என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சிரஞ்சீவி மற்றும் ரவிதேஜா இணைந்து நடிக்கும் படத்தை பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார்.
    • இப்படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'காட்ஃபாதர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து சீரஞ்சீவியின் 154-வது படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

    வால்டேர் வீரய்யா

    வால்டேர் வீரய்யா

     

    இந்நிலையில் ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக சிரஞ்சீவியின் 154 படத்திற்கு 'வால்டேர் வீரய்யா' என பெயரிடப்பட்டுள்ளதாக டைட்டில் டீசரை வெளியிட்டு படக்குழு உற்சாகப்படுத்தியுள்ளனர். இந்த டீசர் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

    மேலும் 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகவுள்ளதா அறிவிக்கப்பட்டுள்ளது.



    • பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கார்கில் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.
    • இதயம் இதயம் துடிக்கின்றதே, எங்கும் உன்போல் பாசம் இல்லை, ஆதலால் உன் மடி தேடினேன். தாய் மண்ணே வணக்கம்" என்று ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கார்கில் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள், 'சுராங்கனி' என்ற பாடலை பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர். இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இந்த அற்புதமான செயலால் நம்மை வியக்க வைத்தனர்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.

    ஏ.ஆர்.ரகுமான்

    ஏ.ஆர்.ரகுமான்

     

    மேலும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த தாய் மண்ணே வணக்கம் பாடலின் இந்தி பதிப்பான மா துஜே சலாம் பாடலை ராணுவ வீரர்கள் பாடினர். இதனை பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடியின் இந்த பதிவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரீ-டுவிட் செய்துள்ளார். அதில், இதயம் இதயம் துடிக்கின்றதே, எங்கும் உன்போல் பாசம் இல்லை, ஆதலால் உன் மடி தேடினேன். தாய் மண்ணே வணக்கம்" என்று கூறியுள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் தனது இரட்டை குழந்தைகளுடன் தலை தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • அப்போது அனைவருக்கும் வீடியோ பதிவின் மூலம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டனர். சமீபத்தில் இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது என சமூக வலைத்தளங்களில் அறிவித்து பெரும் அதிர்வலையை கிளப்பினர். பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே இந்த ஜோடி இந்த வருடம் தலை தீபாவளியை கொண்டாடினர்.

     

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    இந்நிலையில் நேற்று தனது இரட்டை குழந்தைகளுடன் தலை தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர். இதுதொடர்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் குழந்தைகளை ஏந்தியப்படி தீபாவளி வாழ்த்தை தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • தீபாவளி திருநாள் நேற்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    • நடிகர் ரஜினிகாந்த் தனது பேரக் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையே புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோலிவுட் நட்சத்திரங்களும் குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடினர்.

     

    பேரக்குழந்தைகளுடன் ரஜினிகாந்த்

    பேரக்குழந்தைகளுடன் ரஜினிகாந்த்

    அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பேரக்குழந்தைகளுடன் தீபாவளியை ஆனந்தமாக கொண்டாடினார். தன்னுடைய இரு பிள்ளைகளுக்கும் காலில் மஞ்சள், சந்தனம், குங்குமத்தை ஐஸ்வர்யா இடுகிறார். அவர்களின் பின்னால் வெள்ளை நிற ஜிப்பா உடையில் ரஜினிகாந்த் நின்றுகொண்டு பேரக்குழந்தைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
    • இந்த தம்பதியினருக்கு தீபாவளி தினத்தில் பெண் குழந்தை பிறந்தது.

    தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகி பாபு. இவர் நடிப்பில் வெளியான காக்கிச் சட்டை, வேதாளம், ரெமோ, சர்கார், விஸ்வாசம், கூர்கா உள்ளிட்ட படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திக்கேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

     

    மஞ்சு பார்கவி - யோகிபாபு 

    மஞ்சு பார்கவி - யோகிபாபு 

    யோகிபாபு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தீபாவளி தினமான நேற்று இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை ராதிகா.
    • இவர் நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ராதிகா சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் 'கொலை', 'லவ் டுடே', 'சந்திரமுகி -2' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.


