என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
    • அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

    இதில் நடிகர் அர்ஜுன், இந்தி நடிகர் சஞ்சய்தத், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்துள்ளதையடுத்து இதில் இயக்குனர் மிஷ்கினும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.


    லோகேஷ் கனகராஜ்

    இந்நிலையில், 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் நிறைவுபெறவுள்ளதாகவும் அடுத்து சிறிது இடைவெளிக்கு பிறகு வரும் டிசம்பர் மாதம் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பினை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • பிக்பாஸ் 6-வது சீசன் 16 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
    • நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்கால் பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சினை வெடித்துள்ளது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்துநிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதில் தற்போது 19 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர்.


    பிக்பாஸ் சீசன் 6

    இதையடுத்து பிக்பாசில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் மொத்தம் 19 பொம்மைகள் இடம்பெற்றிருக்கும் ஆனால் 18 பொம்மைகளை மட்டுமே போட்டியாளர்களால் எடுக்கப்பட்டு அந்த அறையில் வைக்கப்படும். மீதம் உள்ள ஒரு நபரின் பெயர் இடம்பெற்றிருக்கும் பொம்மை எடுக்க தவறினால் அந்த பொம்மையில் இருக்கும் நபர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றபடுவார் என்று அறிவிக்கப்பட்டது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்த டாஸ்கில் பல விதமான சண்டைகள் உருவாகி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்கின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரோமோவில் அசீமை தனலட்சுமியிடம் மன்னிப்பு கேட்கும் படி விக்ரமன் கூறுகிறார். அதற்கு அசீம் முடியாது என்று மறுக்கிறார். இறுதியில் அசீமிடம் அமுதவாணன், விக்ரமன், தனலட்சுமி மூன்று பேரும்சண்டையிடுகின்றனர். அப்போது தனலட்சுமி நீங்கதான் எல்லாத்துக்கும் காரணம் என்று அசீமை குற்றம் சாட்டுகிறார். பின்னர்அமுதவாணன், அசீமிடம் உன்னை போன்று என்னால் கத்த முடியாது என்று கூறிவிட்டு செல்கிறார். இத்துடன் இந்த புரோமோ முடிவடைகிறது. மொத்தத்தில் பொம்மை டாஸ்கால் பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சினைகள் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




    • சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யசோதா’.
    • இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

    இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    யசோதா

    திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது.


    யசோதா

    இதையடுத்து 'யசோதா' படத்தின் டிரைலர் இன்று மாலை 5.36 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வாடகைத் தாய்க்கு ஏற்படும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவது போன்று உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.



    • அறிமுக இயக்குனர் ஆர். கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நித்தம் ஒரு வானம்'.
    • இப்படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து வரும் படம் 'நித்தம் ஒரு வானம்'. இதில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    நித்தம் ஒரு வானம்

    வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் மலையாளத்தில் 'ஆகாசம்' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. 'நித்தம் ஒரு வானம்' திரைப்படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    அபர்ணா பாலமுரளி - ஆர். கார்த்திக்

    இதையடுத்து 'நித்தம் ஒரு வானம்' நடிகை அபர்ணா பாலமுரளி மற்றும் இயக்குனர் கார்த்தி மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். 'நித்தம் ஒரு வானம்' படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், "கதைக்கு தேவை என்பதால் இதில் மூன்று கதாநாயகிகள் இருக்கிறார்கள். படம் பார்த்து முடித்த பின்பு தேவையற்றது எதையும் நினைக்கமாட்டீர்கள். கதாபாத்திரங்களாக மூன்று பேரும் அவர்களுக்கான செயல்திறனை செய்திருக்கிறார்கள். படம் முடித்து வெளிவரும் போது சர்ப்ரைஸாக வேறு ஒன்று இருக்கும்" என்று இயக்குனர் ஆர். கார்த்திக் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.




