என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்யப்பட்டதாக நயன்தாரா தரப்பு விளக்கம் அளித்ததாக கூறப்பட்டது.
    • விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரம் நாளை அறிக்கை வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது.


    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 4 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.


    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    இதனிடையே காதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது, "நயன்தாரா விவகாரத்தில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறோம். அந்த குழு விசாரித்து கொண்டிருக்கிறார்கள். முழு அறிக்கை கிடைக்கபெற்ற பின்னர் எந்த மாதிரியான விதிமீறல் நடைபெற்றிருக்கிறது. விதிமீறலின் தன்மை சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா? என்று முழுவிவரமும் அறிவிக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

    மேலும், வாடகைதாய் விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறி இருப்பது அம்பலமாகியுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றால் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    இந்நிலையில், இன்று கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பான விசாரணைக்குழு அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சர்தார்'.
    • சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


    சர்தார்

    பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றிருந்தது. 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    உதயநிதியை சந்தித்த சர்தார் படக்குழு

    இந்நிலையில், படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி மற்றும் படக்குழு விநியோகிஸ்தர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

    • நித்யானந்தா பலருக்கு தர்ம ரட்சகர் விருது அறிவித்துள்ளார்.
    • தற்போது இவர் இயக்குனர் பேரரசுக்கு இந்த விருதை அறிவித்துள்ளார்.

    சாமியார் நித்யானந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையிலும் அவர் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் விஜயதசமியையொட்டி கைலாசாவில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோருக்கு விருது அறிவித்திருந்தார்.


    பேரரசு

    இதில் பா.ஜனதாவின் ஓ.பி.சி. அணி மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவாவுக்கு தர்ம ரட்சகர் விருதை நித்தியானந்தா அறிவித்தார். இந்து மதத்தின் புகழை ஊடகங்களில் தொடர்ந்து பரப்பி வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நித்யானந்தா தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அடுத்ததாக இந்த தர்ம ரட்சகர் விருது இயக்குனர் பேரரசிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நித்யானந்தா கூறுகையில், "உங்களுடைய இந்து மதப்பற்றும் இந்து மதத்திற்காக நீங்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதும் களம் காணுவதும் நீங்கள் செய்கின்ற மிகப்பெரும் பணிகளை நன்கு அறிவேன்.


    நித்யானந்தா

    உங்களுடைய எல்லா திரைப்படத்தின் தலைப்புகளுமே ஆன்மிக ஸ்தலங்களின் பெயர்களாக தான் இருக்கும். உங்களுடைய இந்து மதப்பணி மிகப்பெரிய பணி. அதற்காக தலைவணங்குகிறேன். உங்களோடு என்றும் தோல் கொடுத்து நிற்பேன். நானும் கைலாசமும் நீங்கள் செய்யும் இந்து மதப் பணிக்கு என்றும் உறுதுணையாக நிற்போம்." என்று கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    • இயக்குனர் ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் பனாரஸ்.
    • இந்த படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கன்னட திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்'. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார்.


    பனாரஸ் புரொமோஷன் நிகழ்ச்சி

    இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.


    பனாரஸ் புரொமோஷன் நிகழ்ச்சி

    இந்த படத்தை என் கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் தயாரித்திருக்கிறார். பனாரஸ் திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது. காசியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பனாரஸ் புரொமோஷன் நிகழ்ச்சி

    இதையடுத்து, 'பனாரஸ்' படக்குழு தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர்  ஜையீத் கான் பேசியதாவது, ''பனாரஸ்' படத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த படத்திற்காக நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். இயக்குனர் ஜெயதீர்த்தா எனக்காக ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம். ஒவ்வொருவரும் இந்த படத்தைப் பார்த்து என்னை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.

    • நடிகை லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘அன்னபூரணி’.
    • இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டனர்.

    அறிமுக இயக்குனர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா முதன்மை கதாபாத்திரல் நடிக்கும் படம் 'அன்னபூரணி'. இவர்களுடன் மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன், ராஜீவ் காந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். கோமளா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

    அன்னபூரணி படக்குழு

    பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை மையமாக வைத்து திரில்லர் வடிவில் உருவாகியுள்ள 'அன்னபூரணி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    அன்னபூரணி ஃபர்ஸ்ட் லுக்

    இந்த போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி இணைந்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர். மேலும், நடிகர் ஜெயம் ரவி, "எங்கெல்லாம் அன்பினாலும் அதிகாரத்தினாலும் ஒரு பெண் அடக்கப்படுகிறாளோ அங்கெல்லாம் ஓர் அன்னபூரணி தேவைப்படுகிறாள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டிலிருந்து சாந்தி வெளியேறினார்.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதில் தற்போது 19 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

