என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தீப்பெட்டி மாதிரி கொளுத்தி போடுவது யாரு..? அடுத்த பிரச்சினைக்கு தயாரான பிக்பாஸ் வீடு..
    X

    பிக்பாஸ் சீசன் 6

    தீப்பெட்டி மாதிரி கொளுத்தி போடுவது யாரு..? அடுத்த பிரச்சினைக்கு தயாரான பிக்பாஸ் வீடு..

    • பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இந்த நிகழ்ச்சியில் இருந்து சாந்தி வெளியேறினார்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, ராபர்ட் மாஸ்டர், ஷாந்தி, ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ஷிரினா, ஆயிஷா, சிவன் கணேசன், அசல், தனலட்சுமி, நிவா, குயின்சி, கதிரவன் உள்ளிட்ட 20 நபர்கள் வீட்டின் உள்ளே சென்றனர். கடந்த வாரம் நடிகை மைனா வீட்டினுள் நுழைந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று இன்றுடன் 15 நாட்களை நெருங்கியுள்ளது.


    கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்களிடம் வரிசையாக கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த கேள்விகளை நடிகை மைனா கேட்கிறார்.


    அப்போது இந்த வீட்டுக்கு தோரணம் மாதிரி இருப்பது யார் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கு அமுதவாணன் என்று மகேஸ்வரி பதிலளிக்கிறார். பின்னர் தொடர்ந்து பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. கடைசியாக தீப்பெட்டி மாதிரி கொளுத்தி போடுவது யாரு என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இதோடு இந்த புரோமோ முடிவடைகிறது. இதற்கு பதிலளித்தால் வீட்டில் பல பிரச்சினைகள் வெடிக்கும் என்று ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×