என் மலர்
சினிமா செய்திகள்
- ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்துள்ள படம் '13'.
- இந்த படத்தில் கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்த செல்ஃபி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

13
இதைத்தொடர்ந்து தற்போது இவர்கள் இவருவர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் '13'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விவேக் இயக்கியுள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள '13' திரைப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

13
இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி வெளியிட்டார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள '13' படத்தின் டீசர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.
- பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் மிரள்.
- இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "மிரள்". இப்படத்தில் வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

மிரள்
இவர்களுடன் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைக்கிறார்.

மிரள்
ஸ்லாஷர் திரில்லராக உருவாகியுள்ள "மிரள்" திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் நவம்பர் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
It's official - Slasher thriller #Miral in theatres on November 11th. Get ready for the ride on the big screen!
— Axess film factory (@AxessFilm) October 19, 2022
TN release by @SakthiFilmFctry@AxessFilm @Dili_AFF @sakthivelan_b @bharathhere @vanibhojanoffl @ksravikumardir @nameissakthi @itspooranesh @Sethu_Cine @rajNKPK pic.twitter.com/z6fk87QiHR
- பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
- தற்போது நடிகர் சதீஷுடன் இணைந்து 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்துள்ளார்.
ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தொடர்ந்து நடிகர் சதீஷுடன் இணைந்து 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

சன்னி லியோன்
நடிகை சன்னிலியோன் திரைப்படங்களில் கவர்ச்சி நடனமாட நிபந்தனை விதித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "நான் தொடர்ந்து பல படங்களில் குத்துப்பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமாடி வருகிறேன். என்னை பற்றி யாருக்கும் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது.

சன்னி லியோன்
படப்பிடிப்பில் நான் கவர்ச்சி நடனம் ஆடும்போது சுற்றுப்புறத்தில் குழந்தைகள் இருக்கக்கூடாது என்று கண்டிப்பாக கூறியிருக்கிறேன். ஏனென்றால் குத்துப்பாடல் நடனத்தில் நிச்சயம் வயது வந்தோர் காட்சிகள் இருக்கும். அப்போது சுற்றுப்புறத்தில் குழந்தைகள் இருந்தால் நானே தலையிட்டு படப்பிடிப்பை நிறுத்திவிடுவேன்" என்று கூறியுள்ளார்.
- ஜியோ பேபி இயக்கவுள்ள "காதல் - தி கோர்" என்ற படத்தில் மம்முட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கின்றனர்.
- இப்படத்தின் மூலம் பல வருடங்களுக்கு பிறகு, மலையாள சினிமாவில் ஜோதிகா ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.

காதல் - தி கோர்
தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கவுள்ளார். ஜோதிகாவின் பிறந்த நாளான நேற்று முன்தினம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படத்திற்கு 'காதல் - தி கோர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.

காதல் - தி கோர் படக்குழு
இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'காதல் - தி கோர்' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், ஜியோ பேபி, மம்முட்டி, ஜோதிகா காம்போவில் உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
.@KaathalTheCore Starts Rolling from Today@MKampanyOffl @DQsWayfarerFilm @Truthglobalofcl pic.twitter.com/4sn2GZOTGC
— Mammootty (@mammukka) October 20, 2022
- சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ப்ரின்ஸ்' திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார்.
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 21-ம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ப்ரின்ஸ்
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது எதிர்பாராத விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார். அதில், நம்ம எப்போ சார் ஷூட்டிங் போலாம்? அப்புறம் நம்ம அனுதீப் உங்கள எதாவது டார்ச்சர் பண்ணாறா? என்று கேள்வி எழுப்பினார்.

ப்ரின்ஸ்
இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், "ஷூட்டிங் எப்போவேணாலும் போலாம் சார். ஆனா இந்த கதை எப்ப சார் கேட்கலாம். அதேமாதிரி அந்த படத்துல பிரேம்ஜியோட நான் என்ன ரோல்ல சார் நடிக்கிறேன்" என்று பதிலளித்தார். சிவகார்த்திகேயன் ஜாலியாக வெங்கட் பிரபுவை கலாய்த்தது அவருடைய ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு
சிவகார்த்திகேயன் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் இவர்களின் இந்த உரையாடல் அடுத்த படத்தில் இவர்கள் இணைவது உறுதியாகி உள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
- ஜியோ பேபி இயக்கவுள்ள "காதல் - தி கோர்" என்ற படத்தில் மம்முட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கின்றனர்.
- இப்படத்தின் மூலம் பல வருடங்களுக்கு பிறகு, மலையாள சினிமாவில் ஜோதிகா ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.

காதல்
தற்போது இவர் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டியுடன் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கவுள்ளார். ஜோதிகாவின் பிறந்த நாளான நேற்று முன்தினம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படத்திற்கு 'காதல் - தி கோர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.

