என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி நாயர்.
    • நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த இவரின் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். இந்நிலையில் பார்வதி நாயரின் வீட்டில் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், லேப்டாப் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம் ஒன்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான இன்னொரு கைகடிகாரமும் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

     

    பார்வதி நாயர்

    பார்வதி நாயர்

    கடந்த 2 ஆண்டுகளாக பார்வதி நாயரின் வீட்டில் வேலை செய்து வந்த நபரே இந்த பொருட்களை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசில் பார்வதி நாயர் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய வேலைக்கார வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 

    • சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் திரைப்படங்கள் நாளை வெளியாக உள்ளது.
    • தீபாவளி பண்டியை ஒட்டி வெளியாகும் படங்களின் சிறப்பு காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 24-ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், அதற்கு இப்பொழுதே மக்கள் தயாராகி வருகின்றனர். அதேபோல் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அதன்படி வெள்ளிக்கிழமையன்று வெளியாகக்கூடிய படங்கள் மற்றும் தீபாவளியை ஒட்டி வெளியாகக்கூடிய படங்களுக்கு திட்டமிட்டு மக்கள் ஆர்வமாக சென்று கண்டுகளிப்பது உண்டு. அதற்கு ஏதுவாக ஏற்கனவே ஒளிப்பரப்பக்கூடிய காட்சிகளில் சில மாற்றங்கள் செய்து கூடுதலாக சில சிறப்பு காட்சிகளை ஒளிப்பரப்ப திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிடுவர்.

     

    சர்தார் - ப்ரின்ஸ்

    சர்தார் - ப்ரின்ஸ்

    தீபாவளி பண்டிகைக்காக தியேட்டர்களில் வருகிற 22, 23, 24 ஆகிய தேதிகளில் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி திரையிட ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேலும் 21, 25, 26, 27 ஆகிய தேதி களிலும் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    இந்த நிலையில் வருகிற 21, 25, 26, 27 ஆகிய தேதிகளிலும் தியேட்டர்களில் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்படும். எனவே நாளை (21-ந் தேதி) முதல் 27-ந்தேதி வரை 7 நாட்கள் தியேட்டர் களில் ஒரு சிறப்பு காட்சியுடன் சேர்த்து தினமும் 5 காட்சிகள் திரையிடப்பட உள்ளது. முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் நிலையில் கடைசி காட்சி இரவு 1.30 மணிக்கு முடிவடையும்.


    சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் படங்கள் 21-ம் (நாளை) தேதி திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

    • 'கவலை வேண்டாம்' படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.
    • 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் யாஷிகா பிரபலமானார்.

    2016-ஆம் ஆண்டு வெளியான 'கவலை வேண்டாம்' படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பின்னர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

     

    யாஷிகா ஆனந்த்

    யாஷிகா ஆனந்த்

    அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்ததன் மூலம், படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

     

    யாஷிகா ஆனந்த்

    யாஷிகா ஆனந்த்

    சமூக வலைதளங்களிலும் யாஷிகா ஆனந்த் சுறுசுறுப்பாக இருப்பவர். ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி பல ஏடாகூடமான கேள்விக்கு பதிலளித்தும் உள்ளார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் யாஷிகா தற்போது புதிய கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு, நான் உங்களை திசைதிருப்புவேன் என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    • சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படத்தை இயக்கிய ஒபலி என். கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கி வருகிறார்.
    • இப்படம் டிசம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சிம்பு 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    பத்து தல - சிம்பு

    பத்து தல - சிம்பு

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'பத்து தல' படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

     

    பத்து தல

    பத்து தல

    நேற்று இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கினர். ரசிகர்களுடன் சிம்பு இருப்பது போன்றும், இயக்குனர் ஒபிலி என்.கிருஷ்ணா சிம்புவுடன் பேசுவது போன்றும் அந்த புகைப்படங்கள் அமைந்திருந்தது.

     

    சிம்பு

    சிம்பு

    இந்நிலையில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன் ஒரு புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    இப்படம் டிசம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தொலைக்காட்சி தொடர்களின் மூலம் பிரபலமடைந்தவர் வைஷாலி.
    • இவர் கடந்த 15-ந் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

    சசுரால் சிமர் கா, சூப்பர் சிஸ்டர், மன்மோகினி 2 போன்ற இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் வைஷாலி தாக்கர். மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வசித்து வந்த இவர், கடந்த 15-ந் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நடிகை வைஷாலி தற்கொலை செய்த அறையை சோதனை செய்த போலீசார் குறிப்பு ஒன்றை கைப்பற்றினர். அதில், சில காலம் தான் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் தனது முன்னாள் காதலரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

     

    வைஷாலி தாக்கர்

    வைஷாலி தாக்கர்

    இவருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அபிநந்தன் என்பவருடன் நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதள ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள வைஷாலி வருங்கால கணவர் கென்யா நாட்டை சேர்ந்த பல் மருத்துவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    அதன்பின், ஒரு மாதத்திற்கு பிறகு அபிநந்தனை திருமணம் செய்யபோவதில்லை என்று தெரிவித்தார். மேலும், கடந்த ஜூனில் நடக்க இருந்த இவர்களது திருமணமும் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சமூக ஊடகத்தில் இருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி வீடியோவையும் நீக்கினார்.