    • இயக்குனர் சிவ மாதவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் '3.6.9.'
    • இந்த படத்தில் நடிகர் பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இயக்குனர் சிவ மாதவ் இயக்கத்தில் பிஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம் '3.6.9.' இதில் இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்டே பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    3.6.9. இசை வெளியீட்டு விழா

     மாரிஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா இசையமைத்துள்ளார். '3.6.9.' திரைப்படம் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் பாக்கியராஜ் பேசியதாவது, ""நான் கொஞ்சம் பிடிவாதக்காரன் என்று இங்கே சொன்னார்கள். அது உண்மைதான். நல்ல விஷயத்திற்காக எப்போதும் பிடிவாதமாக தான் இருப்பேன்.


    3.6.9. இசை வெளியீட்டு விழா

    நான் கதை எழுதிய ஒரு கைதியின் டைரி படத்திற்காக நான் எழுதிய கிளைமாக்ஸ் வேறு. ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களாலும் எனது குருநாதர் பாரதிராஜாவுக்கு அது பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பதாலும் வேறு மாதிரியான கிளைமாக்ஸ் வைத்து படமாக்கி படமும் ஹிட்டானது. அந்த கிளைமாக்ஸும் பேசப்பட்டது. ஆனால் அதே படத்தை இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து நான் இயக்க முடிவு செய்தபோது படத்தின் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பலரும் என்னிடம் வந்து தமிழில் எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியையே இந்தியிலும் எடுங்கள்.


    3.6.9. இசை வெளியீட்டு விழா

    அமிதாப்பச்சனுக்கு அதுபோன்ற ஒரு கிளைமாக்ஸ் ரொம்பவே கம்பீரமாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் நான் எழுதி வைத்த கிளைமாக்ஸை படமாக்கியே தீர்வது என்று உறுதியாக இருந்தேன். இதுகுறித்து படத்தின் ஹீரோவான அமிதாப் பச்சனிடமே நேரடியாக பேசியபோது, அவர் என் எண்ணங்களை புரிந்துகொண்டு ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு காட்சியுடன் நீங்கள் மனதில் நினைத்து வைத்திருக்கும் ஒரு காட்சியை எப்படி ஒப்பிட முடியும் அதனால் நீங்கள் நினைத்தபடி விரும்பிய கிளைமாக்ஸ் காட்சியை எடுங்கள் என ஒப்புக்கொண்டார்.


    3.6.9. இசை வெளியீட்டு விழா

    அந்த காட்சியை படமாக்கி முடித்த பின்புதான் அனைவரும் அதை பார்த்து வியந்து பாராட்டினார்கள். அந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்து விட்டு என்னுடைய குருநாதர் பாரதிராஜா வியந்து போய் என்னைப் பாராட்டினார். அப்படி ஒரு நல்ல விஷயம் வரவேண்டும் என்பதற்காக பிடிவாதமாக இருப்பது தவறில்லை. அதேபோல யாருமே முழுதாக சினிமாவை கற்றுக்கொண்டு உள்ளே நுழைவதில்லை. பல விஷயங்களை இங்கே தான் தொடர்ந்து கற்றுக் கொள்ள வேண்டும். இந்த படத்தின் இயக்குனர் சிவ மாதவ் இந்த படத்தை தான் நினைத்தபடி மிக நேர்த்தியாக பிடிவாதமாக இருந்து செதுக்கி உள்ளார். அந்த வகையில் நிச்சயம் இந்த படம் அனைவராலும் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை" என்று கூறினார்.

    • விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படம் வருகிற சங்கராந்திக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    வாரிசு

    இந்நிலையில், 'வாரிசு' திரைப்படம் குறித்து இயக்குனர் வம்சி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், "இது பக்கா தமிழ் படம். 'தோழா' படம் பண்ணும்போது இரண்டு மொழிகளில் எடுத்தேன். கொரோனாவுக்கு பிறகு மொழிகளுக்கான தடை என்பது உடைக்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு மொழியில் எடுக்கப்பட்டு பல மொழிகளில் டப் செய்யப்படுகிறது. ஆனால், 'வாரிசு' முழுக்க தமிழ் விருந்து. குடும்ப படமாக இருந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு வேண்டிய அனைத்தும் இந்த படத்தில் இருக்கும்" என்று குறிப்பிட்டார்.

