என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் வருண் தவான் நடித்துள்ள படம் ‘பெடியா’.
    • இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் வருண் தவான் நடித்துள்ள படம் 'பெடியா'. இந்த படத்தில் வருண் தவானிற்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். பாலிவுட்டில் நடிகர் வருண் தவானின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக 'பெடியா' டிரைலரை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.


    பெடியா

    பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் புதிய கதைக்களம் கொண்ட இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் குறித்து இயக்குனர் அமர் கவுசிக் கூறுகையில், "படத்தில் இடம்பெறும் சுவாரசியமான நிகழ்வுகளுக்கு ஒரு முன்னோட்டமாக இது இருக்கும். திரையரங்குளில் பார்த்து ரசிப்பதற்காக எடுக்கப்பட்ட படம் தான் பெடியா. இப்படம் ரசிகர்களை கட்டாயம் மகிழ்விக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது," என்றார்.


    பெடியா

    தயாரிப்பாளர் தினேஷ் விஜன் கூறுகையில், "தரமான கிராபிக்ஸ் காட்சிகளோடு உருவாகியுள்ள இப்படத்தை குடும்பத்துடன் கொண்டாட்டமாக ரசிக்கலாம். அனைத்து தலைமுறையினரையும் கவரும் ஒரு சினிமா அனுபவமாக இது இருக்கும். மிகுந்த திறைமைசாலியான அமர் கவுசிக் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். காமெடி மற்றும் திகில் நிறைந்த, இந்தியாவின் முதல் ஓநாய் மனிதனின் சாகசங்கள் குறித்த படமாக இது உருவாகியுள்ளது," என்றார்.

    'பெடியா' திரைப்படம் நவம்பர் 25-ஆம் தேதி தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ப்ரின்ஸ்' திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார்.

    ப்ரின்ஸ்

    ப்ரின்ஸ்

     

    மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசையமைத்திருக்கும் இப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

     

    ப்ரின்ஸ்

    ப்ரின்ஸ்

    இந்நிலையில் 'ப்ரின்ஸ்' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் திரைபிரபலங்கள், படக்குழு என பலரும் கலந்துக் கொண்டனர். அதில் பேசிய சிவகார்த்திகேயன், "'ப்ரின்ஸ்' படத்தைப் பொருத்தவரை இது ஒரு எளிமையான கதை. இந்திய பையன் ஒருவன் ப்ரிட்டிஷ் பெண்ணை காதலிக்கறான் என்ற ஒரு வரிதான்.

    ப்ரின்ஸ்

    ப்ரின்ஸ்

     

    இதில் அனுதீப் கொடுத்திருக்கும் காமெடி விஷயங்கள்தான் இந்தப் படத்தை பொருத்தவரை நாங்கள் புதிய விஷயமாக பார்க்கிறோம். காமெடி கவுண்ட்டர்கள் என்றில்லாமல், நாம் பேசும்போது சம்பந்தமே இல்லாத வேறொரு பதில் சொல்வது என கதை நகரும். நாங்கள் இந்தப் படத்தில் காட்டியுள்ள ஊர் தமிழ்நாட்டில் எங்குமே கிடையாது. அனுதீப் உருவாக்கிய ஊர் அது. அந்த மக்கள் அனைவரும் அவர்கள் சிந்திப்பதுதான் சரி என்று யோசிப்பார்கள்.

     

    ப்ரின்ஸ் படக்குழு

    ப்ரின்ஸ் படக்குழு

     

    அப்படியான ஊரில் இருக்கக்கூடிய ஒருவனுக்கு வரும் லக், பிரச்சனைகள் அதை அவன் எதிர்கொள்ளும் விதம் இவைதான் படம். படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. எல்லாருக்கும் பிடிக்கும்படியான ஜாலியான படம் இது. தீபாவளிக்கு குடும்பங்களாக பார்க்கும்படியான எண்டர்டெயின்மெண்ட்டான படம். இன்னொரு பக்கம் கார்த்தியின் 'சர்தார்' படம் வெளியாகிறது. இரண்டு படங்களும் முற்றிலும் வேறான கதைக்களம். இரண்டு படங்களின் வெற்றிக்கும் வாழ்த்துகள்.

