாவதில் இருந்தும் இந்தியா விடுபட வேண்டும் என நாம் ஒரு தீர்மானம் எடுத்து கொள்ள வேண்டும். இதற்காக நாமொரு இயக்கம் தொடங்குவோம் என யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.

    நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீரென மரணம் அடைந்த பின்னர் திரை துறையை சுற்றி போதை பொருள் பயன்பாடு என்பன போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இதில், பிரபல முன்னணி இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட திரையுலக நடிகைகள் கூட சிக்கி, வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தொலைக்காட்சி தொடர்களின் மூலம் பிரபலமடைந்தவர் வைஷாலி.
    • இவரின் தற்கொலை செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    சசுரால் சிமர் கா, சூப்பர் சிஸ்டர், மன்மோகினி 2 போன்ற இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் வைஷாலி  தாக்கர். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வசித்து வந்த இவர், தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


    வைஷாலி தாக்கர்

    நடிகை வைஷாலி தற்கொலை செய்த அறையை சோதனை செய்த போலீசார் குறிப்பு ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில், சில காலம் தான் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் தனது முன்னாள் காதலரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இவருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அபிநந்தன் என்பவருடன் நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதள ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள வைஷாலி வருங்கால கணவர் கென்யா நாட்டை சேர்ந்த பல் மருத்துவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


    வைஷாலி தாக்கர்

    அதன்பின், ஒரு மாதத்திற்கு பிறகு அபிநந்தனை திருமணம் செய்யபோவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஜூனில் நடக்க இருந்த இவர்களது திருமணமும் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சமூக ஊடகத்தில் இருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி வீடியோவையும் நீக்கியுள்ளார். இவரின் தற்கொலை இந்தி திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நடிகை மனவா நாயக் வாடகை காரில் வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • இவர் கார் ஓட்டுனர் மேல் போலீசில் புகார் செய்துள்ளார்.

    நடிகை மனவா நாயக் மராத்தி மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். மனவா நாயக் செல்போன் செயலி மூலம் பதிவு செய்து வாடகை காரில் நேற்று இரவு 8 மணியளவில் வீட்டிற்கு சென்றுள்ளார். செல்போன் பேசிக்கொண்டு கார் ஓட்டிய ஓட்டுனரிடம் செல்போன் பேசிக்கொண்டு கார் ஓட்டவேண்டாம் என கூறியுள்ளார். ஆனால், தொடர்ந்து அந்த டிரைவர் காரை இயக்கி போக்குவரத்து விதிகளை மீறி சென்றதால் போக்குவரத்து போலீசார் அந்த காரை மறித்து விசாரித்துள்ளார்.


    மனவா நாயக்

    அப்போது, கார் ஓட்டுனர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், நடிகை மனவா நாயக் தலையிட்டு பிரச்சினையை தீர்த்துள்ளார். ஆனால், கார் ஓட்டுனர் நடிகை மனவா மீது கோபப்பட்டு ஆத்திரத்தில் திட்டியுள்ளார். 500 ரூபாய் அபராதம் நீங்கள் கொடுப்பீர்களா? கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நடிகையை மிரட்டியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து நடிகை மனவா, காரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லும்படி டிரைவரிடம் கூறியுள்ளார். ஆனால், காரை வேகமாக இயக்கிய ஓட்டுனர் போலீஸ் நிலையத்திற்கு செல்லாமல் வேறு பகுதிக்கு சென்றுள்ளார். இதையடுத்து, வாடகை கார் நிறுவன செயலியில் இது குறித்து நடிகை புகாரை பதிவு செய்துள்ளார்.


    மனவா நாயக்

    உடனடியாக, வாடகை கார் நிறுவன செயலி ஊழியர் ஓட்டுனரை தொடர்புகொண்டு காரை வேகமாக இயக்கவேண்டாம் என கூறியுள்ளார். பின்னர், காரை நிறுத்தும்படி நடிகை மனவா நாயக் ஓட்டுனரிடம் கூறியுள்ளார். ஆனால், காரை நிறுத்தாமல் அவர் மற்றொரு நபரை செல்போனில் அழைத்துள்ளார். இதனால், பதற்றமடைந்த நடிகை மனவா காரில் இருந்தவாறு கத்தி கூச்சலிட்டு உதவி கேட்டுள்ளார்.

    பெண் காரில் இருந்தவாறு உதவி கோரி கூச்சலிடுவதை கண்ட பைக் மற்றும் ஆட்டோவில் சென்ற சிலர் வேகமாக சென்று காரை இடைமறித்து நடிகையை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுனர் மற்றும் கார் எண்ணை நடிகை மனவா நாயக் தனது பேஸ்புக்கில் மும்பை போலீசை டேக் செய்து பதிவிட்டார். இதனை தொடர்ந்து கார் ஓட்டுனரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு.
    • கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது.

    நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது.


    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 4 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர்.


    இதையடுத்து விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், காதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது, "நயன்தாரா விவகாரத்தில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறோம். அந்த குழு விசாரித்து கொண்டிருக்கிறார்கள். முழு அறிக்கை கிடைக்கபெற்ற பின்னர் எந்த மாதிரியான விதிமீறல் நடைபெற்றிருக்கிறது. விதிமீறலின் தன்மை சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா? என்று முழுவிவரமும் அறிவிக்கப்படும்" என்று கூறினார்.

    • பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் படம் 'சலார்'.
    • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது.


    சலார்

    இந்நிலையில் 'சலார்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளார். இவரின் பிறந்த நாளான இன்று வாழ்த்து தெரிவித்து படக்குழு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது. 


    • மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் படம் 'பகாசூரன்'.
    • இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.


    பகாசூரன்

    இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், 'பகாசூரன்' படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.


    பகாசூரன்

    அதன்படி, இப்படத்தின் இரண்டாவது பாடல் 'காத்தமா' நாளை வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • எச்.வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.


    துணிவு

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். "துணிவு" திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெறும் துணிவு திரைப்பட படப்பிடிப்பின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    சென்னையில் நடைபெறும் துணிவு பட ஷூட்டிங்

    அதன்படி, சென்னை, அண்ணாசலையில் உள்ள எல்.ஐ.சி கட்டிடம் அருகே துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அஜித் - மஞ்சு வாரியர் பங்கு பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து அஜித்தை காண ரசிகர்கள் பலர் அங்கு குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான படம் புஷ்பா.
    • இப்படத்தின் இரண்டாம் பகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    புஷ்பா

    இப்படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா...' என்ற பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். இந்த பாடல் தற்போது வரை ரசிகர்கள் பலரின் முணுமுணுப்பாக இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இதிலும் முதல் பாகத்தில் இருந்தது போல் சமந்தாவின் பாடல் காட்சி ஒன்று இருக்கும் என்று கூறப்பட்டது.


    புஷ்பா

    இந்நிலையில், 'புஷ்பா-தி ரூல்' படத்தில் சமந்தா இடம் பெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தாவிற்கு பதிலாக தமன்னா இடம்பெறவுள்ளதாகவும் அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை படக்குழு இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

    • கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு.
    • கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது.

    நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது.

    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 3 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர். 


    இந்த நிலையில் விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×