வெளியானது இயக்குனர் சீனுராமசாமி படத்தின் டிரைலர்

இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இடம் பொருள் ஏவல்’. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சீனுராமசாமி
சீனுராமசாமி
Published on

கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாக தயாராகி வருவதாக தகவல் வெளியானது.

இடம் பொருள் ஏவல்

இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தில் இடம்பெற்றுள்ள வைய்யம்பட்டி வல்லக்குட்டி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் சீனு ராமசாமி பதிவிட்டது, பறவைகள் எச்சந்தான் காடு எங்க பண்பாட்டில் காடேதான் வீடு என்று குறிப்பிட்டிருந்தார்.

இடம் பொருள் ஏவல்

இதைத்தொடர்ந்து சமீபத்தில் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் இடம் பொருள் ஏவல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com