     

    சிவகார்த்திகேயன்

    சிவகார்த்திகேயன்

    அனுதீப் தெலுங்கில்தான் யோசிப்பார். இதை தமிழ்-தெலுங்கு என இரண்டு மொழிகளுக்கு ஏற்ற மாதிரி கொண்டு போய் சேர்ப்பதுதான் எங்கள் முன் இருந்த சவால். தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்னால் அக்டோபர் 21 அன்று படம் வெளியாகிறது. தீபாவளி அன்று வெளியாகும் என்னுடைய முதல் படம் இது. இதற்கு முன்னால் சின்ன வயதில் இருந்து 20 வருடங்களாக தீபாவளி அன்று வெளியாகும் அனைத்து ஹீரோக்களின் படங்களையும் பார்த்திருக்கிறேன். இப்போது என்னுடைய படத்தைப் பார்க்க போகிறேன் என்பது மகிழ்ச்சி" என்றார்.

    • நடிகர் பப்லு பிரித்விராஜ் டெலிவிஷன் தொடர்களில் நடித்து பிரபலமானவர்.
    • இவர் தற்போது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    57 வயதான பப்லு பிரித்விராஜ் சினிமா மற்றும் டெலிவிஷன் தொடர்களில் நடித்து பிரபலமானவர். 'வாரணம் ஆயிரம்', 'பயணம்', 'பாண்டிய நாட்டு தங்கம்', 'சிகரம்', 'அழகன்' உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு பீனா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.


    பப்லு பிரித்விராஜ்

    இவருடைய மகன் ஆட்டிசம் குறைபாடு உடையவர். இதனால் பப்லு மன உளைச்சலில் இருந்தார். அதே நேரம் மகனையும் கவனித்து வந்தார். இது தொடர்பாக அவரது மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.


    பப்லு பிரித்விராஜ்

    இந்நிலையில், நடிகர் பப்லு மலேசியாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • 2008-ம் ஆண்டு ரசிகர்களை சந்தித்த ரஜினி தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை துண்டு சீட்டில் எழுதிக் கொடுக்க சொன்னார்.
    • தான் பிறந்த நாச்சிக்குப்பத்தில் தாய்-தந்தைக்கு நினைவு மண்டபம் கட்ட ரஜினி திட்டமிட்டுள்ளார்.

    ரஜினிகாந்த் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தாலும் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இருக்கும் பிணைப்பில் ஒருபோதும் இடைவெளி வந்ததில்லை. ரஜினி 2008ம் ஆண்டில் ரசிகர்களை சந்தித்தார். ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்பில் கவனிக்க வைத்த விஷயம் கடமையைச்செய் பலனை எதிர்பார் என்ற வாசகம்.

     

    அதோடு ரசிகர்கள் தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை துண்டு சீட்டில் எழுதிக் கொடுக்கலாம் என்று ரஜினி உத்தர விட்டிருந்தார். அதன்படி ஒரு ரசிகர் கேட்ட கேள்வி வாசிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் கிருஷ்ணகிரி பக்கத்தில் இருக்கும் நீங்கள் பிறந்த ஊரான நாச்சிக்குப்பத்தில் உங்கள் தாய் தந்தையர்க்கு நினைவு மண்டபம் கட்டுவீர்களா? என்று வாசிக்கப்பட்டது. அப்போது ரஜினியின் முகத்தில் ஏற்பட்ட பிரகாச ஓளி அவரது மன மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

     

