7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக தயாரான விஜய் சேதுபதி படம்

கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி.விஜய் சேதுபதி நடிப்பில் இவர் இயக்கிய இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
Published on

கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாக தயாராகி வருவதாக தகவல் வெளியானது.

இடம் பொருள் ஏவல்
இடம் பொருள் ஏவல்

இடம் பொருள் ஏவல்

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விஷ்ணு விஷால் மற்றும் நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தில் இடம்பெற்றுள்ள வைய்யம்பட்டி வல்லக்குட்டி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் சீனு ராமசாமி பதிவிட்டு, பறவைகள் எச்சந்தான் காடு எங்க பண்பாட்டில் காடேதான் வீடு என்று குறிப்பிட்டிருந்தார்.

இடம் பொருள் ஏவல்
இடம் பொருள் ஏவல்

இடம் பொருள் ஏவல்

இந்நிலையில் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இடம் பொருள் ஏவல் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் மிக விரைவில் வெளியிட தயாராக உள்ளோம் என்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

இடம் பொருள் ஏவல் அறிவிப்பு
இடம் பொருள் ஏவல் அறிவிப்பு

இடம் பொருள் ஏவல் அறிவிப்பு

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் பல விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com