     

    பிக்பாஸ் சீசன் 6 

    பிக்பாஸ் சீசன் 6 

     

    இந்நிலையில், இன்று வெளியான புரோமோவில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 19 பொம்மைகள் இடம்பெற்றிருக்கும் ஆனால் 18 பொம்மைகளை மட்டுமே போட்டியாளர்களால் எடுக்கப்பட்டு அந்த அறையில் வைக்கப்படும். மீதம் உள்ள ஒரு நபரின் பெயர் இடம்பெற்றிருக்கும் பொம்மை எடுக்க தவறினால் அந்த பொம்மையில் இருக்கும் நபர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றபடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    பிக்பாஸ் சீசன் 6 

    பிக்பாஸ் சீசன் 6 

     

    அப்போது ஜனனியின் பொம்மையை போட்டியாளர்கள் எடுக்க தவறவிட்டதால், அவர் கோவத்தில் என் கூட நல்ல மாதிரி பழகுனா எனக்கு கஷ்டமா இருக்கும். என்னை சண்டைக்கு இழுத்தா என்ன மாதிரி கெட்டவ இந்த உலகத்துல பாக்கவ முடியாது. என்ன மாதிரி அப்பாவியும் கிடையாது, என்ன மாதிரி கெட்டவளும் கிடையாது என்கிறார். இதனுடன் இந்த இரண்டாவது புரோமோ நிறைவடைகிறது.

    முதல் புரோமோவில் மணிகண்டனின் பொம்மையை போட்டியாளர்கள் எடுக்க தவறிவிட்டதால் அவர் கோபத்தில் கத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் சபரி - குரு சரவணன் இயக்கத்தில் ஹன்சிகா புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார்.

    தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 'சின்ன குஷ்பு' என்று அன்போடு அழைக்கப்பட்ட ஹன்சிகா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், தற்காலிகமாக சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.


    ஹன்சிகா

    சிறிய இடைவெளிக்குப் பிறகு 'மஹா' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனம் பெற்ற இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இயக்குனர் சபரி - குரு சரவணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். ஃபிலிம் வொர்க்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.


    கார்டியன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

    இந்நிலையில், இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு படக்குழு 'கார்டியன்' என தலைப்பு வைத்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.


    • கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பூர்ணா.
    • திருமணம் குறித்த வதந்திக்கு நடிகை பூர்ணா ஒரு புகைப்படத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

    தமிழில் 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. அதன்பின்னர் கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

     

    பூர்ணா

    பூர்ணா

    பூர்ணாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 'குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், எனது அடுத்த வாழ்க்கை பகுதிக்கு அடியெடுத்து வைக்கிறேன்' என்று அவர் தெரிவித்து இருந்தார்.

    பூர்ணா

    பூர்ணா

     

     சமீபத்தில் பூர்ணாவின் திருமணம் நின்று விட்டதாக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் பூர்ணா தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு "எப்போதும் என்னுடையவர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

     

    பூர்ணா - ஷானித் ஆசிப் அலி

    பூர்ணா - ஷானித் ஆசிப் அலி

    இந்நிலையில் பூர்ணா- ஷானித் ஆசிப் அலியை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளார். தனது திருமணம் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு, "சிறப்பு, நான் உலகின் மிக அழகான பெண்ணாக இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒரு நல்ல வாழ்க்கைத் துணையின் அனைத்து குணநலன்களையும் பெறாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒருபோதும் என்னைக் குறைவாக உணரவில்லை.

    பூர்ணா - ஷானித் ஆசிப் அலி

    பூர்ணா - ஷானித் ஆசிப் அலி

     

    நான் யார் என்பதற்காக நீங்கள் என்னை நேசித்தீர்கள், என்னை மாற்ற முயற்சிக்கவில்லை. என்னில் உள்ள சிறந்ததை வெளிக்கொணர நானே உழைக்க என்னை ஊக்கப்படுத்தினீர். இன்று, நம் நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் நீங்களும் நானும் இந்த அற்புதமான ஒற்றுமை பயணத்தைத் தொடங்குகிறோம்.