    அந்த ரசிகர் யார் என்று ரஜினி கேட்க, கிருஷ்ணகிரியை சேர்ந்த கார்த்திகேயன் என்று அந்த ரசிகர் எழுந்து நின்றார். அவர் மீது தனி பாசம் கொண்ட ரஜினி தன்னை வீட்டில் வந்து பார்க்கும்படி கூறினார். மறுநாள் வீட்டில் சந்தித்தவரிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார். ஊர் நிலவரம், நாச்சிக் குப்பத்தின் தற்போதைய சூழல் எல்லாம் விசாரித்து தெரிந்து கொண்டவர் கார்த்திகேயனுக்கு கிருஷ்ணகிரி மன்றத்தில் முக்கிய பொறுப்பும் கொடுத்து அழகு பார்த்தார்.

     

    கார்த்திகேயன் கேள்வி எழுப்பிய பிறகு நாச்சிக் குப்பத்தின் மீது ரஜினியின் பார்வை விழுந்தது. அங்கு தன்னுடைய அம்மா ரமாபாய், தந்தை ராமோஜி ராவ் பிறந்த வீட்டின் தற்போதைய சூழல் எல்லா வற்றையும் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொண்டே இருந்திருக்கிறார். தனது அண்ணன் சத்யநாராயணாவை நாச்சிக்குப்பம் கிராமத்திற்கு அனுப்பி பார்க்க வைத்தார் ரஜினி. அங்கு ரஜினியின் மாமா துக்காராம், அத்தை சரஸ்வதிபாய் ஆகியோர் பூர்வீக வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள்.

     

    அந்த வீடு அமைந்திருக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே ரஜினிக்கு சொந்தமான ஒரு தோட்டம் போன்ற இடம் அமைந்திருக்கிறது. அங்கு முதல் கட்டமாக வேலி அமைத்து ஒரு தண்ணீர் தொட்டியை அமைக்க உத்தரவிட்டார். வயல், விவசாயம் வேலைகளை மட்டுமே நம்பி இருக்கும் அந்த கிராமத்தின் தண்ணீர் தேவையை போக்க தண்ணீர் தொட்டியும் அங்கேயே கால்நடைகள் தண்ணீர் அருந்தும்படியான வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

     

     

    இந்த வசதியால் அந்தப் பகுதியில் இருந்தவர்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகியிருக்கிறது. தான் பிறந்த கிராமத்தை நினைவுபடுத்திய கிருஷ்ணகிரி கார்த்திகேயனிடமே இடத்தைப் பாதுகாக்கும் பொறுப்பையும் கொடுத்தார் ரஜினி. இது நடந்து பல ஆண்டுகள் ஆகின. பிறகு சில வாரங்களுக்கு முன்பு தாய் தந்தையர்க்கு சிலை அமைக்கும் பணிக்காக இடம் தூய்மை செய்யப்பட்டு பணிகள் நடந்தன.

     

    தோட்டத்துப் பகுதியில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஓடு வேய்ந்த சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டது. இதன் மீது ஒரு பீடம் கட்டப்பட்டு அதில் பெற்றோரின் மார்பளவு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் பெற்றோர் வசித்த பழைய வீடு இடிக்கப்பட்டு, அங்கு நினைவு மண்டபம் கட்டும் பணிகள் நடக்க இருப்பதாகக் கூறுப்படுகிறது.

    • சினிமா பார்வையாளர்களுக்காக சினிமா மலர் என்ற யூடியூப் சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
    • பார்வையாளர்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    மாலைமலர் குழுமம் வாசகர்கள், பார்வையாளர்கள், ரசிகர்கள் என அனைவரையும் குதூகலப்படுத்தும் வகையில் பல முன்னெடுப்புகளை எடுத்து அவர்களை மகிழ்வித்து வருகிறது. மாலைமலர் இணையதளம் மட்டுமல்லாது யூடியூபிலும் தங்களுடைய பிரத்யேகமான பிரபலங்களின் பேட்டி, இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, அரசியல் நிகழ்வுகள் என பல விஷயங்களை கொடுத்து வருகிறது.