    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.
    • இதற்கான பணிகளில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    விஜய் - லோகேஷ் கனகராஜ்

     

    ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.

    மிஷ்கின்

    மிஷ்கின்

     

    இதில் நடிகர் அர்ஜுன், இந்தி நடிகர் சஞ்சய்தத், இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் இப்படத்தின் நான்காவது வில்லன் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் இதில் நான்காவது வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் மிஷ்கின் வில்லனாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா பாலிவுட்டில் பல படங்களை தயாரித்துள்ளார்.
    • இவரின் மீது அவரது மனைவி யாஷ்மின் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான கமல் கிஷோர் மிஸ்ரா 'சர்மா ஜி கி லக் கயி', 'தேஹாட்டி டிஸ்கோ', 'காலி பாலி' போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். இவர் மும்பை அந்தேரி பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். கமல் கிஷோர் மிஸ்ரா தான் வசிக்கும் கட்டடத்தின் கார் பார்க்கிங்கில் இருந்து காரை எடுக்கும் போது இவரின் மனைவி யாஷ்மின் இவரை தேடி கார்பார்க்கிங் பகுதிக்கு வந்துள்ளார்.


    கமல் கிஷோர் மிஸ்ரா

    அப்போது காரில் வேறு ஒரு பெண் இருப்பதை பார்த்த யாஷ்மின் தனது கணவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த மிஸ்ரா காருடன் வேகமாக புறப்பட முயன்ற போது மிஸ்ராவின் மனைவி காரில் அடிபட்டு கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் சம்பவ இடத்தில் இருந்து மிஸ்ரா காரில் தப்பிச்சென்றுவிட்டார்.


    கண்காணிப்பு கேமரா காட்சிகள்

    காயம் அடைந்த மிஸ்ராவின் மனைவி இது குறித்து அம்போலி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மிஸ்ரா மனைவி கார் இடித்து கீழே விழுவது தெளிவாக பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் கமல் கிஷோர் மிஸ்ரா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • காந்தாரா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தில் இடம்பெறும் 'வராஹ ரூபம்’ பாடல் தங்களின் 'நவரசம்' ஆல்பமில் இருந்து திருடப்பட்டுள்ளதாக தைக்குடம் இசைக்குழுவினரின் குற்றம் சாட்டினர்.

    ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியிட்டும் வரவேற்பை பெற்றது. ரூ.17 கோடி செலவில் தயாரான இந்த படம் இந்தியா முழுவதும் இதுவரை ரூ.170 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. கே.ஜி.எப் படத்துக்கு பிறகு இந்திய அளவில் அதிகம் பேசப்படும் கன்னட படமாக காந்தாரா மாறி உள்ளது. இப்படத்தை ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.

     

    இப்படத்தில் இடம்பெறும் 'வராஹ ரூபம்' பாடல் தங்களின் 'நவரசம்' ஆல்பமில் இருந்து திருடப்பட்டுள்ளதாக தைக்குடம் இசைக்குழுவினரின் சமூக வலைதள பக்கத்தில் குற்றம் சாட்டியது. மேலும் இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

    இந்நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு காந்தாரா படத்தின் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் "இரண்டு பாடல்களும் ஒரே ராகத்தில் இசையமைக்கப்பட்டுள்ளதால் ஒன்று போல் தோன்றலாம்" என மறுப்பு தெரிவித்துள்ளார். 

    • இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'வாரிசு'.
    • இப்படம் வருகிற சங்கராந்திக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


    வாரிசு

    இதைத்தொடர்ந்து கையில் கேமராவுடன் விஜய் படுமாஸாக நடந்து வருவது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் விஜய் ஒரு சிறிய மாற்றம் கூட இல்லாமல் இப்பொழுதும் அதே இளமையோடு இருப்பதாக பதிவிட்டு வந்தனர்.