    சிவகுமார் குடும்பத்துடன் ராதிகா

    இந்நிலையில், ராதிகா சரத்குமார் தீபாவளி பண்டிகையை நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இவர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி மற்றும் அவரது மனைவி ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நேற்று மாலை தீபாவளியை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் ராதிகா பகிர்ந்துள்ளார்.




    • 90-களின் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டாக குத்துச்சண்டை இருந்தது.
    • இதில் ராக், ஜான்சீனா போன்ற வீரர்கள் மிகவும் பிரபலமாக இருந்தார்கள்.

    90 கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சியாக குத்துச்சண்டை இருந்தது. இதில் ராக், ஜான் சீனா போன்ற வீரர்கள் மிகவும் பிரபலமானவர்களாக இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை டபிள்யூ டபிள்யூ ஈ சேனல் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தது.


    டபிள்யூ டபிள்யூ ஈ போஸ்டர் 

    இந்நிலையில், இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக டபிள்யூ டபிள்யூ ஈ தங்களது சமூக வலைதளத்தில் 'அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்' என்று தமிழில் பதிவிட்டுள்ளது. இந்த பதிவு ரசிகர்களை கவந்து வருகிறது

    • பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சியில் இருந்து சாந்தி வெளியேறினார்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, ராபர்ட் மாஸ்டர், ஷாந்தி, ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ஷிரினா, ஆயிஷா, சிவன் கணேசன், அசல், தனலட்சுமி, நிவா, குயின்சி, கதிரவன் உள்ளிட்ட 20 நபர்கள் வீட்டின் உள்ளே சென்றனர். கடந்த வாரம் நடிகை மைனா வீட்டினுள் நுழைந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று இன்றுடன் 15 நாட்களை நெருங்கியுள்ளது.


    கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்களிடம் வரிசையாக கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த கேள்விகளை நடிகை மைனா கேட்கிறார்.


    அப்போது இந்த வீட்டுக்கு தோரணம் மாதிரி இருப்பது யார் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கு அமுதவாணன் என்று மகேஸ்வரி பதிலளிக்கிறார். பின்னர் தொடர்ந்து பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. கடைசியாக தீப்பெட்டி மாதிரி கொளுத்தி போடுவது யாரு என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இதோடு இந்த புரோமோ முடிவடைகிறது. இதற்கு பதிலளித்தால் வீட்டில் பல பிரச்சினைகள் வெடிக்கும் என்று ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் 'டிரைவர் ஜமுனா'.
    • 'டிரைவர் ஜமுனா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


    டிரைவர் ஜமுனா போஸ்டர்

    இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா நடிக்கும் படம் 'யசோதா’.
    • இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

    இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    யசோதா

    திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது.


    யசோதா

    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'யசோதா' படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 5.36 மணிக்கு வெளியாகும் என படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘கலகத் தலைவன்’.
    • இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    கலகத் தலைவன்

    இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'கலகத் தலைவன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.


    கலகத் தலைவன்

    இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கடத்தல் கும்பலை பிடிக்க உதயநிதி முயற்சிப்பது போன்று உருவாகியுள்ள இந்த டீசர் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படித்தில் நடித்து வருகிறார்.
    • இவர் இன்று ரசிகர்களை சந்தித்த வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனது நடிப்பாலும் திறமையினாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் 'அண்ணாத்த' படத்திற்கு பிறகு தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ஜெயிலர்

    இவர் பொங்கல், தீபாவளி போன்ற முக்கிய தினங்களில் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், இன்று தீபாவளி பண்டிகையையொட்டி ரஜினியின் ரசிகர்கள் பலர் அவரை சந்திக்க சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு காலை 6.30 மணியிலிருந்து காத்திருந்தனர்.


    ரஜினிகாந்த்

    கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ரஜினி வீட்டில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    ×