என் மலர்
சினிமா செய்திகள்
- தமிழில் திரைப்படத் தயாரிப்பில் களம் இறங்கிய இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திரா சிங் தோனி.
- தோனி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் உருவாகும் முதல் படத்தில் நடிக்கும் கதாநாயகன் குறித்த புதிய தகவல்.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'தோனி என்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்நிறுவனம் மூலம் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் இப்படம் விரைவில் தொடங்குகிறது. காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகவுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

தோனி என்டர்டெயின்மெண்ட்
இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க விஜய், அஜித்குமார், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பேசி வருவதாக தகவல் பரவியது. பின்னர் அது வதந்தி என்று தெரிய வந்தது. இந்நிலையில் தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனனிடம் பேசி வருவதாகவும் நாயகன், நாயகி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஹரிஷ் கல்யாண்
சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், பொறியாளன், பியார் பிரேமா காதல், கசட தபற உள்ளிட்ட படங்களில் ஹரிஷ் கல்யாண் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நித்தம் ஒரு வானம்'.
- இப்படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு 'ஓ மை கடவுளே' திருப்புமுனை படமாக அமைந்து. தற்போது 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ரிதுவர்மா, அனுபமா பாலமுரளி, ஷிவாத்மிகா ஆகிய 3 கதாநாயகிகள் உள்ளனர். இப்படத்தை ரா.கார்த்திக் இயக்கியுள்ளார்.

நித்தம் ஒரு வானம்
அசோக் செல்வன் அளித்துள்ள பேட்டியில், ''நான் காதல் கதையம்சம் உள்ள படங்களில் நிறைய நடித்து விட்டேன். எனவே காதல் படங்களில் நடிப்பதை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தேன். இந்த நிலையில் நித்தம் ஒரு வானம் கதையை சொன்னதும் பிடித்துப்போனதால் ஒப்புக்கொண்டேன். இதில் 3 கதைகள் மற்றும் எனக்கு வித்தியாசமான 3 தோற்றங்கள் உள்ளன. இந்த படம் பார்ப்பவர்களை சந்தோஷப்படுத்தும்.

நித்தம் ஒரு வானம்
எனக்கு கொங்கு மண்டல மக்கள் பேசும் மொழி சாயலில் பேசி நடிக்க ஆர்வம் இருந்தது. அது இந்த படத்தில் நிறைவேறி உள்ளது. எனது படங்களில் 2 அல்லது 3 கதாநாயகிகள் இருந்தால்தான் நடிப்பேன் என்று இயக்குனரை நான் நிர்ப்பந்திப்பதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. அது தானாக அமைந்துவிடுகிறது. ஓ மை கடவுளே படத்தின் 2-ம் பாகத்தை வாய்ப்பு அமையும்போது எடுப்போம்" என்றார்.
- காந்தாரா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
- இந்த படம் குறித்து நடிகர் ரஜினி சமூக வலைதளத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் வரவேற்பை பெற்றுள்ளது. ரூ.17 கோடி செலவில் தயாரான இந்த படம் இந்தியா முழுவதும் இதுவரை ரூ.170 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது.

காந்தாரா
கே.ஜி.எப் படத்துக்கு பிறகு இந்திய அளவில் அதிகம் பேசப்படும் கன்னட படமாக காந்தாரா மாறி உள்ளது. இப்படத்தை ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர். சில தின்ங்களுக்கு முன்பு இந்த படம் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் மீது இந்து அமைப்பினர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

காந்தாரா
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் 'வராஹ ரூபம்' பாடல் தங்களின் 'நவரசம்' ஆல்பமில் இருந்து திருடப்பட்டுள்ளதாக தைக்குடம் இசைக்குழுவினரின் சமூக வலைதள பக்கத்தில் குற்றம் சாட்டினர். மேலும் இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது.
மத்திய பிரதேச மாநிலத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக விளங்கிய வைஷாலி தாக்கருக்கு சமீபத்தில் திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பானது. அதன்பின்னர் முன்னாள் காதலன் தன்னை துன்புறுத்தியதாக வைஷாலி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

வைஷாலி தாக்கர்
முன்னாள் காதலன் ராகுல் என்பதும், அவர் பக்கத்து வீட்டில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. வைஷாலி தூக்கில் தொங்கியதும் தப்பி ஓடிய ராகுலை பல்வேறு இடங்களில் தேடி போலீசார் கைது செய்தனர். அவரது மனைவி தலைமறைவாகி விட்டார்.

வைஷாலி தாக்கர் - ராகுல் நவ்லானி
இந்த நிலையில் தற்கொலைக்கான காரணத்தை வைஷாலியின் நெருங்கிய நண்பரான நிஷாந்த் சிங் மல்கானி என்பவர் வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறும்போது, ''வைஷாலியுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி ராகுல் மிரட்டியுள்ளார். உனக்கு திருமணமானதும் என்னோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களை உனது கணவரிடம் காட்டுவேன் என்று கூறி உள்ளார். வைஷாலியை எங்கேயும் நகரவிடமால் சித்ரவதை செய்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வைஷாலி உயிரை மாய்த்துள்ளார்" என்றார். இந்த சம்பவம் பரபரப்பாகி உள்ளது.
- சமீபத்தில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது சினேகன் பணமோசடி புகார் மனு அளித்தார்.
- சினேகன் அறக்கட்டளை பெயரில் பணமோசடி விவகாரத்தில் நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015-யிலிருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதையடுத்து இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஜெயலட்சுமி - சினேகன்
இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டை ஜெயலட்சுமி மறுத்தார். இந்நிலையில், சினேகன் அளித்த புகாரின்பேரில் சின்னத்திரை நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது 2 பிரிவுகளின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
- இந்த திரைப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன்
இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

