என் மலர்
சினிமா செய்திகள்
- பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சர்தார்'.
- இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சர்தார்
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை ரஜிஷா விஜயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சர்தார்
அதில், "என்ன ஒரு அருமையான பயணம் மித்ரன் சார். இரண்டு வருடங்களுக்கும் மேலான உங்களின் கடின உழைப்பு இன்று உச்சத்தை எட்டியுள்ளது. அனைத்து பாராட்டுக்களுக்கும் மேலும் பலவற்றிற்கும் நீங்கள் தகுதியானவர். என்னை நம்பியதற்கு நன்றி." என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு கமெண்ட் செய்துள்ள நடிகை லைலா, "பி.எஸ்.மித்ரன் அனைத்து வெற்றிகளுக்கும் தகுதியானவர். அவர் ஒரு ராக்ஸ்டார்" என்று பதிவிட்டுள்ளார்.
- தொலைக்காட்சி மற்றும் மேடைப்பேச்சு நட்சத்திரமான தமிழ்ப்பேச்சு ராஜ்மோகன் புதிய படத்தை இயக்குகிறார்.
- இப்படத்தை ரோமியோ பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் பிளாக் ஷீப் ஊடக குழுவினரும் இணைந்து வழங்கவுள்ளது.
யூடியூப் சேனலாகத் தொடங்கி இன்று தங்களுக்கென ஒரு சேட்டிலைட் டிவி, ஓடிடி என வளர்ந்து நிற்கும் பிளாக் ஷீப் இளைஞர் பட்டாளத்தின் மற்றுமொரு மைல் கல்லாய் பள்ளிக்கூட பருவத்தை மையமாக வைத்து புதிய திரைப்படத்தை உருவாக்கவுள்ளனர். இதனை ரோமியோ பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் பிளாக் ஷீப் ஊடக குழுவினரும் இணைந்து வழங்கவுள்ளது.

பிளாக் ஷீப்
பிரபல டிஜிட்டல், தொலைக்காட்சி மற்றும் மேடைப்பேச்சு நட்சத்திரமான தமிழ்ப்பேச்சு ராஜ்மோகன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். 90ஸ் கிட்ஸ், 2k கிட்ஸ் என அனைவருக்கும் பிடித்த அழகான பள்ளிக்கூடத் திரைப்படமாக அடுத்த கோடைக்கு இப்படம் திரைக்கு வரவுள்ளது. இதன் படப்பிடிப்பு பணிகள் டிசம்பர் 12ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- காந்தாரா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
- இந்த படம் குறித்து நடிகர் ரஜினி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்ம கதையை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் காந்தாரா. இப்படம் கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு பணிகளை மேற்கொண்டது.

காந்தாரா
அதன்படி, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15-ந்தேதி காந்தாரா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றது. மேலும் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காந்தாரா
இந்நிலையில், காந்தாரா திரைப்படம் பார்த்த நடிகர் ரஜினி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தெரிந்தை விட தெரியாதது தான் அதிகம் என்பதை இதை விட சிறப்பாக யாராலும் சினிமாவில் சொல்ல முடியாது. எழுத்தாளர், இயக்குனர், நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டுகள். இந்திய சினிமாவில் தலைச்சிறந்த படைப்பை கொடுத்த படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
"The unknown is more than the known" no one could have said this better in cinema than @hombalefilms #KantaraMovie you gave me goosebumps @shetty_rishab Rishab hats off to you as a writer,director and actor.Congrats to the whole cast and crew of this masterpiece in indian cinema
— Rajinikanth (@rajinikanth) October 26, 2022
- இயக்குனர் யான் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “21 கிராம்ஸ் பிலாசபி”.
- இந்த படத்தின் நாயகன் மோகணேஷ் சிறந்த நடிகருக்காக 7 விருதுகளை வென்றுள்ளார்.
இயக்குனர் யான் சசி இயக்கத்தில் அறிமுக நடிகர் மோகணேஷ், பூ ராமு, ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் "21 கிராம்ஸ் பிலாசபி". இந்த உலகில் எல்லாவற்றையும் விட ஒரு உயிரின் மதிப்பே உயர்ந்தது மிக முக்கியமானது. ஒருவரின் உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை அவுராஸ் பிக்சர்ஸ் மற்றும் கல்ட் ஸ்குவாட் ஃபிலிம் இணைந்து தயாரித்துள்ளது.