     

    பூர்ணா - ஷானித் ஆசிப் அலி

    பூர்ணா - ஷானித் ஆசிப் அலி

    இது கொஞ்சம் அதிகம் என்று எனக்குத் தெரியும், இன்ப துன்பத்தில் உங்களுடன் இருப்பேன் என்றும் எப்போதும் உங்கள் அன்புக்கு ஆதரவளிப்பதாகவும் உறுதியளிக்கிறேன் என பூர்ணா பதிவிட்டுள்ளார்.

    • இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இடம் பொருள் ஏவல்’.
    • இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாக தயாராகி வருவதாக தகவல் வெளியானது.


    இடம் பொருள் ஏவல்

    இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தில் இடம்பெற்றுள்ள வைய்யம்பட்டி வல்லக்குட்டி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் சீனு ராமசாமி பதிவிட்டது, பறவைகள் எச்சந்தான் காடு எங்க பண்பாட்டில் காடேதான் வீடு என்று குறிப்பிட்டிருந்தார்.


    இடம் பொருள் ஏவல்

    இதைத்தொடர்ந்து சமீபத்தில் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் இடம் பொருள் ஏவல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'.
    • இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

    2021-ஆம் ஆண்டு இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பி மலையாளத்தில் உருவான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    தி கிரேட் இந்தியன் கிச்சன்

    இதையடுத்து இந்த படத்தை இயக்குனர் ஆர். கண்ணன் தமிழில் ரீமேக் செய்துள்ளார். இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். மேலும், நடிகர் ராகுல் ரவீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    தி கிரேட் இந்தியன் கிச்சன்

    இந்நிலையில் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஒரு பெண் ஆணாதிக்க சமூகத்திற்குள் சிக்கி தவிப்பதை எடுத்துரைப்பது போல் உருவாகியுள்ள இந்த டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.



    • தமிழில் திரைப்படத் தயாரிப்பில் களம் இறங்கிய இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திரா சிங் தோனி.
    • தோனி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் முதல் படத்தை தமிழில் தயாரிக்கின்றனர்.

    இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'தோனி என்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்நிறுவனம் மூலம் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் இப்படம் விரைவில் தொடங்குகிறது.

    இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது. இதற்கான பல கட்ட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான 'ரோர் ஆஃப் தி லயன்' எனும் ஆவணப் படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. 'வுமன்'ஸ் டே அவுட்' என்ற பெயரில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கிறது.

    தோனி என்டர்டெயின்மெண்ட்

    தோனி என்டர்டெயின்மெண்ட்

     

    இவர்களின் முதல் திரைப்படத்தை 'அதர்வா- தி ஆர்ஜின்' எனும் கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். தமிழில் தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கும் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில், ''சாக்‌ஷி தோனி எழுதிய கதையின் கருவைப் படிக்கும்போதே இதன் தனித்துவத்தை என்னால் உணரமுடிந்தது. புத்தம் புதிதாய் இருந்த இந்த கதை குடும்பங்களை மகிழ்வூட்டி, சிரிக்கவைத்து சிந்திக்கவைக்கும் என்று நம்பினேன். இந்தக் கருவைத் திரைக்கதையாக்கி திரைப்படமாக்கும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கியதைப் பெருமையாகக் கருதுகிறேன். இந்தப் பயணத்தில் பங்கேற்பதில் ஒட்டுமொத்தக் குழுவும் முழு ஆர்வத்தில் இணைந்துள்ளது. ஒரு சிறந்த திரைப்படத்தை மக்களுக்குக் கொடுக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையில் துளிர்க்கும் ஆர்வம் அது" என்று ரமேஷ் தமிழ்மணி கூறியுள்ளார்.

    இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

    • கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்யப்பட்டதாக நயன்தாரா தரப்பு விளக்கம் அளித்ததாக கூறப்பட்டது.
    • விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரம் ஓரிரு நாளில் அறிக்கை வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது.

     

    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 4 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர்.

     

    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    இதையடுத்து விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    நயன்தாரா-விக்னேஷ் சிவன்

     

    இதனிடையே காதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது, "நயன்தாரா விவகாரத்தில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறோம். அந்த குழு விசாரித்து கொண்டிருக்கிறார்கள். முழு அறிக்கை கிடைக்கபெற்ற பின்னர் எந்த மாதிரியான விதிமீறல் நடைபெற்றிருக்கிறது. விதிமீறலின் தன்மை சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா? என்று முழுவிவரமும் அறிவிக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

     

    இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன்

    இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் ஓரிரு நாளில் அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாடகைதாய் விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று சுகாதாரத்துறை விசாரணை நடத்தவுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறி இருப்பது அம்பலமாகியுள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றால் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று திபாவளியன்று இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×