    சினிமாமலர்

    சினிமாமலர்

     

    இந்நிலையில் மாலைமலர் பார்வையாளர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் சினிமாவுக்காக தனியான சினிமா  மலர் என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ளது. அதில் திரைப்பிரபலங்களின் பேட்டி, இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சினிமா நிகழ்வுகள் என இன்னும் பல விஷயங்களை கொடுக்க இருக்கிறது. எனவே மாலைமலர் நேயர்கள் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

    • படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் அர்னவ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    • இவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    தொலைக்காட்சித் தொடரில் நடித்து வரும் சின்னத் திரை நடிகர் அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.


    இதற்கிடையில் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார், அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நடிகர் அர்னவ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். அர்னவுக்கு போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பினர்.


    ஆனால் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18ஆம் தேதி ஆஜராவதாக அர்னவ் வக்கீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போரூர் உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் பூந்தமல்லி அருகே உள்ள நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் அர்னவ்வை கைது செய்து மாங்காடு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.


    சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப் பட்டார். அவரை வரும் 28-ந் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் அர்னவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


    இந்நிலையில், நடிகர் அர்னவ் ஜாமின் கோரி பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அர்னவ் வெளி வந்தால் சாட்சிகளை கலைக்க நேரிடும் என்று திவ்யா தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்று அம்பத்தூர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரணை செய்தனர். இரு தரப்பு மனுவையும் விசாரித்த நீதிபதி அர்னவ் ஜாமின் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் அர்னவ் மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

    • தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராஜமவுலி.
    • இவர் தனது அடுத்த படத்தில் மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளார்.

    தெலுங்கில் முன்னணி இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் தனது அடுத்த படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளார். ஆர். ஆர். ஆர். படத்தின் வெற்றிக்கு பிறகு மகேஷ் பாபு படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் இயக்குனர் ராஜமௌலி ஈடுபட்டுள்ளார்.


     ராஜமவுலி

    மகேஷ் பாபு தற்போது எஸ்.எஸ்.எம்.பி. 28 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது. மேலும் இந்த படம் ஆக்‌ஷன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார்.


     ராஜமவுலி

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாகவும் இது குறித்து அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    • சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரணிதா.
    • குழந்தை பிறந்த பிறகு மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழில் கார்த்தி ஜோடியாக சகுனி, சூர்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரணிதா தெலுங்கு, கன்னட திரை உலகிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். கடந்த வருடம் நிதின் ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார். ஜூலை மாதம் பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அர்ணா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

     

    பிரணிதா - நிதின் ராஜ்

    பிரணிதா - நிதின் ராஜ்

    கடந்த சில நாட்களாக மாலத்தீவில் கவர்ச்சி உடையில் தன்னை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தார். அதை பார்த்த ரசிகர்கள் திருமணமானதையும், குழந்தை பிறந்ததையும் மறந்து வீட்டீர்களா? என்று கேலி செய்தனர்.

     

    பிரணிதா

    பிரணிதா

    இந்நிலையில் ஆண் குழந்தை பெற்று நான்கு மாதங்களுக்கு பிறகு 'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வால் நடிக்க வந்து இருப்பதுபோல் பிரணிதாவும் மீண்டும் நடிக்க வருகிறார். இயக்குனர்களிடம் பிரணிதா கதை கேட்டு வருகிறார் என்றும், அவர் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

    • வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கியுள்ள படம் பேட்டைகாளி.
    • இப்படம் வருகிற 21-ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பேட்டைக்காளி. இவர் இதற்குமுன்பு தினேஷ் நடிப்பில் வெளியான அண்ணணுக்கு ஜே படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் கலையரசன், ஆண்டனி, கிஷோர், ஷீலா ராஜ்குமார், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வருகிற 21-ம் தேதி வெளியாகவுள்ளது.

