'யசோதா' யாருன்னு தெரியும்ல.. சமந்தா படத்தின் அப்டேட்..

இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா நடிக்கும் படம் 'யசோதா’.இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
யசோதா
யசோதா
Published on

இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

யசோதா

திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது.

யசோதா

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'யசோதா' படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 5.36 மணிக்கு வெளியாகும் என படக்குழு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com