பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து?

பிக்பாஸ் தமிழ் சீசன்-6 சில தினங்களுக்கு முன்பு கோலாகலமாக தொடங்கியது.விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசன் இன்று 14 நாட்களை நெருங்கியுள்ளது.
ஜிபி முத்து
ஜிபி முத்து
Published on

பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, ராபர்ட் மாஸ்டர், ஷாந்தி, ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ஷிரினா, ஆயிஷா, சிவன் கணேசன், அசல், தனலட்சுமி, நிவா, குயின்சி, கதிரவன் உள்ளிட்ட 20 நபர்கள் வீட்டின் உள்ளே சென்றனர். கடந்த வாரம் நடிகை மைனா வீட்டினுள் நுழைந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று இன்றுடன் 14 நாட்களை நெருங்கியுள்ளது.

ஜிபி முத்து
ஜிபி முத்து

ஜிபி முத்து

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், தனது மகனைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியவில்லை எனக்கூறியும் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இவரின் இந்த திடீர் முடிவால் அவருடைய ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com