யூடியூபர்ஸ் கூட்டணியில் புதிய படம்- தமிழ்ப்பேச்சு ராஜ்மோகன் இயக்குகிறார்

தொலைக்காட்சி மற்றும் மேடைப்பேச்சு நட்சத்திரமான தமிழ்ப்பேச்சு ராஜ்மோகன் புதிய படத்தை இயக்குகிறார்.இப்படத்தை ரோமியோ பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் பிளாக் ஷீப் ஊடக குழுவினரும் இணைந்து வழங்கவுள்ளது.
பிளாக் ஷீப்
பிளாக் ஷீப்
Published on

யூடியூப் சேனலாகத் தொடங்கி இன்று தங்களுக்கென ஒரு சேட்டிலைட் டிவி, ஓடிடி என வளர்ந்து நிற்கும் பிளாக் ஷீப் இளைஞர் பட்டாளத்தின் மற்றுமொரு மைல் கல்லாய் பள்ளிக்கூட பருவத்தை மையமாக வைத்து புதிய திரைப்படத்தை உருவாக்கவுள்ளனர். இதனை ரோமியோ பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் பிளாக் ஷீப் ஊடக குழுவினரும் இணைந்து வழங்கவுள்ளது.

பிளாக் ஷீப்
பிளாக் ஷீப்

பிளாக் ஷீப்

பிரபல டிஜிட்டல், தொலைக்காட்சி மற்றும் மேடைப்பேச்சு நட்சத்திரமான தமிழ்ப்பேச்சு ராஜ்மோகன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். 90ஸ் கிட்ஸ், 2k கிட்ஸ் என அனைவருக்கும் பிடித்த அழகான பள்ளிக்கூடத் திரைப்படமாக அடுத்த கோடைக்கு இப்படம் திரைக்கு வரவுள்ளது. இதன் படப்பிடிப்பு பணிகள் டிசம்பர் 12ஆம் தேதி தொடங்க உள்ளது.

இதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com