21 கிராம்ஸ் பிலாசபி
சவுந்தர்ராஜன், அன்பு டென்னிஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு விஜய் சித்தார்த் இசையமைத்துள்ளார். 52 நிமிடங்கள் ஓடும் இந்தப்படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்படவிழா, தாகூர் சர்வதேச திரைப்படவிழா, சிங்கப்பூர் சர்வதேச திரைப்படவிழா, ரோம், டோக்கியோ, அமெரிக்கன் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்படவிழா என உலகம் முழுவதும் இதுவரை 24 விருதுகளை இப்படம் வென்றுள்ளது.

மோகணேஷ்
மேலும், அறிமுக நடிகர் மோகணேஷ் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல சர்வதேச திரைவிழாக்களில் சிறந்த நடிகருக்கான 7 விருதுகளை வென்றுள்ளார். "21 கிராம்ஸ் பிலாசபி" திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ஏஜென்ட் கண்ணாயிரம்.
- இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏ1, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

சந்தானம்
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் சந்தானத்தின் பிறந்தநாளன்று ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

ஏஜென்ட் கண்ணாயிரம்
இந்நிலையில் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'சர்தார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சர்தார்
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சர்தார் - கார்த்தி
இந்நிலையில் சர்தார் படத்தின் வெற்றியைத் கொண்டாடும் வகையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது 'கைதி 2' எப்பொழுது வரும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அடுத்த வருடம் படத்திற்கான பணிகளை ஆரம்பிக்க உள்ளதாக கார்த்தி தெரிவித்தார்.

கார்த்தி
மேலும் லோகேஷ் கனகராஜ் தன் முந்தைய படத்தின் கதாபாத்திரங்களை அடுத்த படத்திலும் தொடர்ச்சியாக கொண்டு வருகிறார். அதேபோல் 'தளபதி 67' படத்தில் நீங்கள் இணைய வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, "அது தெரியவில்லை. அது எளிதும் கிடையாது. நாம் ஆசைப்படலாம். இரண்டு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் வேறு. அது தயாரிப்பாளர்கள் கையில் தான் இருக்கிறது" என்றார்.
- விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இப்படம் வருகிற சங்கராந்திக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

வாரிசு
இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கையில் கேமராவுடன் விஜய் படுமாஸாக நடந்து வருவது போன்ற புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வாரிசு
மேலும் 2011-ம் ஆண்டு வெளியான ஒரு தனியார் விளம்பர படத்தில் நடித்தபோது இருந்த விஜய் ஒரு சிறிய மாற்றம் கூட இல்லாமல் இப்பொழுதும் அதே இளமையோடு இருப்பதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
- பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டிலிருந்து சாந்தி வெளியேறினார்.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதில் தற்போது 19 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6
நேற்றைய பிக்பாசில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் மொத்தம் 19 பொம்மைகள் இடம்பெற்றிருக்கும் ஆனால் 18 பொம்மைகளை மட்டுமே போட்டியாளர்களால் எடுக்கப்பட்டு அந்த அறையில் வைக்கப்படும். மீதம் உள்ள ஒரு நபரின் பெயர் இடம்பெற்றிருக்கும் பொம்மை எடுக்க தவறினால் அந்த பொம்மையில் இருக்கும் நபர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றபடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 6
இந்த டாஸ்கில் பல விதமான சண்டைகள் உருவாகி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்கின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில், அந்த டாஸ்கின்போது போட்டியாளர்களை தனலட்சுமி தள்ளிவிடுகிறார். இதனை கோபத்துடன் கேள்வி எழுப்பும் அசீம், தனலட்சுமியிடம் ஓரு பொண்ணு தான நீயும்.. அறிவுங்குறது கொஞ்சம் கூட கிடையாதா? என்று கேட்பதோடு புரோமோ முடிவடைகிறது. இந்த டாஸ்கால் பிக்பாஸ் வீடு பரபரப்பான சூழலில் உள்ளது.
- தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் சாக்ஷி அகர்வால்.
- சாக்ஷி அகர்வால் தமிழில் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
தமிழில் ரஜினிகாந்துடன் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பட வாய்ப்புக்காக சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிடுவதாகவும் விமர்சனம் எழும்பியது.