    வாரிசு

    இந்நிலையில், வாரிசு படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், என்ன நண்பா ஹேப்பியா? இதில் உங்களுக்கு பிடித்த புகைப்படம் எது? என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்து வரும் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை தற்போது வைரலாக்கி வருகின்றனர்.


    • நடிகை அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள இணைய தொடர் "ஜான்ஸி".
    • இதனை இயக்குனர் திரு இயக்க நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ளார்.

    இயக்குனர் திரு இயக்கத்தில் நடிகை அஞ்சலி நடிப்பில் 10 எபிசோடுகளாக உருவாகியுள்ள திரில்லர் இணைய தொடர் "ஜான்ஸி". இப்படத்தை டிரைபல் ஹார்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ளார். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் இத்தொடரை கணேஷ் கார்த்திக் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார்.

    வாழ்வின் கடந்த கால நினைவுகளை மறந்து போன ஒரு பெண், கடந்த காலத்தின் பின்னிருக்கும் ரகசியங்களை தேடுவது போன்று இடம்பெற்றிருக்கும் இந்த தொடர் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

     

    ஜான்ஸி படக்குழு

    ஜான்ஸி படக்குழு

    இத்தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இதில் நடிகரும் தயாரிப்பாளருமான கிருஷ்ணா பேசியதாவது, இந்த வருடம் எனக்கு படம் எதுவும் வரவில்லை என்பதால் உங்களை சந்திக்க முடியவில்லை. ஆனால் அடுத்ததாக "பெல் பாட்டம்" வருகிறது. எனக்கு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பது கனவு. இது எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு. ஹாட்ஸ்டாரில் இந்த கதையை சொன்னவுடன் ஒப்புக்கொண்டார்கள்.

    ஜீகேயிடம் இதை பெரிய டைரக்டர் பண்ணினால் நல்லாருக்கும் என்றவுடன் ஜீகே ஒப்புக்கொண்டார். திருவிடம், ஜீகே ஒரு எபிஸோடாவது டைரக்ட் பண்ணணும் என்றேன். அவரும் பெருந்தன்மையாக ஓகே என்றார். அஞ்சலி போன்ற திறமையான நடிகர்களை பல மொழிகளிலும் இருந்து கூட்டி வந்திருக்கிறோம். நான் இதில் நடிக்கவில்லை எனக்கு எதாவது வாய்ப்பு கொடுங்க எனக் கேட்டேன். ஆனால் கடைசி வரை தரவில்லை. இந்த தொடர் மிக நன்றாக வந்துள்ளது. முக்கியமாக இத்தொடருக்கு பெரும் ஒத்துழைப்பு தந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார்க்கு நன்றி. இது எங்கள் மனதுக்கு பிடித்த படைப்பு, உங்களுக்கும் பிடிக்கும் நன்றி என்றார்.

    • சாலை விபத்துகள் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
    • இதையடுத்து புதிய மோட்டார் வாகன சட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்தது.

    நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி சாலைவிதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டது.

    அதன்படி ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.1000, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சென்றவர்களிடம் ரூ.5,000, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.15 ஆயிரம், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியவவர்களுக்கு ரூ.5 ஆயிரம், அதிவேகமாக கனரக வாகனங்கள் ஓட்டிய வர்களிடம் ரூ.4 ஆயிரம் என வசூலிக்கப்பட்டு வருகிறது.


    மோகன் ஜி

    இதனிடையே 'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி வாகன சட்டம் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை உயர்த்தியது போல பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு அபராத தொகையையும், சிறுவர்களுக்கு கூலிப் மற்றும் குட்கா விற்பனை செய்யும் கடைகாரர்களுக்கும் அபராதத்தை 10 மடங்கு உயர்த்தி அறிவிக்க முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் சார் அவர்களை கேட்டு கொள்கிறேன்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


    ×