என் மலர்

  சினிமா செய்திகள்

  நடிகர் அர்னவ் ஜாமின் மனு ரத்து.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
  X

  அர்னவ்

  நடிகர் அர்னவ் ஜாமின் மனு ரத்து.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் அர்னவ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
  • இவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

  தொலைக்காட்சித் தொடரில் நடித்து வரும் சின்னத் திரை நடிகர் அர்னவ், தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.


  இதற்கிடையில் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது போரூர் அனைத்து மகளிர் போலீசார், அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நடிகர் அர்னவ் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். அர்னவுக்கு போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பினர்.


  ஆனால் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18ஆம் தேதி ஆஜராவதாக அர்னவ் வக்கீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போரூர் உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் பூந்தமல்லி அருகே உள்ள நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகர் அர்னவ்வை கைது செய்து மாங்காடு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.


  சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப் பட்டார். அவரை வரும் 28-ந் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் அர்னவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


  இந்நிலையில், நடிகர் அர்னவ் ஜாமின் கோரி பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அர்னவ் வெளி வந்தால் சாட்சிகளை கலைக்க நேரிடும் என்று திவ்யா தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்று அம்பத்தூர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரணை செய்தனர். இரு தரப்பு மனுவையும் விசாரித்த நீதிபதி அர்னவ் ஜாமின் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் அர்னவ் மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

  Next Story
  ×