பான் இந்தியா படத்திற்கு ரெடியாகும் சிவகார்த்திகேயன்.. வெளியான அப்டேட்..

'ப்ரின்ஸ்' திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுடன் உரையாடினார்.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
Published on

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ப்ரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ப்ரின்ஸ்

தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ப்ரின்ஸ்

அதில், ரசிகர் ஒருவர் வருங்காலத்தில் இந்தி, மலையாளம் இயக்குனர்களை தேர்வு செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், " கண்டிப்பாக எல்ல மொழி இயக்குனர்களுடனும் பணிபுரிவேன் என்று நினைக்கிறேன். சிலரை சந்தித்துஅவர்களிடம் உரையாடி வருகிறோம். எல்லோரும் பல ஐடியாவுடன் வருகிறார்கள்" என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com