     

    வைஷாலி தாக்கர்

    வைஷாலி தாக்கர்

    இந்நிலையில், வைஷாலியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் காதலரான ராகுல் நவ்லானி மற்றும் அவரது மனைவி திஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்டை வீட்டில் வசித்து வந்த ராகுலை இந்தூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். தொழிலதிபரான அவருடன் வைஷாலி கடந்த காலத்தில் தொடர்பில் இருந்துள்ளார். இதனை அடுத்து வைஷாலியை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளதுடன், அவர் திருமணம் செய்ய விடாமலும் தடுத்துள்ளார் என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

     

    வைஷாலி தாக்கர் - ராகுல் நவ்லானி

    வைஷாலி தாக்கர் - ராகுல் நவ்லானி

    இதுபற்றி காவல் துறை ஆணையாளர் ஹரிநாராயணாச்சாரி மிஷ்ரா கூறும்போது, வழக்கு பதிவான பின்பு, ராகுல் காணாமல் போய் விட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராகுலுடனான வைஷாலியின் தொடர்பு பற்றி நடிகையின் குடும்பத்தினருக்கு தெரியும். வைஷாலி பற்றி ராகுலே வதந்திகளை பரப்பியுள்ளார் என குடும்பத்தினர் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளனர்.

    மணமகனாக வருபவர்களிடம், தன்னுடனான தொடர்பு பற்றி கூறியும், வைஷாலியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியும் வந்துள்ளார். இதனாலேயே பல் மருத்துவருடனான திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேறு யாருடனாவது திருமணம் செய்து வைக்க வைஷாலி குடும்பத்தினர் முயலும்போதும், இதே வேலையில் ராகுல் ஈடுபட்டு உள்ளார் என அவர் கூறியுள்ளார்.

    • மோகன்லால் தற்போது வைசாக் இயக்கத்தில் மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மோகன்லால் தற்போது மான்ஸ்டர் என்ற புதிய மலையாள படத்தில் நடித்துள்ளார். இதில் லட்சுமி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இயக்குனர் வைசாக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 21-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 3 நாட்களுக்கு இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.


    மான்ஸ்டர்

    மான்ஸ்டர் படத்தை 'கல்ப்' நாடுகள் எனப்படும் வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மான்ஸ்டர் படத்தை அந்த நாடுகளின் தணிக்கை குழுவுக்கு படக்குழுவினர் அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், படத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்று உள்ளதால் திரையிட அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


    மான்ஸ்டர்

    வளைகுடா நாடுகளில் படம் வெளியாகாவிட்டால் வசூல் பெருமளவு பாதிக்கும் என்பதால் சர்ச்சை காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் வளைகுடா நாடுகளின் தணிக்கை குழுவுக்கு அனுப்ப படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் பஹ்ரைன் நாட்டில் இப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    மான்ஸ்டர்

    அதாவது, படத்தை மறுமதிப்பீடு செய்ய தணிக்கை குழுவிடம் படக்குழு சமர்ப்பித்துள்ளதாகவும், படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு தயாரிப்பாளர்களிடம் தணிக்கை குழு கூறியதாகவும் கூறப்படுகிறது. அதன்படி படத்திற்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இசையமைப்பாளர் அனிருத்தின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி.
    • 'ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார்' நிகழ்ச்சி அக்டோபர் 21-ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது.

    தனுஷ் நடிப்பில் 2012-ஆம் ஆண்டு வெளியான 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பின்னர் எதிர்நீச்சல், மான் கராத்தே, கத்தி, மாரி, வேதாளம், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.


    அனிருத்

    தற்போது இவர் திரைத்துறையில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ளது. தனது 10வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், இசையமைப்பாளர் அனிருத் தனது முதல் இந்திய மியூசிக் கான்செர்ட் நிகழ்வான 'ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார் - ஒன்ஸ் அப்பான் எ டைம் கான்சர்ட்' எனும் நிகழ்ச்சியை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் இணைந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


    மெட்ரோ ரயில் விளம்பரம்

    இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எல்லா திசையிலும் அதன் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் இந்நிகழ்வுக்கு முன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்த இசை நிகழ்வை தனித்துவமான வழிகளில் விளம்பரங்கள் செய்து வருகின்றது. அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் இசையமைப்பாளர் அனிருத்தின் பல்வேறு விதமான படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


    கார் ஹாரன் விளம்பரம்

    ரயிலின் வெளியில் மட்டுமல்லாமல், அதன் உள்ளேயும் அனிருத் இசை நிகழ்வு குறித்த படங்கள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் உள்ள மெரினா மாலில் கார்களின் ஹாரன் ஒலிகளை மட்டுமே கொண்டு இசைக்கப்பட்ட அனிருத்தின் "டிப்பம் டப்பம்" பாடல் அங்கிருந்த அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 'ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார் - ஒன்ஸ் அப்பான் எ டைம் கான்சர்ட்' நிகழ்ச்சி அக்டோபர் 21-ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தகக்து.

    • விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
    • தொடர்ந்து மீரா மிதுன் தலைமறைவாக உள்ளார்.