     

    பேட்டைக்காளி படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்

    பேட்டைக்காளி படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்

    இந்நிலையில் இப்படத்தின் கதாப்பாத்திர அறிகும போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டைக்காளி படத்தில் பாண்டியாக கலையரசனும், செல்வசேகரனாக வேல ராமமூர்த்தியும், தேன்மொழியாக ஷீலா ராஜ்குமாரும், முத்தையாவாக கிஷோரும் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படத்தை இயக்கிய ஒபலி என். கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படம் டிசம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சிம்பு 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    பத்து தல

    பத்து தல

     

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'பத்து தல' படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

    பத்து தல

    பத்து தல

     

    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றன். ரசிகர்களுடன் சிம்பு இருப்பது போன்றும், இயக்குனர் ஒபிலி என்.கிருஷ்ணா சிம்புவுடன் பேசுவது போன்றும் அந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இப்படம் டிசம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • புதியதாக நியமிக்கப்பட்ட ஸ்ருதன்ஜெய் நாராயணன் திருப்பூர் சப்-கலெக்டராக இன்று காலை பதவி ஏற்றார்.
    • எனது முழு உழைப்பும் திருப்பூர் மக்களுக்காக இருக்கும் என்ற பொறுப்பேற்ற பின் ஸ்ருதன்ஜெய் நாராயணன் கூறினார்.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் பயிற்சி பெற்று வந்த சப்-கலெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டனர்.

    அதன்படி திருப்பூர் சப்-கலெக்டராக பணியாற்றி வந்த பண்டரிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் சப்-கலெக்டராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் பணி நியமனம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து புதியதாக நியமிக்கப்பட்ட ஸ்ருதன்ஜெய் நாராயணன் திருப்பூர் சப்-கலெக்டராக இன்று காலை பதவி ஏற்றார். இவர் நடிகர் சின்னிஜெயந்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொறுப்பேற்ற பின் ஸ்ருதன்ஜெய் நாராயணன் கூறியதாவது:-

    எனது முழு உழைப்பும் திருப்பூர் மக்களுக்காக இருக்கும். திரைத்துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எனது பெற்றோர் சிறு வயது முதலே கல்வியை முதன்மையாக போதித்தனர். அவர்களுக்கு எனது நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திரைத்துறையில் 17 வருடங்களான நிலைத்து நிற்கும் நடிகை தமன்னா.
    • தற்போது இவர் அளித்துள்ள பேட்டியில் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    தமிழில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த தமன்னா 17 வருடங்களாக சினிமாவில் நீடிக்கிறார். தற்போது அவருக்கு 32 வயது ஆவதால் திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர் என்றும், விரைவில் அவரது திருமணம் நடக்க உள்ளது என்றும் தகவல்கள் பரவின.

     

    தமன்னா

    தமன்னா

    இதற்கு விளக்கம் அளித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், ''எல்லாரையும் போலவே எனது பெற்றோரும் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். எனக்கும் திருமண அமைப்பின் மீது நம்பிக்கை இருக்கிறது. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், தாயாக வேண்டும் என்றும் ஆசையாக உள்ளது. ஆனால் தற்போதைக்கு நான் எனது சொந்த வாழ்க்கைக்காக நேரத்தை ஒதுக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.

     

    தமன்னா

    தமன்னா

    நடிப்புத் தொழிலில் மிகவும் பிஸியாக இருக்கிறேன். பிஸி காரணமாக சில முறை எனது பெற்றோரிடம்கூட தொலைபேசியில் பேச முடியாத நிலையில் இருக்கிறேன். இப்போதைக்கு எனது சந்தோஷம் எல்லாமே சூட்டிங் லொகேஷனில்தான் இருக்கிறது. எனது தொழிலை நான் இந்த அளவிற்கு சிறப்பாக செய்வதற்கு எனது பெற்றோர் மற்றும் எனது ரசிகர்களின் ஆதரவு தான் காரணம் என்பதை மறக்க மாட்டேன்" என்றார்.

    ×