என் மலர்
சினிமா செய்திகள்
- விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார்.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், 'வாரிசு' திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

வாரிசு போஸ்டர்
தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறும் வகையில் உருவாகியுள்ள இந்த போஸ்டரில் 'வாரிசு' திரைப்படம் சங்கராந்திக்கு வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்கள் இந்த போஸ்டரை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
మీకూ మీ కుటుంబసభ్యులు అందరికీ దీపావళి శుభకాంక్షలు 🧨
— Sri Venkateswara Creations (@SVC_official) October 24, 2022
Let's celebrate #Vaarasudu #Varisu in theaters for Sankranthi 2023 🔥#VarisuPongal#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @KarthikPalanidp @Cinemainmygenes @scolourpencils @vaishnavi141081 pic.twitter.com/va1NHcbBmN
- இயக்குனர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் 'சியான் 61'.
- இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார்.

தங்கலான்
இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தங்கலான் போஸ்டர்
அதன்படி, சியான் 61 படத்திற்கு 'தங்கலான்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ மற்றும் போஸ்டர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 'தங்கலான்' திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- 2019 ஆம் ஆண்டு ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர்.
- இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார்.
2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் டிரெண்டிங்கில் வந்தவர் நடிகை பிரியா வாரியர். சமூக வலைதளத்தில் மட்டும் இவரை பல லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

பிரியா வாரியர்
ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் பிரியா வாரியர் நடித்துள்ளார். பிரியா வாரியர் தொடர்சியாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

பிரியா வாரியர்
சமீபத்தில் இவர் சுற்றுலாவுக்காக பாங்காக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் கவர்ச்சி உடையில் படகு சவாரி செய்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் கடற்கரையில் கவர்ச்சி காட்டும் புதிய வீடியோவை பிரியா வாரியர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
- சூர்யா தற்போது வணங்கான் படத்திலும், வாடிவாசல் படத்திலும் நடித்து வருகிறார்.
- இதனிடையே சூர்யா ரசிகர்களை சந்தித்துள்ளார்.
சூர்யா படங்களுக்கு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் வரவேற்பு உள்ளதால் அவர் படங்களை அந்தந்த மாநில மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு, நல்ல வசூலும் பார்க்கிறார்கள். சூர்யா படங்கள் வெளியாகும் போதெல்லாம் அங்குள்ள ரசிகர்கள் தியேட்டர்களில் கொடி, தோரணங்கள் மற்றும் கட்-அவுட்கள் வைத்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ரசிகர்களை சந்தித்த சூர்யா
இந்தநிலையில் கர்நாடக ரசிகர்கள் சூர்யாவை சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். இதனை ஏற்று கர்நாடக ரசிகர்களை பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் சூர்யா சந்தித்தார். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இதில் கலந்து கொண்டனர். ரசிகர்களை சூர்யா சந்தித்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கிறார். சூரரை போற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்திலும் மீண்டும் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பர்ஹானா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.
- தற்போது இந்தி படமொன்றில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அருண் ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பர்ஹானா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தற்போது அதே கண்கள் படம் மூலம் பிரபலமான ரோகின் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
- பிக்பாஸ் தமிழ் சீசன்-6 சில தினங்களுக்கு முன்பு கோலாகலமாக தொடங்கியது.
- விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசன் இன்று 14 நாட்களை நெருங்கியுள்ளது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, ராபர்ட் மாஸ்டர், ஷாந்தி, ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ஷிரினா, ஆயிஷா, சிவன் கணேசன், அசல், தனலட்சுமி, நிவா, குயின்சி, கதிரவன் உள்ளிட்ட 20 நபர்கள் வீட்டின் உள்ளே சென்றனர். கடந்த வாரம் நடிகை மைனா வீட்டினுள் நுழைந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று இன்றுடன் 14 நாட்களை நெருங்கியுள்ளது.