ஜோதிகா
இந்நிலையில் ஜோதிகா கடின உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "இந்த பிறந்தநாளுக்கு உடல் நலத்தையும் பலத்தையும் எனக்கு நான் பரிசாக தந்துக்கொள்கிறேன். வயது என்ன, என்னை மாற்றுவது, அந்த வயதை நான் மாற்றுகிறேன்!" என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- 'ப்ரின்ஸ்' திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார்.
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ப்ரின்ஸ்
தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ப்ரின்ஸ்
அதில், ரசிகர் ஒருவர் வருங்காலத்தில் இந்தி, மலையாளம் இயக்குனர்களை தேர்வு செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், " கண்டிப்பாக எல்ல மொழி இயக்குனர்களுடனும் பணிபுரிவேன் என்று நினைக்கிறேன். சிலரை சந்தித்துஅவர்களிடம் உரையாடி வருகிறோம். எல்லோரும் பல ஐடியாவுடன் வருகிறார்கள்" என்று கூறினார்.
- விஜய் நடிக்கும் ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
- விஜய்யுடனான சந்திப்பு குறித்து நடிகர் மனோபாலா சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், 'வாரிசு' திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்தின் முதல் பாடல் அப்டேட் தீபாவளியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரிசு
இந்நிலையில், நடிகர் மனோபாலா, விஜய் குறித்து பகிர்ந்துள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "வாரிசு படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய்யை சந்தித்தேன். அவர் அப்படியே இருக்கிறார். நடனம் ஆடும் போது அதிக உத்வேகம். ௧௫ நிமிட சந்திப்பு புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் எனக்கு கொடுத்தது" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
Met thalapathi VIJAY n varisu set...it was amazing ...he s still d same...lots of energy while dancing ...15mts talk...gave me freshness and energy for me too...
— Manobala (@manobalam) October 20, 2022
- வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

விஜய் - ராஷ்மிகா
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், 'வாரிசு' திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வாரிசு - விஜய்
இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் குறித்த புதிய தகவலை இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமன் வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல் குறித்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி நாயர்.
- நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த இவரின் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். இந்நிலையில் பார்வதி நாயரின் வீட்டில் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், லேப்டாப் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம் ஒன்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான இன்னொரு கைகடிகாரமும் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

பார்வதி நாயர்
கடந்த 2 ஆண்டுகளாக பார்வதி நாயரின் வீட்டில் வேலை செய்து வந்த நபரே இந்த பொருட்களை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசில் பார்வதி நாயர் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய வேலைக்கார வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் திரைப்படங்கள் நாளை வெளியாக உள்ளது.
- தீபாவளி பண்டியை ஒட்டி வெளியாகும் படங்களின் சிறப்பு காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 24-ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், அதற்கு இப்பொழுதே மக்கள் தயாராகி வருகின்றனர். அதேபோல் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அதன்படி வெள்ளிக்கிழமையன்று வெளியாகக்கூடிய படங்கள் மற்றும் தீபாவளியை ஒட்டி வெளியாகக்கூடிய படங்களுக்கு திட்டமிட்டு மக்கள் ஆர்வமாக சென்று கண்டுகளிப்பது உண்டு. அதற்கு ஏதுவாக ஏற்கனவே ஒளிப்பரப்பக்கூடிய காட்சிகளில் சில மாற்றங்கள் செய்து கூடுதலாக சில சிறப்பு காட்சிகளை ஒளிப்பரப்ப திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிடுவர்.

சர்தார் - ப்ரின்ஸ்
தீபாவளி பண்டிகைக்காக தியேட்டர்களில் வருகிற 22, 23, 24 ஆகிய தேதிகளில் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி திரையிட ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேலும் 21, 25, 26, 27 ஆகிய தேதி களிலும் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில் வருகிற 21, 25, 26, 27 ஆகிய தேதிகளிலும் தியேட்டர்களில் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்படும். எனவே நாளை (21-ந் தேதி) முதல் 27-ந்தேதி வரை 7 நாட்கள் தியேட்டர் களில் ஒரு சிறப்பு காட்சியுடன் சேர்த்து தினமும் 5 காட்சிகள் திரையிடப்பட உள்ளது. முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் நிலையில் கடைசி காட்சி இரவு 1.30 மணிக்கு முடிவடையும்.
சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் படங்கள் 21-ம் (நாளை) தேதி திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
- 'கவலை வேண்டாம்' படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.
- 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் யாஷிகா பிரபலமானார்.
2016-ஆம் ஆண்டு வெளியான 'கவலை வேண்டாம்' படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பின்னர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

யாஷிகா ஆனந்த்
அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்ததன் மூலம், படவாய்ப்புகளும் குவிந்து வந்தன. சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

யாஷிகா ஆனந்த்
சமூக வலைதளங்களிலும் யாஷிகா ஆனந்த் சுறுசுறுப்பாக இருப்பவர். ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி பல ஏடாகூடமான கேள்விக்கு பதிலளித்தும் உள்ளார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் யாஷிகா தற்போது புதிய கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு, நான் உங்களை திசைதிருப்புவேன் என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.






