பரத்-வாணி போஜன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் மிரள்.இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
பரத் - வாணிபோஜன்
பரத் - வாணிபோஜன்
Published on

இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "மிரள்". இப்படத்தில் வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

மிரள்

இவர்களுடன் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைக்கிறார்.

மிரள்

ஸ்லாஷர் திரில்லராக உருவாகியுள்ள "மிரள்" திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் நவம்பர் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com