ஜிபி முத்து
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், தனது மகனைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியவில்லை எனக்கூறியும் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இவரின் இந்த திடீர் முடிவால் அவருடைய ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
- சமீபத்தில் ஜாக்குலினுக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த உத்தரவிட்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி கடந்த மாதம் 26-ந்தேதி உத்தரவிடப்பட்டது.
- ரூ.200 கோடி மோசடி நடிகை ஜாக்குலினின் ஜாமீனை டெல்லி கோர்ட்டு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதவிர மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் நடித்து ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
அவருடன் தொடர்புடைய நடிகை லீனா மரியா பாலையும் டெல்லி போலீஸ் கைது செய்தது. இதற்கிடையே இதுதொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் செப்டம்பர் 26-ந்தேதி ஆஜராக பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
இந்நிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. ஜாக்குலினுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது வக்கீல் வாதிட்டார். இதை ஏற்ற கோர்ட்டு ரூ.50 ஆயிரம் செலுத்த உத்தரவிட்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி கடந்த மாதம் 26-ந்தேதி உத்தரவிட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அக்டோபர் 22-ந்தேதிக்கு (நேற்று) தள்ளிவைத்திருந்த நிலையில், ஜாக்குலினுக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை நவம்பர் 10-ந்தேதி வரை நீட்டித்து நேற்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- தமிழில் 'அன்பு', 'காதல் கிசுகிசு', 'அம்மா அப்பா செல்லம்', 'கலிங்கா', 'வீரம்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பாலா.
- பாலா 2-வது மனைவி எலிசபெத்தையும் பிரிந்து விட்டதாகவும், அவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் மலையாள ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பானது.
தமிழில் 'அன்பு' படம் மூலம் அறிமுகமான பாலா தொடர்ந்து 'காதல் கிசுகிசு', 'அம்மா அப்பா செல்லம்', 'கலிங்கா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வீரம் படத்தில் அஜித்குமாரின் தம்பிகளில் ஒருவராக நடித்து பிரபலமடைந்தார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். பாலாவுக்கு 2016-ம் ஆண்டு பாடகி அம்ருதாவுடன் திருமணமாகி விவாகரத்தில் முடிந்தது. பின்னர் டாக்டரான எலிசபெத்தை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

அஜித்துடன் பாலா
இந்நிலையில் எலிசபெத்தையும் பாலா பிரிந்து விட்டதாகவும், அவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் மலையாள ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பானது. இதற்கு பாலா சமூக வலைத்தளத்தில் நேரலையில் வந்து விளக்கம் அளித்தார். அவர் கூறும்போது, ''இது நிஜமாகவே வேதனை அளிக்கிறது. திருமணம் ஒருமுறை தோல்வியுற்றால், அதை சிந்திக்காமல் இருக்கலாம். ஆனால் இரண்டாவது முறை தோல்வியுற்றால் யோசிக்க ஆரம்பிக்கிறோம். என்னை இந்த நிலைக்குத் தள்ளிய ஊடகங்களுக்கு நன்றி. நீங்கள் வற்புறுத்தினாலும் நான் எலிசபெத்திடம் பேசமாட்டேன். எலிசபெத் என்னை விட சிறந்தவர். தயவு செய்து அவருக்கு கொஞ்சம் நிம்மதி கொடுங்கள். நான் மாறிக்கொள்கிறேன். இது என் வாழ்வில் மிகவும் வேதனையான நாட்கள். நான் எனக்காக இப்போது பேச முயற்சிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
- பா.இரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக விக்ரம் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
- இப்படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
'பொன்னியின் செல்வன்' படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளார்.

இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகும் என இயக்குனர் பா.இரஞ்சித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
- ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காந்தாரா.
- காந்தாரா படம் பற்றி கருத்து தெரிவித்த கன்னட நடிகர் சேத்தன் மீது இந்து மதஉணர்வை புண்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்ம கதையை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் காந்தாரா. இப்படம் கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு பணிகளை மேற்கொண்டது. அதன்படி, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15-ந்தேதி காந்தாரா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றது.
இப்படத்தின் இயக்குனரான ரிஷப் ஷெட்டி பேட்டி ஒன்றில் கூறும்போது, படத்தில் இடம் பெற்ற பூட்டா கோலா இந்து கலாசாரத்தின் ஒரு பகுதி என கூறினார். ஆனால், கன்னட நடிகர் சேத்தன் குமார் என்ற சேத்தன் அகிம்சா கூறும்போது, பூட்டா கோலா இந்து கலாசாரம் கிடையாது என தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டார். இதனை கண்டித்து பஜ்ரங்தள அமைப்பினர் குரல் கொடுத்தனர். மதஉணர்வுகளை புண்படுத்தி விட்டார் என்றும் கூறினர்.