    பிரபல நடிகை மீராமிதுன். இவர் தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த புகாரின் பேரில் அவர் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதன்பின்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


    இதன் விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீராமிதுன் ஆஜராகவில்லை. அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆஜரானார். போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், 'மீராமிதுன் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்' என்றார்.


    இதைத்தொடர்ந்து மீரா மிதுனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை செயல்படுத்துவதற்காக அவரை பல இடங்களில் தேடியும் இருப்பிடத்தை அவர் அடிக்கடி மாற்றி வருவதால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் தலைமறைவாக இருக்கும் அவர் பெங்களூரில் இருப்பதாக தாகவல் வந்ததை அடுத்து அங்கு சென்று பார்த்த போது அவர் வேறு இடத்திற்கு தப்பி சென்றுவிட்டதாக கவல்துறை தெரிவித்தது.


    அதுமட்டுமல்லாமல் அடிக்கடி அவர் செல்போன் நம்பரை மாற்றி வருவதாகவும் ஏற்கனவே வைத்திருந்த நம்பர் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் விரைவில் மீராமிதுனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.


    இந்நிலையில், இந்த வழக்கு இன்று (அக்டோபர் -19) விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை மீராமிதுன் தொடர்ந்து மாயமாக உள்ளார். தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை நவம்பர் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • இசையமைப்பாளர் நடிகர் என பண்முகத்தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி.
    • இவர் தற்போது புதிய பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    2005-ம் ஆண்டு சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பின்னர் டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், யுவன் யுவதி, வேலாயுதம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார்.


    விஜய் ஆண்டனி

    இவர் தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். 2012-ம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். இதனை தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் கைவசம் கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், ரத்தம் உள்ளிட்ட படங்கள் உள்ளன.


    விஜய் ஆண்டனி

    விஜய் ஆண்டனி சமீப காலமாக தொடர்ந்து பல கருத்துக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், தற்போது இவரின் பதிவு ஒன்று கவனம் ஈர்த்து வருகிறது. அதில், "கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி, மதம், கோயில், சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, பணிவா கேப்பேன். நீங்க என்ன கேப்பிங்க?" என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். 


    • திருமணமாகி எட்டு வருடங்கள் ஆனதையடுத்து தற்போது சின்மயி தாயாகியுள்ளார்.
    • இவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றார் என்ற வதந்தி பரவி வந்தது.

    தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார்.


    சின்மயி இரட்டை குழந்தை

    சின்மயி, ராகுல் ரவீந்திரன் தம்பதியினருக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகியுள்ளதை அடுத்து அண்மையில்  ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. இவர்களுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளதாக சின்மயி தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் தெரிவித்திருந்தார்.


    சின்மயி

    சின்மயி கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எதையும் பதிவிடவில்லை என்பதால் அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றார் என்ற வதந்தி பரவி வந்தது. இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் தனது இணைய பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தன் இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘சியான் 61’.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்றது.


    சியான் ௬௧ பூஜை

    இதைத்தொடர்ந்து, பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. 'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா, நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.

    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் இதன் டெஸ்ட் ஷூட் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், சியான் 61 படத்தின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


    பசுபதி

    அதன்படி, இந்த படத்தில் நடிகர் பசுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும், சியான் 61 படத்திற்கு 'கோல்டு' என டைட்டில் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் வருண் தவான் நடித்துள்ள படம் ‘பெடியா’.
    • இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இயக்குனர் அமர் கவுசிக் இயக்கத்தில் வருண் தவான் நடித்துள்ள படம் 'பெடியா'. இந்த படத்தில் வருண் தவானிற்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். பாலிவுட்டில் நடிகர் வருண் தவானின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக 'பெடியா' டிரைலரை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளனர்.


    பெடியா

    பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் புதிய கதைக்களம் கொண்ட இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் குறித்து இயக்குனர் அமர் கவுசிக் கூறுகையில், "படத்தில் இடம்பெறும் சுவாரசியமான நிகழ்வுகளுக்கு ஒரு முன்னோட்டமாக இது இருக்கும். திரையரங்குளில் பார்த்து ரசிப்பதற்காக எடுக்கப்பட்ட படம் தான் பெடியா. இப்படம் ரசிகர்களை கட்டாயம் மகிழ்விக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது," என்றார்.


    பெடியா

    தயாரிப்பாளர் தினேஷ் விஜன் கூறுகையில், "தரமான கிராபிக்ஸ் காட்சிகளோடு உருவாகியுள்ள இப்படத்தை குடும்பத்துடன் கொண்டாட்டமாக ரசிக்கலாம். அனைத்து தலைமுறையினரையும் கவரும் ஒரு சினிமா அனுபவமாக இது இருக்கும். மிகுந்த திறைமைசாலியான அமர் கவுசிக் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். காமெடி மற்றும் திகில் நிறைந்த, இந்தியாவின் முதல் ஓநாய் மனிதனின் சாகசங்கள் குறித்த படமாக இது உருவாகியுள்ளது," என்றார்.

    'பெடியா' திரைப்படம் நவம்பர் 25-ஆம் தேதி தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    ×