சூர்யா-கார்த்தி இருவரும் எப்படி? மனம் திறந்த ரெஜிஷா விஜயன், லைலா

கார்த்தியின் 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இப்படத்தில் ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லைலா - ரெஜிஷா விஜயன் 
லைலா - ரெஜிஷா விஜயன் 
Published on

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 21-ம் தேதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மாலைமலர் பேட்டி
மாலைமலர் பேட்டி

மாலைமலர் பேட்டி

இந்நிலையில் சர்தார் படம் குறித்து ரெஜிஷா விஜயன், லைலா மற்றும் மாஸ்டர் ரித்விக் ஆகியோர் மாலைமலர் நேயர்களுக்காக பிரத்யேக பேட்டி அளித்தனர். இதில் ரெஜிஷா விஜயன் பேசுகையில், "கர்ணன் படத்தின் ரிலீசுக்கு முன் வெளியான தட்டான் தட்டான் பாடலை கேட்ட பிறகு பி.எஸ்.மித்ரன் சார் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு சர்தார் படத்தின் கதையை சொன்னார். அதை கேட்ட பிறகு அந்த கதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இந்த கதை இப்போது வரைக்கும் நாம் விவாதிக்காத ஒரு கதை. அதே நேரம் ரொம்ப ஜாலியா, கமர்சியலா தியேட்டர்ல பார்க்குற மாதிரி படத்தை எடுத்து வைத்திருக்கிறோம். எனக்கு இதில் ரொம்ப முக்கியமான ஒரு கதாப்பாத்திரம். படத்தை அனைவரும் பாருங்கள்" என்றார்.

கார்த்தி மற்றும் சூர்யாவுடன் நடித்தது குறித்தும் அந்த அனுபவம் குறித்தும் ரெஜிஷா விஜயன்-லைலாவிடம் கேட்டபோது, இருவரும் பொதுவான கருத்தையே கூறினார்கள். கார்த்தியும் சூர்யாவும் மிகவும் அன்பானவர்கள், மென்மையான மனிதர்கள், கண்ணியமானவர்கள் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com