சேத்தன்
இதனை தொடர்ந்து அந்த அமைப்பை சேர்ந்த ஷிவ குமார் என்பவர் சேத்தனுக்கு எதிராக ஷேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து, மக்களை தவறாக வழிநடத்துதல் என்ற பிரிவின் கீழ் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். விசாரணை அதிகாரி முன் ஆஜராக சேத்தனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதன்பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
ஒரு சில நாட்களுக்கு முன், ஐகோர்ட்டு நீதிபதி ஒருவருக்கு எதிராகவும் புண்படுத்தும் வகையில் சேத்தன் பதிவிட்டு உள்ளார் என கூறப்படுகிறது.
- அடுத்த மாதம் 20 முதல் 28 வரை கோவாவில் திரைப்பட விழா நடைபெறுகிறது.
- ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் உள்பட 5 படங்களும் தேர்வு.
மத்திய அரசின் தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20ந் தேதி முதல் 28ந் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை அம்சம் கொண்ட 25 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் தமிழில் ஞானவேல் இயக்கி சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம், எஸ்.கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல் மற்றும் ரா.வெங்கட் இயக்கிய கிடா ஆகிய மூன்று படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேசிய நீரோட்ட திரைப்படப்பிரிவில், விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ், ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் உள்பட 5 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் கதை அம்சம் அல்லாத திரைப்படங்களில், லிட்டில் விங்க்ஸ் என்ற தமிழ்ப்படம் உள்பட 20 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்தியன் பனோரமாவின் தேர்வுக்குழுவில் பிரபல இயக்குநரும், படத்தொகுப்பாளருமான வினோத் கனாத்ரா தலைமையில், ஒளிப்பதிவாளர் ஏ. கார்த்திக் ராஜா உள்பட 12 உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக்குழு இந்த திரைப்படங்களை தேர்வு செய்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பிக்பாஸ் தமிழ் சீசன்-6 சில தினங்களுக்கு முன்பு கோலாகலமாக தொடங்கியது.
- விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனில் தினம் தினம் ஒரு பிரச்சனைகள் வெடிக்கின்றது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, ராபர்ட் மாஸ்டர், ஷாந்தி, ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ஷிரினா, ஆயிஷா, சிவன் கணேசன், அசல், தனலட்சுமி, நிவா, குயின்சி, கதிரவன் உள்ளிட்ட 20 நபர்கள் வீட்டின் உள்ளே சென்றனர். கடந்த வாரம் நடிகை மைனா வீட்டினுள் நுழைந்தார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தினம் தோறும் ஒவ்வொரு பிரச்சனையுடன் புரோமோக்கள் வெளியாகிறது.

இந்நிலையில் 13-வது நாளான இன்று வெளியாகியிருக்கும் இரண்டாவது புரோமோவில் அசீமை அனைவரும் குற்றம்சாட்டுகின்றனர். பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் முன் சில சிவப்பு கார்டுகள் இருக்கின்றனர். இந்த கார்டுக்கு தகுதியானவர் இந்த வீட்டில் யார் என்பதை தேர்ந்தெடுங்கள் என்று தொகுப்பாளர் கமல்ஹாசன் கூறுகிறார்.

அப்போது முதலில் வந்த விக்ரமன் சிவப்பு கார்டை அசீமிற்கு கொடுத்துவிட்டு ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கண்ணியம் இருக்கு. அந்த கண்ணியத்தை அந்த மனிதருக்கு கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து என்று கூறுகிறார். தொடர்ந்து பலரும் ரெட் கார்டை அசீமிற்கு பல காரணங்களுக்காக கொடுக்கின்றனர். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது.

இதற்கு முந்தைய நாளில் விக்ரமனை அசீம் ஒருமையில் வாடா போடா என்று பேசியதன் மூலம் பிக்பாஸ் வீட்டினுள் பூகம்பம் வெடித்தது. இதன் வெளிப்பாடாகவே தற்போது வெளியாகியுள்ளது புரோமோ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Day13 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/YvXOuA716P
— Vijay Television (@vijaytelevision) October 22, 2022