சாக்ஷி அகர்வால்
இதுகுறித்து சாக்ஷி அகர்வால் அளித்துள்ள பேட்டியில், ''நான் தற்போது 'பஹிரா', 'நான் கடவுள் இல்லை' என்ற இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளேன். 'கெஸ்ட்-சாப்டர் 2' எனும் திகில் கதையில் நாயகியாக நடித்து வருகிறேன். அறிமுக இயக்குனர் விக்கி இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் சந்தோஷ் பிரதாப்புக்கு ஜோடியாகவும், 'கந்தகோட்டை' படத்தை இயக்கிய சக்தி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத இரண்டு படங்களிலும் நடிக்கிறேன். இரண்டு மலையாள படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன்.

சாக்ஷி அகர்வால்
பட வாய்ப்பிற்காக சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடவில்லை. என்னுடைய சமூக வலைதள பக்கத்தை கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் பின்தொடர்கிறார்கள். இவர்களுடனான உறவையும், நட்பையும் ஆரோக்கியமாக பேணுவதற்கு புகைப்படங்களை பதிவிடுகிறேன். தொடர்ந்து சமூகம் குறித்த ஆக்கபூர்வமான விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்'' என்றார்.
- கார்த்தி நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான சர்தார் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என நடிகர் கார்த்தி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கார்த்தி நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான சர்தார் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கார்த்தி போலீஸ் அதிகாரியாகவும் ராணுவ உளவாளியாகவும் இரு வேடங்களில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ராஷிகன்னா நடித்துள்ளார். ஏற்கனவே கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து வந்த விருமன், பொன்னியின் செல்வன் படங்கள் வெற்றி பெற்ற நிலையில் 3-வது படத்துக்கும் வரவேற்பு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

சர்தார்
இதனால் சர்தார் 2-ம் பாகம் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. இதுகுறித்து கார்த்தி அளித்துள்ள பேட்டியில், ''சர்தார் படம் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தினர். சமூக வலைத்தளங்களிலும் 2-ம் பாகம் எடுக்குபடி ரசிகர்கள் வேண்டினர். எனவே சர்தார் 2-ம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளோம்'' என்றார். இது கார்த்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கார்த்தியின் கைதி படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ''மாவீரன்''.
- இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
'டாக்டர்', 'டான்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படம் மாவீரன். இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர்.

மாவீரன்
இதற்கான அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாவீரன்' திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

மாவீரன்
மேலும், சிவகார்த்திகேயன் மற்றும் மிஷ்கின் இருவருக்குமான காட்சிகள் விரைவில் படமாக்கப்படவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
- பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இதிலிருந்து ஜி.பி.முத்து தாமாக முன் வந்து வெளியேறினார்.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

ஜி.பி.முத்து
இது அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிக்பாஸ் 6-வது சீசனின் வெற்றியாளர் ஜி.பி.முத்து தான் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது அவர் வீட்டை விட்டு வெளியேறியது அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இருந்தும் ஜி.பி.முத்து வைல்டு கார்டு மூலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சீனுராமசாமி
இந்நிலையில், போட்டியாளர் ஜி.பி.முத்து வெளியேறியது குறித்து இயக்குனர் சீனுராமசாமி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளன், அதன் வருமானம் வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு தன் மகனுக்காக புகழ் வாய்ந்த சபையில் உலகறிந்த நடிகர் கேட்டும் கேளாமல் பிக்பாஸ் சீசன் ஆறிலிருந்து விடைபெற்ற தமிழ்மகன் ஜிபி முத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன்" என பதிவிட்டுள்ளார்.தற்போது பிக்பாஸ் வீட்டினுள் 19 நபர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற
— Dr.Seenu Ramasamy (@seenuramasamy) October 24, 2022
தகுதியான
ஒரு போட்டியாளன்,
அதன் வருமானம்
வெகுமானம்
யாவற்றையும்
பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு
தன் மகனுக்காக
புகழ் வாய்ந்த சபையில்
உலகறிந்த நடிகர் கேட்டும்
கேளாமல் #bigbosstamil6 லிருந்து
விடைபெற்ற
தமிழ்மகன்#GPமுத்து தான் தீபாவளியின்
வெற்றி நாயகன் 💐@ikamalhaasan pic.twitter.com/aKDpK8vKQH