பொன்னியின் செல்வன்
இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பாடல்கள் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "என்னுடைய அனுபவத்தில் பெஸ்ட் மியூசிக் ஆல்பம், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மணிரத்னம் சாரின் பொன்னியின் செல்வன் என்பதில் சந்தேகமே இல்லை. மிகச் சிறிய இடத்தில் கூட கவனம் செலுத்துவது பிரம்மிக்க வைக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
The best music album in my experience is with out doubt @arrahman and #maniratnam sir's ponniyin Selvan ! The attention to detail in even the minutest sounds is astounding!
— selvaraghavan (@selvaraghavan) October 26, 2022
- இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் நடிகர் கமல்ஹாசன், ராம்சரண் படத்தை இயக்கி வருகிறார்.
- இந்த படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்தியன்
இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆர்.சி.15
இதைத்தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம் சரண் நடிக்கும் ஆர்.சி.15 படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில், இந்த மாத இறுதியில் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் ஷங்கர் அடுத்த மாத இறுதியில் படப்பிடிப்பை முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர், ராம் சரண் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் அந்த படத்தின் பாடல் காட்சிகள் நியூசிலாந்தில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள படம் 'லவ் டுடே'.
- இந்த திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 'லவ் டுடே' படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

லவ் டுடே போஸ்டர்
இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லவ் டுடே' படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#Lovetoday In theatres from Nov 4th! pic.twitter.com/8EIPdVKc7F
— Pradeep Ranganathan (@pradeeponelife) October 26, 2022
- அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’.
- இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து வரும் படம் 'நித்தம் ஒரு வானம்'. இதில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

நித்தம் ஒரு வானம்
வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் மலையாளத்தில் 'ஆகாசம்' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் அனைவரையும் கவர்ந்தது.

நித்தம் ஒரு வானம்
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பாதி நீ பாதி நான்' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை நடிகர் ஹிப்ஹாப் ஆதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார். மிகவும் மெலோடியாக உருவாகியுள்ள இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
'நித்தம் ஒரு வானம்' திரைப்படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 'சர்தார்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
- இந்த படம் ஒரு படிப்பினை என்று நடிகர் சீமான் கூறியுள்ளார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சர்தார்
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

சர்தார்
இந்நிலையில், 'சர்தார்' திரைப்படம் பார்த்த நடிகர் சீமான், "இதுபடம் என்று சொல்ல முடியாது, இது ஒரு படிப்பினை. இந்தக் கருத்தை வலியுறுத்தி நான் பேசியிருக்கிறேன். தண்ணீர் மிகப்பெரிய வியாபாரப்பொருளாக மாற்றப்பட்டுள்ளது. உலக உயிர்களின் உயிர் உடைமையை சந்தைப்பொருளாக மாற்றியதிலிருந்து எவ்வளவு பெரிய பேராபத்தை நோக்கிய பயணித்துக்கொண்டிருக்கும் என்பதை புரிய வரும். இந்தப்படம் அதை மிகவும் ஆழமாக விளக்கிச்சொல்கிறது.

சர்தார்
மித்ரன் தரமான படத்தை உருவாக்கியிருக்கிறார். அவரிடம் சமூக பொறுப்புடன் ஒரு பார்வை இருக்கிறது. சர்தார் ஒரு சிறந்த படைப்பு'' என்று தெரிவித்துள்ளார்.
Words of appreciation from @SeemanOfficial for #Sardar - he calls it an important film for the society! 😎#Sardar2 🔥#SardarBlockbuster 💥@Karthi_Offl @Prince_Pictures @RedGiantMovies_ @Psmithran @gvprakash @ActressLaila @RaashiiKhanna @rajishavijayan @ChunkyThePanday pic.twitter.com/7QGn1sHMqD
— Prince Pictures (@Prince_Pictures) October 26, 2022
- நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.
- இவர்கள் இருவரும் 2016-ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்துள்ளனர்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 4 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியது. அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற பதிவு செய்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனிடையே காதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது, "நயன்தாரா விவகாரத்தில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்திருக்கிறோம். அந்த குழு விசாரித்து கொண்டிருக்கிறார்கள். முழு அறிக்கை கிடைக்கபெற்ற பின்னர் எந்த மாதிரியான விதிமீறல் நடைபெற்றிருக்கிறது. விதிமீறலின் தன்மை சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா? என்று முழுவிவரமும் அறிவிக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையின் படி, நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் முறையாக குழந்தை பெற்றுள்ளதாகவும் எந்தவொரு விதிமீறலிலும் அவர்கள் ஈடுபடவில்லை என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2016-ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்துள்ளனர். இது தொடர்பான சான்றிதழையும் சமர்ப்பித்துள்ளனர். இந்த சான்றிதழ் பத்திரப்பதிவு துறையின் சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'சர்தார்'.
- இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார். மேலும், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சர்தார்
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை ரஜிஷா விஜயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சர்தார்
அதில், "என்ன ஒரு அருமையான பயணம் மித்ரன் சார். இரண்டு வருடங்களுக்கும் மேலான உங்களின் கடின உழைப்பு இன்று உச்சத்தை எட்டியுள்ளது. அனைத்து பாராட்டுக்களுக்கும் மேலும் பலவற்றிற்கும் நீங்கள் தகுதியானவர். என்னை நம்பியதற்கு நன்றி." என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு கமெண்ட் செய்துள்ள நடிகை லைலா, "பி.எஸ்.மித்ரன் அனைத்து வெற்றிகளுக்கும் தகுதியானவர். அவர் ஒரு ராக்ஸ்டார்" என்று பதிவிட்டுள்ளார்.






